Home / இன்றைய செய்திகள் / UAE யில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா!!

UAE யில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா!!

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,901 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 79 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை 2,755 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் 135 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: