Home / செய்திகள் (page 30)

செய்திகள்

நான் “டீலர்” இல்லை நான் ஒரு “லீடர்”!!

சின்னத்தை மாத்திரம் கண்டு, கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள், மலையக மக்கள் எனக்கூறி அந்த மக்களை அவமானப்படுத்த வேண்டாம். கடந்த காலங்களில் அவர்கள், யானை, பூனை, அன்னம், வெற்றிலை, வேப்பிலை, ஏணி என எத்தனையோ சின்னங்களுக்கு சிந்தித்து வாக்களித்துள்ளனர். பல சந்தர்ப்பங்களில் நகர மக்களை விட அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். சிலருக்கு யானை சின்னம் வேண்டும் என்பதற்காக மலையக மக்களை இதில் இழுக்க முயல்கிறார்கள். மலையகத்தோர் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கும் மக்கள் …

Read More »

தென் கொரியாவில் இருந்து வருகை தரும் அனைத்து பயணிகளும் சோதனைக்கு !!!

தென் கொரியாவில் இருந்து வருகை தரும் அனைத்து பயணிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொரோனா வைரஸ் தொடர்பில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி!!

ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை 190 ரூபாவாக அறிக்கப்பட்ட நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மெனிங் சந்தையில் பிரதான வர்த்தக சங்கத்தின் பிரதான அமைப்பாளர் அனில் இந்திரஜித் இதனை தெரிவித்தார். அதன்படி இன்றைய தினம் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 170 ரூபாவாக காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு …

Read More »

பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு !

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்தியமாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவுமாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல்மாகாணங்களிலும் காலி மற்றும்மாத்தறைமாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. பதுளை, மாத்தளை மற்றும் நுவரெலியாமாவட்டங்களில்சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு …

Read More »

குடிநீர் விநியோக வரையறையை அறிந்து கொள்ள குறுஞ்செய்தி முறை!!

வரட்சி காலநிலையின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேச நீர் மற்றும் குடிநீர் வளப்பகுதி குறைவடைந்து வருகின்றது. இதனால் குடிநீர் விநியோகத்தை வரையறுப்பதற்கான அவசியம் ஏற்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அடிக்கடி ஏற்படும் நீர் விநியோக வரையறை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் தமது நீர் கட்டண பற்றுச்சிட்டு இலக்கத்தை 071-9399999 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம் பதிவு …

Read More »

சஜித் என்னிடம் கூறியது இதுதான் – ரிஷாத் தெரிவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தாம் அமைத்துள்ள கூட்டமைப்பில் போட்டியிடாமல் தனித்துப் போட்டியிடுமாறு, சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக சில ஊடகங்கள் வேண்டுமென்றே செய்திகளை பரப்பி வருவதாகவும், இது அப்பட்டமான பொய்யாகும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்தார். இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லிம் மக்களை நேற்று (22) சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு …

Read More »

பொதுமன்னிப்பு காலத்தில் 200 ஆயுதங்கள் ஒப்படைப்பு!!

அண்மையில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில், சட்டரீதியிலான அனுமதிப்பத்திரம் இல்லாத அல்லது அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாத சுமார் 200 ஆயுதங்கள், ஒன்பது மாகாணங்களிளும் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் ஆயுதங்களை புதுப்பிப்பது தொடர்பாக முறையான நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்கான தேவையினை இது உணர்த்துகிறது. ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு அதற்கான அனுமதிப் பத்திரம் அல்லது புதுப்பித்தல்களை பெறுவதற்காக சந்தர்ப்பம் அவர்கள் ஆயுதங்களை பொலிஸிடம் ஒப்படைத்த நாளில் இருந்து மூன்று மாதங்கள் வழங்கப்படவுள்ளது. ஆயுதங்களுக்கான …

Read More »

ஹம்பாந்தோட்டை – கோட்டை அதிவேக வீதி பஸ் சேவை நாளை முதல்!!

அதிவேக வீதியின் ஊடாக ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு வரையான பேருந்து சேவை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, ஹம்பாந்தோட்டையில் இருந்து கோட்டை வரையான பேருந்து கண்டனம் 880 ரூபாய் ஆகும். தங்காலையில் இருந்து கொழும்பு வரையான பேருந்து கட்டணம் 680 ரூபாய் ஆகும். ஹம்பாந்தோட்டையில் இருந்து மாகும்புர வரையான பேருந்து கட்டணம் 810 ரூபாய் ஆகும். அதேபோல், தங்காலையில் இருந்து அதிவேக வீதியின் ஊடாக மாகும்புர வரையான பேருந்து கட்டணம் …

Read More »

மட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி எப்’ அறிமுகம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் வகையிலான வலையமைப்பு மென்பொருள் (APP) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கு (Vision for Batticaloa 2030) என்னும் அமைப்பின் அனுசரணையுடன் மயூ சைபர் சொலுஷன் தகவல் தொழில்நுட்பட நிறுவனத்தினால் இந்த ´சவாரி´ என்னும் பெயரில் மென்பொருள் அப் உருவாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் உல்லாசப்பிரயாணிகளின் வருகை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தவும் அவர்களுக்கான …

Read More »

மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கொண்ட முயற்சியை எதிர்க்கட்சி தடுத்ததாக பிரதமர் தெரிவிப்பு!!

எதிர்வரும் புதுவருட காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியை எதிர்க்கட்சி தடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் வருடாந்த மாநாடு கண்டியில் நேற்று (21) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறினார். கிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பு தற்போது தயாரிக்கப்படுவதாகவும் குறுகிய காலத்திற்குள் அதனை சட்டமாக்கிக் கொள்ள முடியும் என பிரதமர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

Read More »

எத்தகைய பிரச்சினைகளையும் கையாளக்கூடிய வல்லமை சமகால அரசாங்கத்துக்கு உள்ளது!!

எதிர்த் தரப்பினர் எத்தகைய சிக்கல் நிலையை ஏற்படுத்திய போதிலும் நிதி விடயத்தில் அரசாங்கம் எத்தகைய சவால்களையும் வெற்றிகரமக எதிர்கொண்டு நாட்டு மக்களின் நலனுக்கான நிதி தொடர்பான பிரச்சினைகளை கையாளக்கூடிய வல்லமை சமகால அரசாங்கத்துக்கு இருப்பதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். பொதுத்தேர்தலுக்கு பின்னர் வரவுசெலவுத்திட்டம் ஒன்றை புதிய அரசாங்கம் சமர்ப்பித்து முன்னைய அரசாங்கம் செலுத்த வேண்டிய ஒப்பந்த காரர்களுக்கான நிலுவையை செலுத்தி அரசாங்கம் நாட்டை முன்னெடுத்து …

Read More »

தெற்கு அதிவேக வீதியின் மேலும் பல கட்டங்கள் நாளை திறப்பு!!

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறையில் இருந்து வரவ-கும்புக வரையிலான முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்கள் நாளை பொதுமக்களிடம் கையளிக்கப்படுகிறது. இது தொடர்பான நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. அத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு செல்லும் அதிவேக வீதியும் அமைக்கப்படவுள்ளது.

Read More »

மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பு!!

பலவந்தமாக காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரால் தகவல் திரட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளதை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுக்கின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல் பலவந்தமாக காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு” ஆரம்ப நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

இலங்கையின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான புங்குடுதீவு இறுப்பிட்டி கல்லடி அம்மன் கோவிலுக்கு வடக்கு பக்கத்தில் அமைந்துள்ள, “புங்குடுதீவு பெருக்குமரம்” பல உல்லாசப் பிரயாணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ள போதிலும், அரசின் எந்தவொரு அமைப்பும் அதனைப் புனரமைக்காமல், முட்புதர்கள் அடங்கிய பற்றைக்காடாக இருப்பதினால், இதனைப் புனரமைத்து உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் புனரமைக்க வேண்டுமென, சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் சார்பில், சிலர் நீண்டகாலமாக “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” …

Read More »

ஜூன் 30 ஆம் திகதி வரை விமான போக்குவரத்து தடை !!

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலிகளை வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் சீனாவுடனான விமான தொடர்பை ரத்து செய்துள்ளன. அந்தவகையில் இந்தியாவும் சீனாவுக்கு செல்லும் பல விமானங்களை ரத்து செய்து உள்ளது. குறிப்பாக மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் டெல்லி – ஷாங்காய் இடையிலான 6 வாராந்திர விமானங்களை கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் கடந்த 14 …

Read More »

இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொலை !!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக் (வயது 20). பஷர் பராகா ஜாக்சன் என்ற இயற்பெயரை கொண்ட இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. பாப் ஸ்மோக் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள மேற்கு ஹாலிவுட் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாப் ஸ்மோக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது கொள்ளை கும்பல் புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாப் ஸ்மோக் கொள்ளை கும்பலை …

Read More »

சிறுநீரக சுத்திகரிப்பு வசதிகளுடன் பொலிஸ் வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படும் !!

சிறுநீரக சுத்திகரிப்பு வசதிகளுடன் பொலிஸ் வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படும் – பாதுகாப்பு அமைச்சு நாரஹன்பிட்டவில் அமைந்துள்ள பொலிஸ் மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவிய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பாதுகாப்பு அமைச்சு முன்வந்துள்ளது. இதற்கமைய பொலிஸ் வைத்தியசாலையில் சிறுநீரக சுத்திகரிப்பு (டயலிசிஸ்) வசதிகள், அவசியமான மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார சிற்றூழியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றுக்கான தீர்வுகளை பாதுகாப்பு அமைச்சு பெற்றுக் கொடுக்கவுள்ளது. பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன நேற்றய …

Read More »

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது!!

மாத்தறை, தெவிநுவர பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து 55 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் மற்றைய சந்தேகநபரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 34 வயதுடைய பெண் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்தவர் …

Read More »

கணித பாட அடைவு மட்டத்தை மேம்படுத்த திட்டம்!!

கல்விப் பொது சாதாரண தர பரீட்சையில் கணித பாட அடைவு மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட 500 பாடசாலைகளில் கணித பாட கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொடர் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 1 முதல் 11 வகுப்பு வரையான மாணவர்களின் கணித பாட வளர்ச்சி மட்டத்தை அதிகரித்தல் மற்றும் 1-5 மற்றும் 6-11 வகுப்புகளுக்கான கணித ஆசிரியர்களின் திறன்களை அதிகரிக்கும் நோக்குடன் குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப் …

Read More »

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி!!

இந்து சமய பக்தர்கள் விரதமிருந்து அனுஷ்டிக்கும் மஹா சிவராத்திரி தின விரத நிகழ்வில் இலங்கை வாழ் இந்து மக்களுடன் தானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: உலகெங்கும் வாழும் இந்து சமய பக்தர்கள் விரதமிருந்து மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி தின கொண்டாட்டத்தில் இலங்கை …

Read More »

எச்சரிக்கை – மின்னல் தாக்கத்திலிருந்து அவதானமாக இருக்கவும்!!

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. பதுளை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில …

Read More »

எச்சரிக்கை – கடும் வெப்பம் – அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தல்!!

தற்பொழுது நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக வயதானவர்கள் நாள் ஒன்றுக்கு 6 லீற்றர் இற்கு மேற்பட்ட நீரை பருக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக நோய் தொடர்பான தேசிய ஆய்வுக்குழுவின் அங்கத்தவரான பேராசிரியர் சந்தன ஜெயசுமண இது தொடர்பாக தெரிவிக்கையில், போதுமான அளவு நீரைப்பருகாத சந்தர்ப்பத்தில் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாக கூடும் என்று அவர் தெரிவித்தார். காலை 10 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை முடிந்தளவு ஓய்வாக இருக்குமாறும், …

Read More »

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சோபித ராஜகருணா நியமனம்!!

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சோபித ராஜகருணாவை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சோபித ராஜகருணாவை நியமிப்பதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபை இன்று வழங்கியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஏ.எச்.எம்.டி நவாஸ் நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

வட மாகாணத்தில் சிவில் பணி ஒப்பந்த பொதியை வழங்க அமைச்சரவை அனுமதி!!

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் சிவில் பணி ஒப்பந்த பொதியை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இது குறித்த அமைச்சரவையின் தீர்மானம் பின்வருமாறு, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி …

Read More »

சமலுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!!

அமைச்சர் சமல் ராஜபக்ஷவை கொலை செய்வதாக அமைச்சரின் கைப்பேசிக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பிய நபர் ஒருவர் ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று குறித்த நபர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ய உள்ளதாக அமைச்சருக்கு அனுப்பப்பட்ட குறித்த குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதன்போது சந்தேகநபர் ராஜகிரிய பிரதேசத்தில் …

Read More »

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 12 சந்தேக நபர்கள் கைது!!

சட்டவிரோமான முறையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் 12 பேர் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (20) இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். நாவலபிட்டி பகுதியில் மாத்திரம் 500 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாகவும் இதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விஷேட சோதனை நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார். அதற்கமைய இராஜாங்க …

Read More »

மாத்தறையில் நபரொருவர் படுகொலை!!

மாத்தறை, பொல்ஹேன அலுத் மாவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு நீண்டதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், கொலை …

Read More »

அணு ஆயுதப் போர் மூண்டால் 12½ கோடி பேர் பலியாகும் ஆபத்து !!

கா‌‌ஷ்மீரில் உள்ள புல்வாமாவில், விடுமுறை முடிந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் திகதி பணிக்கு திரும்பிக் கொண்டிருந்த துணை இராணுவத்தினரின் வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தினர். ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மனித வெடிகுண்டைக்கொண்டு நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற ஜெய்‌‌ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்த தாக்குதல், நாடு முழுவதும் மிகுந்த கொந்தளிப்பை …

Read More »

இந்த ஆண்டு 2 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம்!!

இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை மத்திய அரசு ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் அழைத்து சென்று வருகிறது. இதுகுறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது, இந்த ஆண்டில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சுமார் 2 இலட்சத்து 67 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 2 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு …

Read More »

வில்பத்து காடழிப்பு சம்பந்தமான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!!

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முதலில் நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஜனத் த சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று (19) குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் …

Read More »

ஶ்ரீலங்கன் CEO மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்!!

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் …

Read More »

180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் !!

அரச நிறுவனங்களில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் இணைத்துக் கொண்டு, 180 நாட்களுக்கு அதிகமான சேவைக் காலத்தினை பூர்த்தி செய்துள்ள பணியாளர்களுக்கு நிரந்தர நியமனத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த பணியாளர்களுக்கு அலுவலக ஊழியர் மற்றும் ஒன்றிணைந்த சாரதி சேவையில் நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சின் ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆலோக …

Read More »

30/1 தீர்மானத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த 30/1 தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதி லுதினன் ஜெனரால் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவிற்கு பிரவேசிக்க தடை விதிக்க அந்நாட்டு வெளியுறவுத் திணைக்களம் எடுத்த தீர்மானத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தி பிரதமர் வௌியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் …

Read More »

கள்ளத் காதல் காரணமாக தாய் கொலை !!

லுணுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலேகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். லுணுகல, கிவுலேகம பகுதியை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மற்றுமொரு பெண் காயங்களுக்கு உள்ளதாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கள்ள காதல் சம்பவம் தொடர்பில் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் 53 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …

Read More »

நுவரெலியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிசுக்கள் – பொலிஸார் தீவிர விசாரணை!!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுவரெலியா நேஸ்பி தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலையில் இருந்து இறந்த நிலையில் 2 பெண் சிசுக்களின் சடலங்களை நுவரெலியா பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றதாகவும் நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த தோட்ட தேயிலை மலையில் வீசி எறியப்பட்ட குறித்த சிசுக்கள் தொடர்பில் பொதுமக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்று, சிசுக்களின் சடலங்களை …

Read More »

சிங்கப்பூரில் சிறந்த வீட்டுப் பணியாளராக இலங்கைப் பெண் தெரிவு!!

சிங்கப்பூரில் வீட்டு பணியாளர் சேவையாளராக பணியாற்றும் இலங்கைப் பெண்ணான பி.ஜசிந்தா இந்த ஆண்டின் சிறந்த வீட்டுப் பணியாளருக்கான விருதைப் பெற்றுள்ளார். அந்த நாட்டின் தொழில் பிரதிநிதிகள் சங்கத்தின் மூலம் இவருக்கு இந்த விருதும் 2000 சிங்கப்பூர் டொலர்களும் பரிசாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் …

Read More »

வன்னி மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்!!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நெல் கொள்வனவு நடவடிக்கை வெற்றிகரமாக நாடு முழுவதும் இடம்பெற்று வருவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இது தொடர்பாக தெரிவிக்கையில் நெல் சந்தைப்படுத்தம் சபையயினால் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் வரையில் 5,217 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு …

Read More »

844 அரச நிறுவனங்களின் 2018 ஆம் நிதியாண்டுக்கான COPE குழுவின் அறிக்கை பாராளுமன்றத்துக்கு!!

அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவங்கள் 844 இன் 2018 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையை அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். குறித்த அறிக்கை 800 பக்கங்களைவிட அதிகமானதாகும். அரச நிறுவனங்களின் பொது கணக்குகளை பராமரிக்கும் முறைமை, நிதிக் கட்டுப்பாடு மற்றும் செயல்திறன் என்பன கணினிமயப்படுத்தப்பட்ட முறையில் வருடாந்தம் மதிப்பீடு செய்யப்படுவதுடன், அதற்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை …

Read More »

சாய்ந்தமருது அடிப்படை உரிமை மனு நிறைவு!!

சாய்ந்தமருது தொகுதியை பிரதேச சபையாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு 2017 ஆம் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவடைந்துள்ளது. குறித்த பிரதேசம் நகர சபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த மொஹமட் அலியார் மற்றும் மொஹமட் …

Read More »