Home / செய்திகள் (page 4)

செய்திகள்

பாராளுமன்ற பெரும்பான்மை தொடர்பில் அனுரவின் கருத்து!!

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தேவையற்ற நடவடிக்கைகளை பின்பற்றியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுக்க பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பலம் வழங்க வாக்களிப்போம் ஆனால் ஒரு பிரிவினருக்கு அதிக பலம் கிடைக்கும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

அரசியலில் ஜம்பவான்கள் தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வர முயற்சி!!

அரசியலில் ஜம்பவான்கள் என கூறிய அரசியல்வாதிகள் இம்முறை பொதுத் தேர்லில் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (19) மாலை மொனராகலை மெதகம ஆர்.எம். குணசேன மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது பிரதமர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி ரணில் – சஜித் என பிளவுப்பட்டுள்ளதன் மூலம் தோல்வியை …

Read More »

பாட்டலி உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை !!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, திலும் துசித்த குமார மற்றும் சுதத் அஸ்மடல ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 2016 ஆம் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே குறித்த மூவரையும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Read More »

இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ராஜாங்கனை பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவருடன் நெருங்கிய தொடர்பில இருந்த ஒருவரும் சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த மூவருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2728 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் …

Read More »

சஜித்துக்கும், சம்பிக்கவுக்குமிடையில் அதிகாரப்போட்டி ஆரம்பித்துவிட்டது!!

ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சியாகும். அந்த கட்சிக்யென கொள்கைகள் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். கொத்மலை நவதிஸ்பன பகுதியில் இன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது, ஐக்கிய தேசியக்கட்சிக்கென ஒரு கட்டமைப்பு இருக்கின்றது. அது எமது கலாச்சாரம், மதம். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியென்பது, அதிக …

Read More »

தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடல்!!

கொவிட் 19 தொற்று காரணமாக வெளியிடப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளின் அடிப்படையில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் அதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று ஒன்றுகூடி தேர்தல் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலுக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் …

Read More »

மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள்!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் …

Read More »

தபால்மூலம் வாக்களிக்க தவறியோருக்கு மீண்டும் சந்தர்ப்பம்!!

தபால்மூலம் வாக்களிக்க தவறியோருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பில் வாக்குகளை அளிக்காதவர்களுக்கு இன்றும் (20) நாளையும் (21) வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் ராஜாங்கனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களுக்கு அங்கு முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் சந்தர்பம் அளிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More »

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நாளை ஆஜராகுமாறு ரிஷாட்டுக்கு அழைப்பாணை!!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மீண்டும் நாளைக் காலை (20) 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர், பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையிலும், அதற்கு மாற்றமாகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. …

Read More »

ரயிலில் பாய்ந்து இளைஞன் தற்கொலை !!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இளைஞன் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தலவாக்கலை மற்றும் கொட்டக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சென்கிளையார் பகுதியில் இன்று (19) 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை சென்கிளையார் தோட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் அருள் பிரசாத் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இளைஞன் …

Read More »

ரணசிங்க பிரேமதாசவின் யுகத்தை மீண்டும் உருவாக்குவேன்!!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் யுகத்தை மீண்டும் உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கரங்களை பலப்படுத்துங்கள் எனத் தெரிவித்த என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை உண்டாக்கி அதன்மூலம் தமது அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காக முன்னெடுக்கும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம் என்றும் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் …

Read More »

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் புதிய பொலிஸ் பிரிவு !!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் ´சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு´ என்ற புதிய பொலிஸ் பிரிவு ஒன்றை எதிர்வரும் சில நாட்களுக்குள் நிறுவப்பட திட்டமிட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இன்று (19) இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வருகை தந்த இருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த இருவருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2708 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2023 பேர் பூரணமாக …

Read More »

கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை !!

இம்முறை பொதுத் தேர்தலில் தனக்கு எவ்வித அறிவிப்பும் இன்றி சில வேட்பாளர்கள் தனது தேர்தல் விளம்பரங்கள் மற்றும் கையேடுகளில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்துவதாக கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தன்னை சந்திப்பதற்கு வருகை தந்த நேரம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர்கள் இவ்வாறு தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். தான் அல்லது பேராயர் பதவி எந்த …

Read More »

சஜித் பிரேமதாச முன்வைத்துள்ள குற்றச்சாட்டு !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர்கள் தொல்பொருள் வளங்களை அழிக்கும் யுகம் இன்று உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கலாச்சாரத்தை பாதுகாப்போம் என தெரிவித்தவர்கள் இன்று தொல்பொருள் வளங்களை அளித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

1150 போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்!!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1150 போதை மாத்திரைகளை புல்மோட்டைக்கு கொண்டு சென்ற நபயொருவரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(18) உத்தரவிட்டார். வாட்டு இல 2, புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் திருகோணமலையிலிருந்து மோட்டார் சைக்கிளில் 1150 போதை மாத்திரைகளை புல்மோட்டைக்கு கொண்டு சென்ற போதே …

Read More »

கடந்த அரசாங்கத்தில் பழிவாங்கல்கள் மட்டுமே இடம்பெற்றது!!

கடந்த நான்கரை வருட காலத்திற்குள் பழிவாங்கள் மட்டுமே இடம்பெற்றதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஏதாவது அரசாங்கத்தின் ஊடாக ஒரு நல்ல காரியம் மேற்கொள்ளப்பட்டால் அதன் பின்னர் வரும் அரசாங்கம் அதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது கடமை என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் கடந்த நான்கரை வருட காலத்திற்குள் நாடு பின்னோக்கி சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

கதிர்காமம் புனித பூமிக்கு பொது மக்கள் வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!!

கொவிட் 19 தொற்று காரணமாக சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு கதிர்காம புனித பூமிக்கு பொது மக்கள் வருவது எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மொனராகலை மாவட்ட செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். ஆடி வேல் விழாவில் பெரஹர நடைபெறும் முழுமையான கால எல்லை மக்களுக்கு பார்வையிடுவதற்கோ கலந்துகொள்வதற்கோ சந்தர்ப்பம் வழங்கப்படாது எனவும் மொனராகலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். கதிர்காமம் …

Read More »

மேலும் 11 பேர் பூரண குணம்!!

இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்றையதினம் மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 2023 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை 2,697 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது, 663 பேர் …

Read More »

நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் மாயம்!!

கெபுன்கொட பிரதேசத்தில் நீராடிக் கொண்டிருந்த நான்கு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீரில் மூழ்கி மீட்கப்பட்ட மற்றுமொரு நபர் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 18 வயதுடைய மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பொலிஸார் மற்றும் கடற்படை சுழியோடிகள் இணைந்து காணாமல் போன இளைஞரை தேடி வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Read More »

மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு – 376 பேர் கைது!!

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றம் சம்பவங்களுடன் தொடர்புடைய 376 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை 6 மணி முதல் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது. இதன்போது ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த 171 பேரும், கஞ்சா வைத்திருந்த 78 பேரும், சட்டவிரோத மதுபானம் மற்றும் ஐஸ் …

Read More »

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் !!

நாடு முழுவதும், குறிப்பாக ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில், அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய …

Read More »

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் கால எல்லை நீடிப்பு!!

கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டமை குறித்து அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை அறிக்கையிடுவதில் சில சமூக ஊடகங்கள் பல்வேறு தவறான கருத்துக்கள் மற்றும் தவறான அர்த்தப்படுத்தலுடன் பிரச்சாரம் செய்யப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்திற்கு அமைவாக 2020 ஜுலை மாதம் 15 ஆம் திகதி திறன் அபிவிருத்தி தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு …

Read More »

ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள்…. !!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (17) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். பயணத்தை ஆரம்பித்து பதியதலாவைக்கு வருகை தந்த ஜனாதிபதியிடம் பிரதேச மக்கள் கேட்டுகொண்டதற்கு அமைய, பதியதலாவ நகர மத்திய வீதியை நான்கு வழிப் பாதைகளாக விரிவுப்படுத்துமாறு ஜனாதிபதி வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார். கிரமான, சேரங்கட மற்றும் மரங்கல கிராமங்களின் …

Read More »

இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கந்தகாடு மற்றும் சேனபுர புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 6 பேரும் அவர்களுடன் தொடர்பில் இருந்த இருவருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2697 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2012 பேர் …

Read More »

பஸ்களில் ஆசனத்திற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றுவதற்கு தடை!!

பஸ் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தடை செய்யப்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார். ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதை தவிர்க்குமாறு பஸ் உரிமையாளர்களுக்கும், நடத்துனர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை கருத்திற் கொள்ளாமல் சில தனியார் பஸ்கள் தொடர்ந்தும் அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதாக முறையிடப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுமாறு …

Read More »

இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2689 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2012 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது, …

Read More »

மின்சார பட்டியலில் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை !!

மக்களுக்கு மின்சார பட்டியலில் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கு மின்சார கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யட்டியன்தொட பிரதேசத்தில் நேற்று (16) நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கமைய மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான பட்டியல்களின் தொகை பெப்ரவரி மாத பட்டியலின் கட்டணத் தொகையை விட …

Read More »

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் எவ்வாறு வாக்களிப்பது?

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்க பிரிதொரு வாக்களிப்பு முறையை கையாள எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். “BIG Focus” நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை பொதுவான வாக்களிப்பு நிலையத்திற்கு அழைத்து வர முடியாது எனவும் கூறினார். அவர்களுக்காக பிரிதொரு வாக்களிப்பு நிலையத்தை ஸ்தாபிக்க எண்ணியுள்ளதாக தெரிவித்த அவர், “ராஜாங்கனையில் இரு பிரத்தியேக …

Read More »

இதுவரை 2007 பேர் பூரணமாக குணம்!!

இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்றையதினம் மேலும் 6 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 2007 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை 2,674 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது, 656 பேர் …

Read More »

காணாமல் போன யாழ் பல்கலைகழக மாணவர்கள் கண்டுபிடிப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை மாணவர்கள் 9 பேர் நேற்றைய தினம் (15) நண்பகல் வேளையில் உடையார்கட்டு வனப்பகுதிக்கு சென்ற நிலையில் அங்கு அவர்கள் காணாமல் போயிருந்தனர் அதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் இராணுவத்தினர் பொலிசார் வனவள திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய தேடுதலின் போது அவர்கள் முத்தையன்கட்டு கொய்யாகுளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்கள் எதற்காக …

Read More »

மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் !!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் …

Read More »

கொவிட் 19 நோய்த் தொற்று – ஜனாதிபதி உறுதியளிப்பு!!

கொவிட் 19 நோய்த் தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை அவ்வப்போது நாட்டில் எழக்கூடிய நோய்த் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கொவிட் நோய்த் தொற்று பரவலுடன் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு முன்னர் அதனை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் மிகவும் வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்ததனை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். ´இதன்போது பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. …

Read More »

தற்போதைய சூழ்நிலை குறித்து அனில் ஜாசிங்கவின் கருத்து!!

கொவிட் 19 தொற்றுடன் சிலர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ராஜாங்கனை பகுதியின் 1 ஆம், 3 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளில் வாழும் 12,000 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரை 532 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை நாட்டின் தற்போதைய நிலைமையில் ஊரடங்குச்சட்டத்தை …

Read More »

ஜப்பான், கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி!!

ஜப்பான் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தொழில்வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கண்டி குற்றத் தடுப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர் நேற்று (14) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் நாட்டில் உள்ள பிரசித்திப்பெற்ற விகாரைகளில் உள்ள தேரர்களையும் பிரபலமானவர்களின் பெயர்களையும் பயன்படுத்தி …

Read More »

சிறுபோக நெல் கொள்வனவிற்கு திறைசேரி நிதி விடுவிப்பு!!

ஓரு கிலோ கிராமிற்கு 50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் 2020 சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியினால் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 சிறுபோகத்தில் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்யும் பணியை தற்பொழுது …

Read More »

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று (ஜூலை 15ஆம் திகதி) மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் …

Read More »

அரசாங்கம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

கொவிட் 19 தற்போதைய நிலைமை தொடர்பில் உண்மைக்குப் புறம்பான மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சிறு விளம்பரங்களில் ஏமாறாமல் இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் புரிந்துணர்வுடன் செயல்படுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: ஊடக அறிக்கை கந்தகாடு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தை கேந்திரமாகக்கொண்டு நாட்டிற்குள் கொவி;ட் 19 நோயாளர்கள் பதிவாவது ஆரம்பமானதைத் தொடர்ந்து …

Read More »

நிறுவனங்களில் சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவது பிரதானிகளின் பொறுப்பு!

கொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கொவிட் – 19 தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் வரை சமூக ரீதியாக வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் அதற்கு ஒரு உதாரணமாகும். அதனால் சமுதாய ரீதியாக இலகுவாக செய்யக்கூடிய பரிசோதனைகளை …

Read More »

குண்டசாலையில் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள் !!

இலங்கையில் மேலும் 2 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2653 ஆக அதிகரித்துள்ளது. குறித்த இருவரும் குண்டசாலை பிரதேசத்தில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளருடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1988 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது, 654 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று …

Read More »