Home / செய்திகள் (page 5)

செய்திகள்

குண்டசாலையில் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள் !!

இலங்கையில் மேலும் 2 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2653 ஆக அதிகரித்துள்ளது. குறித்த இருவரும் குண்டசாலை பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளருடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1988 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது, 654 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று …

Read More »

மேலும் 3 பேருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் 3 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2649 ஆக அதிகரித்துள்ளது. ஓமான் நாட்டில் இருந்து வந்த 3 பேருக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1988 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது, 650 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் …

Read More »

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சிற்கு ஆலோசனை!!

உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்காக வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த திணைக்களத்தின் தொழிற்சங்கம் மற்றும் பிரதமருக்கு இடையில் நேற்று (13) காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவுக்கு பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் வாரத்திற்குள் உள்நாட்டு வருவாய் இலக்கை …

Read More »

கடற்படைத் தளபதி பியால் டி சில்வா அட்மிரலாக தரம் உயர்வு!!

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று (14) முதல் அட்மிரலாக ஜனாதிபதியினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படையின் 23 வது தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு ஒன்றில் நேற்று ஈடுபட்டார். இந்த சந்திப்பில் பிரதமர் கடற்படைத் தளபதியிடம் வளமான எதிர்காலத்திற்கான வாழ்த்துக்களை தெரிவித்தார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் …

Read More »

உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வாரம் !!

உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்காக வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த திணைக்களத்தின் தொழிற்சங்கம் மற்றும் பிரதமருக்கு இடையில் நேற்று (13) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவுக்கு பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய, எதிர்வரும் வாரத்திற்குள் உள்நாட்டு வருவாய் இலக்கை …

Read More »

9 கடற்படை வீரர்கள் மாத்திரமே இன்னும் வைத்தியசாலையில்!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, 898 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார். மேலும் 9 கடற்படையினர் மாத்திரமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

தேர்தலை ஒத்திவைப்பது தேவையற்ற விடயம்!!

நாட்டின் தற்போதைய நிலமை கருத்திற் கொண்டு தேர்தலை ஒத்திவைப்பது தேவையாற்ற விடயம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனி பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எங்களுக்கு எப்படியாவது தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலை ஒத்திவைப்பது எல்லா விதத்திலும் நட்டமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

ராஜாங்கனையின் சில பகுதிகளில் போக்குவரத்து தடை!!

கொரோனா தொற்றாளர்கள் சிலர் இனங்காணப்பட்ட ராஜாங்கனை 1, 3 மற்றும் 5 ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அப்பகுதியில் உள்ளவர்களின் பாதுகாப்பிற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜாங்கனை பகுதியில் இடம்பெற்ற இறந்த வீட்டின் மத நிகழ்வுகளின் போது உரியை சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றியிருந்தால் இந்நிலமை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இலங்கைக்கு!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமான மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று (13) நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மத்தள விமான நிலையத்திற்கே அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் மத்தள விமான நிலையத்தில் வைத்து பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Read More »

128 கிலோ கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா 128 கிலோவுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இன்று (13) நள்ளிரவு வட்டுக்கோட்டை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் ​போது 124 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 37 மற்றும் 40 வயதுடைய சுளிபுரம் பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்று (12) இரவு 7.10 மணியளவில் தோப்புவ பாலத்திற்கு அருகில் 4 …

Read More »

கஞ்சிபானி இம்ரான் நீதிமன்றத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!!

தற்போது பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள தன்னை தென் மாகாணத்திற்கு வெளியில் உள்ள வேறு ஏதாவது ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுமாரு சிறைச்சாலை அதிகாரிகளிக்கு உத்தரவிடுமாறு கோரி பாதாள உலக குழு தலைவரான மொஹமட் வசீம் மொஹமட் இம்ரான் எனும் கஞ்சிபானி இம்ரான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய, பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரி, அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா …

Read More »

இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அனைவரும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2631 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1981 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது, 639 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் …

Read More »

அரசாங்கம் உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்!!

தற்போதைய அரசாங்கம் உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை தொடர்பில் அனைத்து தகவர்களையும் வெளியிடுவது அரசாங்கம் மட்டுமே எனவும் இந்த தகவல்களின் உண்மை தன்மை தொடர்பில் பாரிய சிக்கல் இருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தலைமையிலான குழுவினர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்று இது தேர்தல் நடத்துவதற்கு …

Read More »

பொலிஸ் பரிசோதகர் ஒருவர் CCD யினரால் கைது!!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்தமை தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு குற்றவியல் பிரிவினரே குறித்த பொலிஸ் பரிசோதகரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்கப்படும் முறை – முழு விபரம்!!

வாக்களிப்பதற்காக கோரிக்கை விடுக்கும் எந்தவொரு நபருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் சேவை செய்யும் இடத்தில் இருந்து வாக்கு சாவடி உள்ள தூரத்தின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. 40 கிலோ மீற்றருக்கு குறைவாயின் அறை நாள் விடுமுறையும், 40 முதல் 100 கிலோ மீற்றர் இருப்பின் ஒரு நாள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 100 முதல் …

Read More »

வதந்திகளை பரப்பும் நபர்கள் CID கண்காணிப்பில் !!

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் நபர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ​போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

ஐதேக அரசாங்கத்தில் தான் நாட்டில் ஜனநாயக சூழல் ஏற்பட்டது!!

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் தான் நாட்டில் ஜனநாயக சூழல் ஏற்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நேற்றையதினம் நெடுந்தீவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகள் அனைத்திலும் ஜனநாயகமற்ற பதற்றமான சூழலில் மக்கள் வாழ்ந்து வந்த நிலை காணப்பட்டது எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் தீவுப்பகுதியில் …

Read More »

இலங்கையில் மேலும் 90 பேருக்கு கொரோனா!!

மேலும் 90 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை 76 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 14 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2605 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1981 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. …

Read More »

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா!!

இந்திய அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்களை தாண்டி பொலிஸார், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.​ை இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வைத்தியசாலை சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அமிதாப், …

Read More »

இலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா !!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,511 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, குறித்த 43 பேரில் 13 பேர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்தவர்கள் எனவும், ஏனைய 30 பேரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் …

Read More »

கொரோனா மீண்டும் பரவு இடமளிக்க மாட்டோம்!!

கொரோனா வைரஸ் மீண்டும் இந்நாட்டினுள் பரவு இடமளிக்க மாட்டோம் என பாதுகாப்பு செயலாளர் முன்னாள் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இந்த பரவலை தடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சிடம் பல்வேறு திட்டங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More »

வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட்ட பேருந்து உரிமையாளர்கள்!!

இன்று (12) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த பேருந்து வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வு வழங்கப்படவில்லை எனின் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்தார். நேற்று (11) போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read More »

ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் 4 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2468 ஆக அதிகரித்துள்ளது. ராஜாங்கனை பகுதியை சேர்ந்த நால்வரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது, 477 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் …

Read More »

அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ள சஜித்!!

MCC ஒப்பந்தத்தை கிழித்து எரியுமாறு தான் அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (11) அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவின் முன்னால் மண்டியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின் கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான விபரம்)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின் கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான விபரம்) அன்பு கலந்த வணக்கம்.. சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களின் பங்களிப்போடும், ஒத்துழைப்புடனும் புங்குடுதீவு மண்ணில் பல அபிவிருத்திக்களை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினராகிய” நாம் நிறைவேற்றியுள்ளோம் என்பது நீங்கள் அறிந்ததே. இந்த ஆண்டும் பல அபிவிருத்திகள் நடைபெற்று கொண்டிருகின்றன. இதற்கான தங்களின் பங்களிப்புகளும், ஒத்துழைப்புகளும் பெரிதும் உந்துசக்தியாக இருந்து எமது செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாகவும் இருந்து வருகின்றது. கடந்த …

Read More »

பிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு!!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 மில்லியன் பெறுமதியான மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ´கொழும்பு கார்கோ எக்ஸ்பிரஸ்´ என்ற நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான விமான அஞ்சல் பொதியில் இந்த போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அந்த அஞ்சல் பொதியில் சூட்சுமான முறையில் பொலிதீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட 5716 மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகளே இவ்வாறு கைப்பற்றப்பற்றுள்ளன. அந்த அஞ்சல் பொதி கொழும்பு புதுக்கடை பகுதியில் வசிக்கும் 35 …

Read More »

வாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்!!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று (11) முதல் ஆரம்பமாகவுள்ளன. இந்த நடவடிக்கை இன்றும், நாளையும் மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளளன. உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இந்த மாதம் 29 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. குறித்த நாளுக்கு முன்னர் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட தபால் நிலையங்களுக்கு சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையை …

Read More »

நாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு!!

நாவலப்பிட்டிய நகருக்கு இன்று (10) வருகை தந்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அத்துடன், பொதுமக்களுடன் சிநேகப்பூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார். 2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி மாவட்டந்தோறும் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதன்படி, கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் …

Read More »

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு!!

மத்திய கிழக்கில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த நிலையில் பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 100 பேர் இன்று காலை தனிமைப்படுத்தல் நிறைவு செய்யப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Read More »

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய,ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் …

Read More »

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி !!

மொரட்டுவ, லுனாவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த குறித்த நபரின் முச்சக்கரவண்டி பொலிஸார் சோதனையிட முற்பட்டபோது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு இடையூறு விளைவித்ததை தொடர்ந்து இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

மேலும் மூவருக்கு கொரோனா !!

கந்த காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் உதவியாளர்கள் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2454 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Read More »

போலியான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!!

கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Read More »

தந்தையால் முடியுமானால் மகனாலும் முடியும்!!

யார் என்ன விமர்சனம் செய்தாலும் அனைத்து குடும்பங்களுக்கும் தன்னுடைய அரசாங்கத்தின் கீழ் 20000 ரூபா வழங்குவதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பன்னல பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அன்றாட சம்பளம் பெரும் குடும்பங்களுக்கு இந்த சலுகையை வழங்குதாக அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தந்தை யுத்த காலத்திலும் சீருடை, உணவு …

Read More »

சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கவனயீனமாக முறையில் வாகனத்தை செலுத்தி நபர் ஒருவருக்கு காயம் ஏற்படுத்தியமை குற்றமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More »

ஐ.தே.கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு !!

இம்முறை பொது தேர்தலில் வெற்றி பெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையுமாறு தனித்து போயுள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (09) கேகாலை மாவட்டத்தின் தெதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீகொத்தவை கைப்பற்றும் கட்சிக்கு அல்ல அரசாங்கத்தின் அதிகாரத்தை கைப்பற்றும் கட்சிக்கு இம்முறை தேர்தலில் …

Read More »

CID யில் வாக்குமூலம் வழங்கிய பின் ரிஷாட் தெரிவித்த விடயம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடனோ வேறு எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுடனோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் துளியளவும் தொடர்பு கிடையாதென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று காலை (09) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்ட அவர், சுமார் 09 மணிநேர விசாரணையின் பின்னர், ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, புதன் கிழமை காலை (08) மன்னாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நான் ஈடுபட்டுக்கொண்டிருந்த …

Read More »

விஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன!!

திருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் என்பன தொடர்பாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சைவத்தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளன எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை சைவ மகா சபை, இலங்கைக்கு பௌத்த சமயம் கொண்டுவரப்படும் முன்னரே இங்கு சிவ வழிபாடு இருந்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் குடியேறி சிங்கள இனத்தை தோற்றுவித்த விஜயன் வருகையின் போதே திருக்கோணேச்சரம் உள்ளிட்ட பஞ்ச ஈச்சரங்கள் இங்கே இருந்ததாகவும் அங்கு சென்று …

Read More »

யாழில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று (09) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மீதே இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More »

5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்!!

“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒரு குடும்பம். கொட்டகலை என்பது எமது கோட்டை. எனவே, எந்நேரமும் அங்கே எமது மக்கள் வரலாம். என்னை சந்திக்கலாம். பிரச்சினைகள் இருந்தால் கூறலாம். ஆலோசனைகளை இருந்தால் முன்வைக்கலாம். எனக்கு ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள், 5 வருடங்களுக்குள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டுவேன” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலை, மேபீல்ட் சாமஸ் தோட்டத்தில் இன்று (09) இடம்பெற்ற பிரச்சார …

Read More »