Home / செய்திகள் (page 2)

செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பெருந்தொகை பணம் பறிமுதல்!!

தெமடகொடை பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பொன்றில் வீடொன்றில் இருந்து ஒரு இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் மற்றும் 30 மில்லியன் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த பணத் தொகை போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டிக்கக் கூடும் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More »

தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு!!

தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை (02) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. நாளை இரவு 10.00 மணியின் பின்னர் பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அமைதி காலம் ஆரம்பமாகிறது. எனவே அமைதி காலத்தில் சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பிரசார கூட்டங்களை நடத்துதல், கிராமங்களிலும் …

Read More »

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவு, மேலும் வலுவடைந்து வருகிறது!!

அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட சீனாவிற்கும் இலங்கைக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவு, மேலும் வலுவடைந்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு, சங்கரில்லா ஹோட்டலில் நேற்றைய முன்தினம் இடம்பெற்ற சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக முன்னைநாள் அதிகாரிகள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், …

Read More »

கரையோரப் பிரதேச மக்களுக்கு அவதான எச்சரிக்கை!!

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ …

Read More »

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!!

ஹஜ்ஜின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு இலங்கை அரசாங்கமானது இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தினர் அவர்களுடைய சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், இலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் உள்ள தமது இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் …

Read More »

வெலிக்கடை கைதிகள் கொலை வழக்கு – பிரதிவாதிகளின் சாட்சிகளை பதிவுச் செய்ய தீர்மானம்!!

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைதிகள் சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சாட்சி கூண்டில் நின்று தமது சமர்ப்பிப்புக்களை முன் வைக்க வேண்டும் என முன்னாள் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமஹேவா ஆகியோர் மூவரடங்கிய கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் முன் தெரிவித்தனர். இந்த வழக்கு கிஹான் குலதுங்க, …

Read More »

ஷானி அபேசேகர விளக்கமறியலில்!!

குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (31) இரவு கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர 8 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவர் கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் …

Read More »

6 ஆயிரத்தை கடந்த தேர்தல் முறைப்பாடுகள்!!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 6015 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று முன்தினம் (30) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 201 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Read More »

வில்பத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

வில்பத்து – கல்லாறு, மரிச்சுக்கட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு செய்து மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றுமாறு உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஜனக்க டி சில்வா, நிஷ்சங்க …

Read More »

திருடப்பட்ட வங்கி அட்டையில் 140,000 ரூபாய் பெற்ற இளைஞன்!!

திருடப்பட்ட வங்கி அட்டையின் ஊடாக சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணத்தினை பெற்ற நபரொருவர் கேகாலை, பிந்தெனிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பிந்தெனிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிக்கு அமைய 26 வயதுடைய குறிந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேநபரால் வீடொன்றில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் மற்றும் வங்கி அட்டையொன்றும் திருடப்பட்டுள்ள நிலையில், குறித்த வங்கி அட்டையில் இருந்து 140000 …

Read More »

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் …

Read More »

மாணவர்களின் திறன்களை அடையாளம் காண விசேட இலக்கம்!!

தரம் 1 இற்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 35 இலிருந்து 40 ஆக அதிகரிப்பதற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உதவி ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளும் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்திருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த நடைமுறைக்கு அமைவாக தேர்தலுக்கு பின்னர் இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் …

Read More »

நோன்மதி தினத்தன்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியில்லை!!

ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் நோன்மதி தினத்தன்று தேர்தல் பிசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசியல் கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவுடன் அண்மையில் நடந்த கூட்டத்தில், கட்சி செயலாளர்கள் கொரோனா தொற்றின் காரணமாக தங்களது தேர்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியவில்லை என்று சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வீடு வீடாகச் சென்று அல்லது தமது தேர்தல் …

Read More »

உலகில் 1.71 கோடி மக்களை பாதித்த கொரோனா வைரஸ்!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,187,414 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 670,202 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தடுப்பு மருந்துகள் வெளிவராத நிலையில், கொரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா தொற்று உலகம் …

Read More »

ஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் 8,376 புத்தகங்கள், 32 ஆயிரம் பொருட்கள்!!

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தில் 8,376 புத்தகங்கள் உள்பட 32 ஆயிரம் பொருட்கள் இருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட வேதா நிலையத்தில் 26 வகையான பொருட்கள் உள்ளன. இந்தப் பொருட்களின் மொத்த எண்ணிக்கை 32,721 ஆகும். தங்கம் 4 கிலோ 372 கிராம், வெள்ளி 601 …

Read More »

தபால் மூல வாக்களிப்பு சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இடம்பெற்றுள்ளது!!

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read More »

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் கட்டாரில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2813 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான இதுவரையில் 2333 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. …

Read More »

தமிழ் பேசும் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்!!

கண்டி மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை வென்ற ரவூப் ஹக்கீம், அப்துல் அலீம் ஆகியோருடன் இணைந்து நானும் முன்னிலை வகிக்கின்றேன். எமக்கு பேராதரவை வழங்குவதற்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளனர் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார். கருத்து கணிப்புகளும் இதனையே சொல்கின்றன என்றும் வேலுகுமார் மேலும் தெரிவித்துள்ளார். வேலுகுமாரின் பிரச்சார …

Read More »

புதிய சட்டம் தொடர்பில் பிரதமரின் கருத்து!!

அரச சொத்துக்கள் அல்லது வேறு காரணங்களுக்கான இணக்கப்பாடு கைச்சாத்திட முன்னர் குறித்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது கட்டாயமாக்க புதிய சட்டத்தை உருவாக்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (29) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதர்காலத்தில் நாட்டிற்கு வரக்கூடிய சவால்களை வெற்றிகொள்ள கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்தை சக்திமிக்கதாக்க அனைத்து இலங்கையர்களும் தங்களது வாக்குகளை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற பின்நிற்கின்றது!!

விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவின் உதவியை பெறும்போது இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பின்நிற்பதாகவும் இதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றதது என்ற கேள்வியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எழுப்பினார். சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையிலும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்ததின் அடிப்படையிலும் இந்த நாட்டில் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்புக்கு இடமுண்டு. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் …

Read More »

இலஞ்சம் பெற்ற அபிவிருத்தி உதவியாளர் ஒருவர் கைது!!

சாரதி அனுமதிப்பத்திர எழுத்து மூல பரீட்சையில் சித்தியடையச் செய்து தருவதற்காக 5000 ரூபா இலஞ்சம் பெற்ற ஹம்பாந்தோட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் அபிவிருத்தி உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (29) இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான ஒருநாள் சேவையில் போது குறித்த நபர் இவ்வாறு இலஞ்சம் பெற்றுள்ளார்.

Read More »

மதிவாணின் பதவிக்கு ஜயந்த தர்மதாச நியமனம்!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய உப தலைவராக ஜயந்த தர்மதாச நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவராக செயற்பட்ட கே. மதிவாணன் தனது பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை இன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்திடம் கையளித்திருந்தார். அவர் பதவி விலகியதை அடுத்து அந்த இடத்திற்கு ஜயந்த தர்மதாச நியமிக்கப்பட்டுள்ளார்

Read More »

நாட்டின் வானிலையில் திடீர் மாற்றம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. …

Read More »

எத்தனோல் கடத்திய கலால் திணைக்கள அதிகாரி கைது!!

எத்தனோலை கடத்திய குற்றச்சாட்டில் கலால் திணைக்கள சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் எத்தனோலை தனியார் நிறுவனமொன்றிக்கு கொண்டு சென்றுக் கொண்டிருந்த போது பமுனகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More »

மத்திய கலாச்சார நிதியத்தில் 11 பில்லியன் ரூபாய் நிதி மோசடி!!

மத்திய கலாச்சார நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையில் மத்திய கலாச்சார நிதியத்தில், 11 பில்லியன் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்படாத வகையில் மத்திய கலாச்சார நிதியத்தில் இருந்து 400 மில்லியன் ரூபாய் கடந்த ஜனாதிபதி தேர்தலின் …

Read More »

போதைப்பொருள் வர்த்தகர்கள் குறித்து தகவல் வழங்க மின்னஞ்சல் முகவரி!!

விஷ போதைப்பொருள், குற்றச் செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக மின்னஞ்சல் முகவரி ஒன்றும் மற்றும் தொலைநகல் இலக்கமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பொதுமக்கள் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1997 மற்றும் 1917 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு மேலதிகமாக இந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைநகல் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. விஷ போதைப்பொருள் தொடர்பில் 1997@police.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு …

Read More »

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் மற்றும் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த கைதி ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது., அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2809 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை 2296 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, …

Read More »

இலஞ்சம் பெற்ற கிராம சேவகர் உட்பட இருவர் கைது!!

100,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட கிராம சேவகர் மற்றும் அதற்கு உதவி வழங்கிய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெமடகொட பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இருவரும் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். பதிவு சான்றிதழ் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக 100,000 ரூபா பணம் கேட்கப்பட்டு அப்பணத்தை வாங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த இருவரும் கிராம சேவகர் அலுவலகத்தில் வைத்தே கைது …

Read More »

வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு!!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் 95 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளைய தினத்திற்குள் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கையை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நாளைய தினத்திற்கு பின்னர் வாக்காளர் அட்டை கிடைக்க வில்லை எனின் தபால் காரியாலயத்தில் வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

ஜோர்தானில் இலங்கையர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் !!

கொரோனா தொற்று காரணமாக ஜோர்தானில் வேலைவாய்பை இழந்த இலங்கையர்கள் குழுவினரினால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த அந்நாட்டு பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஜோர்தானின் அல்காரா பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் சேவையாற்றிய இலங்கையர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீதோ இவ்வாறு கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக 5 மாதங்களாக குறித்த இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளமை தொடர்பில் தெரியவந்ததை அடுத்து அது தொடர்பில் …

Read More »

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் தற்போதைய நிலை!!

இதுவரையில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆரம்பித்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 597 ஆக பதிவாகியுள்ளது கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அவர்களுள் புனர்வாழ்வளிக்கடும் கைதிகள் 482 பேர், பணியாளர்கள் 65 பேர், மேலதிக பணியாளர்கள் 5 பேர், அவர்களின் குடும்பம் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் 44 பேர் மற்றும் வெலிகட சிறைக்கைதியுடன் தொடர்பில் இருந்த ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இன்று காலை …

Read More »

அரேபியாவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சௌதி அரேபியாவில் இருந்து வந்த ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 2121 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் 673 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இலங்கையில் புதிதாக 22 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த 17 பேருக்கும் மற்றும் கட்டாரில் இருந்து இலங்கை வந்த 5 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2804 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 2121 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் 672 பேர் …

Read More »

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 5236 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று (26) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 163 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Read More »

சஹ்ரானின் சகோதரி உட்பட 63 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு !!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் 10 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று (27) உத்தரவிட்டார். கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் …

Read More »

உருக்குழைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்!!

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தலைமன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள பழைய பாலம் தெற்கு கடற்கரையில் இன்று (27) காலை உருக்குழைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை தலைமன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். தலைமன்னார் கடற்கரை பகுதியில் இன்று காலை றோர்ந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலத்தை அவதானித்துள்ளனர். கடற்படையினர் உடனடியாக தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து தலைமன்னார் பொலிஸார் குறித்த …

Read More »

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களிடம் விடுத்த வேண்டுகோள் !!

தேர்தல் தினத்தில் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று மொட்டு சின்னத்திற்கு எதிரே புள்ளடியிட்டு தங்களது பெறுமதிமிக்க வாக்கை பயன்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். குருநாகல் மாவத்தகம பிரசேத்தில் இன்று (27) முற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு …

Read More »

கிழக்கு மாகாண மக்களை அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!!

பொலிஸ் தலைமையகத்தில் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று (27) இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் பேசும் பலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள காரணத்ததால் தமிழில் ஊடக பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இதன்போது கிழக்கு மாகாண மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஊடக பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பாதாள உலக குழுவினர் வடக்கில் வியபித்துள்ளதாகவும் அவர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க விரும்பினால் அதற்கான இரண்டு தொலைபேசி இலக்கங்களையும் குறித்த …

Read More »

மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்!!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (27) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் மாணவர்கள் பாடசாலைக்கு வருதல், தங்கியிருத்தல் மற்றும் வெளியேறுதல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளார். இதேவேளை பாடசாலைக்கு குறித்த மூன்று வகுப்புகளிக்கும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஆசிரியர்கள் மாத்திரமே உள் நுழைய முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் …

Read More »

ரிஷாட் பதியுதீன் வவுனியா CID கிளையில் ஆஜர்!!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். வவுனியா, இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள கிளையில் அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »