Home / செய்திகள் (page 3)

செய்திகள்

வரி ரத்துக்கு பிறகும் இலங்கையில் விலை குறையாத தங்கம்!!

இலங்கையில் தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 15 சதவீத வரி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் நன்மைகளை நுகர்வோருக்கு தற்போதைய சூழ்நிலையில் வழங்க இயலவில்லை என்று அகில இலங்கை தங்க நகை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை தங்க நகை வர்த்தக சங்கத்தின் பொருளாளர் இரா. பாலசுப்ரமணியம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் தங்கத்தின் விலையேற்றம் மற்றும் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பிலான முறையான திட்டம் இல்லாதது உள்ளிட்ட சில …

Read More »

கோப் குழு உறுப்பினராக சாணக்கியன் நியமனம்!!

9 ஆவது பாராளுமன்றின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 22 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று (11) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவால் இது குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, சுனில் பிரேமஜயந்த, ஜயந்த சமரவீர, திலும் அமுனுகம, இந்திக அனுருத்த, சரத் வீரசேகர, டி.வி. சானக்க, நாலக கொடஹெவா, அஜித் …

Read More »

அமரர் ஆறுமுகம் குறித்து அமைச்சர் டக்ளஸ் பாராளுமன்றில் தெரிவித்த கருத்துகள்…!!

கருத்தாழம் மிக்க சிந்தனையாளராகவும் சிறந்த நகைச்சுவை உணர்வாளராகவும் விளங்கிய ஆறுமுகம் தொண்டமான் மூலமாக இன்றும் அதிகளவான சேவைகளை எதிர்பார்த்திருந்த மலையக மக்களுக்கு அவரின் அவரின் இழப்பு பேரிழப்பாக அமைந்துள்ளது என்று அமைச்சர் டகளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று(11) இடம்பெற்ற அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 1994 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தின் …

Read More »

நாட்டின் மருந்து தேவையின் 50% வீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம் !!

எதிர்வரும் 3 வருட காலப்பகுதியில் நாட்டின் மருந்து தேவையில் 50% வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொள்வதும் மக்களுக்கு தேவையான தரம் வாய்ந்த மருந்து பொருட்களை கட்டுப்படியான விலையில் வழங்குவதும் இதன் நோக்கமாகும். உலக சுகாதார தாபனத்தின் பரிந்துரை மற்றும் நியமங்களுக்கு ஏற்ற வகையில் அனைத்து உற்பத்திகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. நாட்டின் மருந்து தேவையில் 85% வீதம் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது. இதற்காக வருடாந்தம் …

Read More »

மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்த பிரதமர் ஆலோசனை!!

பாடசாலை மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துவதற்கு தினமும் ஒரு முட்டையை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) தெரிவித்துள்ளார். பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தினர் மற்றும் முட்டை உற்பத்தியாளர்களின் சங்கத்தினர் ஆகியோரை விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார். பேக்கரி உற்பத்திகளில் முட்டை விலை தாக்கம் செலுத்தும் விதம் குறித்து பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தினர் பிரதமருக்கு தெளிவுபடுத்தியதுடன், முட்டை …

Read More »

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கப்படும்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து இராஜாங்க அமைச்சர்களுடன் நேற்று (10) ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கும் சமூக மேம்பாட்டிற்கும் காரணமாக அமையக்கூடிய பல தீர்மானங்களை எடுத்தார். நாட்டில் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிப்பது அதில் ஒன்றாகும். தற்போதுள்ள சில தேசிய பாடசாலைகள் பெயரளவிலேயே காணப்படுகின்றது. தேவையான வசதிகள் எதுவும் அவற்றில் இல்லை. அவ்வாறான பாடசாலைகளும் உடனடியாக அபிவிருத்தி செய்யப்படும். பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்காக மாவட்ட …

Read More »

MT New Diamond கப்பலின் உறுப்பினர்களிடம் வாக்கு மூலங்களை பெறுமாறு உத்தரவு !!

MT New Diamond கப்பலில் உள்ளே காணப்படும் எண்ணெய் மாதிரியை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் MT New Diamond கப்பலின் பிரதானி உள்ளிட்ட 23 உறுப்பினர்களிடம் இருந்தும் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் எண்ணெய் மாதிரியை பெற்றுக் கொள்ளுமாறு கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கும், உறுப்பினர்களிடம் இருந்தும் வாக்குமூலங்களை குற்றப் புலனாய்வு …

Read More »

மஹர சிறைச்சாலைக்குள் பறந்துவந்த தொலைபேசிகள் !!

மஹர சிறைச்சாலையின் மதிலுக்கு மேலால் வீசி செல்லப்பட்ட நான்கு தொலைபேசிகள் மற்றும் புகையிலை பொதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை பாதாள உலகக் குழு உறுப்பினராக கருதப்படும் ரத்கம விதுர எனும் நபருடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிக்கடுவ பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து ரி 56 வகை இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு!!

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தபட உள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை இரவு 10 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் கொழும்பு 9, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Read More »

இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள்!!

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து வந்த 2 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,162 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் மேலும் 14 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (11) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் கொரோனா …

Read More »

வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் மலையகத்தவர்கள் – பாராளுமன்றில் முழங்கிய குரல்!!!

தோட்ட தொழிலில் இருந்து இடைவிலகி வெளிநாடுகளுக்கு தொழில் பெற்று செல்லும் மலையகத்தவர்கள் மீண்டும் நாடு திரும்பியவுடன் அவர்கள் அதே தொழிலில் ஈடுபட சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (10) இடம் பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். பணியில் இருந்து இடைவிலகி வெளிநாடு செல்லும் …

Read More »

அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவர்!!

இந்திய மீனவர்கள் ட்ரோலர் படகுகளில் மன்னார் கடல் பிரதேசத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன் வளங்களை அழிப்பது தொடர்பில் மன்னார் மீனவர்கள் மூலம் அறிந்து கொண்டேன் என்று பாராளுமன்றத்தில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். கடந்த 02 தினங்களுக்கு முன்பு நான் மன்னார் பிரதேசத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது இந்திய மீனவர்களின் ட்ரோலர் படகுகளில் அப் பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன் வளங்களை அழிப்பது தொடர்பில் மன்னார் மீனவர்கள் மூலம் …

Read More »

புதிதாக 6 தூதுவர்கள் – இந்திய உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட!!

6 நாடுகளுக்கான இராஜதந்திரிகளை நியமிப்பது தொடர்பில் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. குறித்த பதவிக்காக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் தகுதிகள் பரிசோதனை செய்யப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஆப்கானிஸ்தானிற்கான இலங்கை தூதவராக ஓய்வு பெற்ற அத்மிரல் கே.கே.வீ.பீ ஹரிச்சந்திர த சில்வாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானுக்காக இலங்கை தூதவராக சஞ்சீவ குணசேகரவின் பெயரும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதவராக ரவிநாத் ஆரியசிங்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸிற்கான இலங்கை …

Read More »

இன்றும் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு !!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ …

Read More »

கடன் வழங்குவதில் தளர்வான கொள்கைகளை கடைப்பிடியுங்கள் !!

பல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். நிதி அமைச்சில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். கடனை மீளச் செலுத்துவதற்கு முடியாத மற்றும் புதிதாக கடன் பெறுவதற்கு வரும் பொதுமக்களை வங்கி …

Read More »

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம்!!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சேதமடைந்த வீடுகளை திருத்தியமைக்க 14 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மாவட்ட செயலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மீண்டும் தாழிறக்கம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளுக்கு மழை பெய்து வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளன. இந்நிலையில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை 66 மைல் கல்லுக்கு அருகாமையில் உள்ள வீதியின் ஒரு பகுதி மீண்டும் தாழிறக்கத்திற்குட்பட்டுள்ளது. இவ்விடம் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் தாழிறங்கியிருந்தது . எனினும் உரிய முறையில் …

Read More »

இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!!

இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சௌதி அரேபியாவில் இருந்து வருகை தந்த 5 பேரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளனானவர்களின் எண்ணிக்கை 3147 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் …

Read More »

காடழிப்பு தொடர்பில் அறிவிக்க விஷேட இலக்கம் !!

வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகளை வழங்குவதற்காக 1992 என்ற விஷேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் காட்டிற்கு தீ வைத்தல், காடழித்தல், வேட்டையாடுதல் மற்றும் பொறி வைத்தல் போன்றவை தொடர்பில் இதனூடாக அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இலக்கம் 24 மணித்தியாலங்களும் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

அட்டுளுகம கஞ்சா விவகாரம் – 4 பேர் கைது!!

3 பெண்கள் உட்பட 4 பேர் அட்டுளுகம சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. பண்டாரகம, அட்டுளுகம , மாராவ பிரதேசத்திற்கு போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் …

Read More »

கொரோனா தொற்றாளர்கள் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு!!

இலங்கையில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (09) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,946 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 182 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை 3,140 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

“MT New Diamond“ கப்பல் வௌியேற்றப்பட்டமை குறித்து சட்டமா அதிபர் அவதானம்!!

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அறிவித்தலின் பிரகாரம் தீ விபத்துக்குள்ளான “MT New Diamond“ எரிபொருள் கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து வௌியேற்றுவதற்கான முடிவை எட்ட வேண்டிய அவசர தேவை குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவோரா அவதானம் செலுத்தியுள்ளார். சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

Read More »

வவுனியா நொச்சிமோட்டையில் குளவி கொட்டுக்கு இலக்காகிய குடும்பம் : சிறுமி பலி!!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சை பலனின்றி 3வயது சிறுமி மரணமடைந்துள்ளார். நொச்சிமோட்டையில் உள்ள அவர்களது விவசாய காணியில் இன்று (08.09.2020) மதியம் 12.30 மணியளவில் குளவி கொட்டுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது. விவசாய காணியினை சுத்தம் செய்வதாக ஒரே குடும்பத்தினை சேர்ந்த தாய் , இரு குழந்தைகளுடன் அவரின் மகளும் சென்றுள்ளனர். காணியில் இருந்த மரம் …

Read More »

சற்றுமுன் இலங்கையில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!!

இலங்கையில் மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்து வந்த 05 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளனானவர்களின் எண்ணிக்கை 3131 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் மேலும் 09 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2935 …

Read More »

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பு!!

மேல், சப்ரகமுவ, மத்தியமற்றும்வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும், குறிப்பாக ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் …

Read More »

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி!!

மரண தண்டனை வழங்கப்பட்டு பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணியால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பு இன்றுஅறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் குறித்த மனு இன்று …

Read More »

ஆயுதங்களுடன் பத்தேகம பிரேதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது!!

பத்தேகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி, மெகசின் ஒன்று, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் மற்றும் கைக்குண்டு ஒன்றை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

Read More »

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகாரம்!!

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் தலைமை மிகவும் முக்கியமானதாக அமைந்ததாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமரர் சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு நினைவு விழாவில் கலந்து கொண்டு தெரிவித்தார். மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடு என்ற வகையில் இலங்கைக்கு உலக மத்தியில் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள கூடியதாக அமைந்ததாகவும், …

Read More »

கொரோனாவில் இருந்து மேலும் ஒருவர் பூரண குணம்!!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீட்டிற்கு இன்று (07) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,926 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 185 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை 3,123 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

மசூதியொன்றில் இடம்பெற்ற பயங்கரம்! – 16 பேர் பலி!!

பங்காளதேஷில் மதவழிபாட்டு தளத்தில் இருந்த ஏ.சி.க்கு செல்லும் கியாஸ் குழாய் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். பங்காளதேஷ் தலைநகர் டாக்காவில் நரயங்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு மசூதி உள்ளது. இந்த மசூதியில் நேற்று (04) வழக்கம் போல மதவழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். வழிபாட்டு நிகழ்ச்சியின் போது மசூதியின் ஜன்னல், கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அப்போது அந்த மசூதியில் அமைக்கப்பட்டிருந்த ஏ.சி.களுக்கு (ஏர் …

Read More »

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளின் முழு விவரம் இதோ..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது. எங்கே விளையாடுகிறது என்ற முழு விவரம் வௌியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19- ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று (06) மாலை வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நவம்பர் 3-ஆம் திகதி வரை லீக் …

Read More »

இலங்கை வந்த விசேட நிபுணர்கள் குழு!!

அம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.டி நியூ ட​யமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். இதேவேளை, கப்பலில் இருந்து எண்ணை கசிவு ஏற்பட்டால் அதனை தடுக்கும் வகையில் இந்திய கடற்பாதுகாப்பு திணைக்களத்தின் 20 பொறியியலாளர்கள் அந்த பகுதிக்கு வருகைத் தந்துள்ளனர். மேலும் இவ்வாறு மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வருகை தந்த நிபுணர்கள் …

Read More »

150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனினும்மேல், சப்ரகமுவ மற்றும்மத்தியமாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. நாளை …

Read More »

பொலிஸ் சேவை விரைவில் மறுசீரமைப்பு!!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் சேவையை மறுசீரமைப்பதற்கு குறித்த பரிந்துரைகளை அமைச்சு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும், உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தமது சொந்த கருத்துக்களை வழங்குமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், பொலிஸ் சேவையை மேலும் வினைத்திரன் கொண்டதாக மாற்றி …

Read More »

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் …

Read More »

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!!

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சவீவபுரத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் தலைமையக பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 4 கிராம் 500 மில்லி கிராம …

Read More »

வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை.!! நாட்டின் வானிலையில் திடீர் மாற்றம்!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் …

Read More »

புதிய 10 பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை!!

தற்போது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10 பல்கலைக்கழகங்களை புதிதாக அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். சமூகத்தில் கௌரவமாக வாழ்வதற்குத் தேவையான சூழல் அனைத்து பட்டதாரிகளுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமான வகையில் பாடவிதானங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும், …

Read More »

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலைக்கு அழுகிய பழங்கள் – இலஞ்சம் பெற்ற அதிகாரி கைது!!

60,000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை விநியோக பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடுவல பகுதியைச் சேர்ந்த அஞ்சன மாலிங்க எனும் நபர் ஊழல் ஒழிப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தார். இதன்போது நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த ஊழல் ஒழிப்பு பிரிவினர், பாராளுமன்ற சிற்றுண்டிச் சாலைக்கு வினியோகஸ்தர் ஒருவரினால் …

Read More »

மின்சார தாக்குதலுக்கு உள்ளான 5 விமான படை வீரர்கள் !!

திருகோணமலை – சீனக்குடா விமான படை முகாமில் மின்சாரம் தாக்கிய நிலையில் ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சீனக்குடா விமான படை முகாமில் நிகழ்வொன்று இடம்பெற உள்ளதாகவும் இந்த நிகழ்வின் ஏற்பாடுகளுக்காக இவர்கள் ஏணியை எடுத்துச் சென்றபோது மின்சாரம் தாக்கியதாகவும் இதனையடுத்து ஐந்து விமான படை வீரர்களையும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் சீனக்குடா …

Read More »