Home / செய்திகள் (page 1026)

செய்திகள்

உரிமையாளரற்ற பொதியை தேடிச் சென்ற பொலிஸாருக்கு கிடைத்த சடலம்!!

புத்தளம் – மன்னார் வீதியின் 4ம் கட்டைப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உரிமையாளர் அற்ற பொதி ஒன்று இருப்பதாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட போதே பொலிஸார் சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

அகதிகளுடன் எந்தப் படகும் வரவில்லை! ஆஸி. மறுப்பு!!

புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு, கிறிஸ்துமஸ் தீவுகளில் இருந்து 250 கிலோ மீற்றர் தொலைவில் நடுக்கடலில் சிக்கியுள்ளதாக வௌியான செய்தியை அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் மறுத்துள்ளார். இரு வாரங்களுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குறித்த படகு பயணத்தை ஆரம்பித்ததாக செய்திகள் வௌியானது. இதில் 32 பெண்கள் மற்றும் 37 குழந்தைகள் உட்பட 153 பயணித்ததாகவும் அவர்கள் இலங்கைத் தமிழ் அகதிகள் எனவும் கூறப்பட்டது. இந்தநிலையில் இச்செய்தினை …

Read More »

சமூக வலைத்தளங்களில் மத நிந்தனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி இனம் மற்றும் மத நிந்தனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More »

பூப்பறிக்கச் சென்ற போது குளத்தில் நீராடிய சிறுவர்கள் பலி!!

இராகலை – செனரத்புர பகுதியில் குளத்தில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் தனது நண்பர் மற்றும் தாத்தாவுடன் தானம் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பூப்பறிக்கச் சென்ற போது, அவ்விடத்தில் இருந்த குளத்தை பார்த்து நீராட எண்ணி இறங்கியுள்ளனர். இவ்வாறு நீராடிக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக இராகலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று காலை (28.06.2014) 10.00 மணியளவில் இந்தச் …

Read More »

முஸ்லிம்களின் முன்னேற்றம் பொருக்காமல் அடித்து விரட்டுகின்றனர்!!

முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதை பெரும்பான்மையினர் பொறுக்க முடியாமலே அவர்களை அடித்து துரத்தி, அவர்களின் தொழிலிடங்கலுக்கு தீ வைக்கின்றனர் என வடமாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று (28) காலை கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னர் தமிழர்கள் …

Read More »

அரசு விளம்பரத்தில் என் படத்தை பயன்படுத்த வேண்டாம்: கோஸ்டாரிகா புதிய அதிபர் அதிரடி!!

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் தேர்வுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மைய இடது குடியுரிமை செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட லூயிஸ் கில்லர்மோ சோலிஸ் 31 சதவிகித வாக்குகள் பெற்றிருந்தது அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது. இதனைத் தொடர்ந்த கருத்துக் கணிப்புகளில் சோலிசுக்கு அதிகரித்த ஆதரவைக் கண்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரே தனது பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு போட்டியிலிருந்து விலகுவதாகவும் முடிவு செய்தார். *ஆயினும் …

Read More »

சட்டவிரோத வழிபாடு: சீனாவில் 25 பேருக்கு சிறைத்தண்டனை!!

சீனாவில் தடை செய்யப்பட்ட மத அமைப்பைச் சேர்ந்த 25 பேருக்கு 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குவானங்ஷென் அல்லது எல்லாம் வல்ல கடவுளின் திருச்சபை என்ற மத அமைப்பைச் சேர்ந்த சிலர் இம்மாத துவக்கத்தில் பாஸ்ட்புட் உணவகத்தில் ஒரு பெண்ணை கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அந்த அமைப்பினருக்கு எதிராக கண்டனக் குரல் வலுத்தது. இதையடுத்து அவர்கள் மீது, பொது இடத்தில் வழிபாட்டு முறைகளை பரப்பியது, சமூக …

Read More »

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள எபோலா நோய் உலக அளவில் பரவும் அபாயம்!!

நான்கு மாதங்களுக்கு முன்னால் கினியாவில் தென்படத் தொடங்கிய ‘எபோலா’ உயிர்க்கொல்லி நோய் தற்போது அதன் அண்டை நாடுகளான லைபீரியா, சியாரா லியோன் போன்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. விஷக்காய்ச்சலான இதனை குணப்படுத்த இதுவரை எந்த சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் அல்லது விலங்குகளின் சிறுநீர், வியர்வை அல்லது ரத்தம் போன்ற திரவங்களினால் இந்த நோய் பரவுகின்றது. இதுவரை வந்துள்ள நோயாளிகளின் வழக்குகள், இறப்புகள் மற்றும் புவியியல் பரவல்களில் …

Read More »

தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை: வசிரிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த இந்துக்கள்!!

பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் வடக்கு வசிரிஸ்தானில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக சுமார் 4.5 லட்சம் மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட இந்துக்களும் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். பெரும்பாலான இந்துக்கள் பால்மிகி வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் போராளிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வசித்து வந்தனர். அங்கு மெஜாரிட்டியாக இருக்கும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மையின …

Read More »

பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார்: ஆதாரமின்றி திணறும் பொலிஸ்!!

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மே மாதம் 30–ம் திகதி கடந்த ஐ.பி.எல். போட்டியின்போது தன்னை தொழில் அதிபர் நெஸ்வாடியா பாலியல் தொந்தரவு செய்ததாக நடிகை பிரீத்தி ஜிந்தா பொலிசில் புகார் செய்தார். இதுகுறித்து மும்பை பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரீத்தி ஜிந்தா நடந்த சம்பவம் குறித்து பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். பலர் முன்னிலையில் நெஸ்வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், …

Read More »

திருமதி.நடராஜா வடிவாம்பிகை (மணி)

திருமதி.நடராஜா வடிவாம்பிகை (மணி)

Read More »

“ஒல்ரன்” மாநிலத்தில் உள்ள, புங்குடுதீவு மக்களுடனான சந்திப்புக் குறித்த அறிவித்தல்..!

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிற்சர்லாந்து “புதிய நிர்வாகத்துடன் கருத்துப் பரிமாறல்” அன்புடையீர், வணக்கம். எதிர்வரும் 29.06.2014. ஞாயிறு மாலை மூன்று மணிக்கு புதிய நிர்வாகத்துடன் கருத்துப் பரிமாறல் நடைபெற விருப்பதால் “ஒல்ரன் மற்றும் ஒல்றனுக்கு அண்மையில் வாழும்” புங்குடுதீவு மக்களாகிய உங்கள் அனைவரையும் குடும்ப சகிதமாக வந்து பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். அத்துடன் இக்கூட்டத்தில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்களையும், ஆலோசனைசபை உறுப்பினர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு …

Read More »

சூப்பர் ஸ்டார் கெட்டப்பில் பவர் ஸ்டார்!!

தமிழ் திரை விருட்சகம் சார்பாக தமிழ்மணி தயாரிக்கும் புதிய படம் ‘கிடா பூசாரி மகுடி’. இதில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம் தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். கேரளாவைச் சேர்ந்த நட்சத்திரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சிங்கம் புலி, பவர் ஸ்டார் சீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, செவ்வாளை ராசு, போண்டாமணி, கலைராணி, கம்பம் மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜெ.ஜெயக்குமார். இவர் இயக்குனர்கள் வேலு …

Read More »

தமிழ் நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர பேட்மிண்டன்!!

இந்திய சினிமா உலகைச் சேர்ந்த நடிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ‘நட்சத்திர கிரிக்கெட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட கிரிக்கெட் போட்டி இரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதேபோல், தமிழ் நடிகர்களை ஒன்று திரட்டி, பேட்மிண்டன் போட்டிகளை நடத்த இந்தியன் பேட்மிண்டன் செலிபிரட்டி லீக் என்ற அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதாக தமிழின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி, தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 50 …

Read More »

மோடிக்கு 4வது இடம்!!

டுவிட்டர் சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்களை கவனிப்பவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தொட்டுள்ளது. இதன் மூலம், டுவிட்டரில் அதிகமாக பின்பற்றப்படும் உலக தலைவர்கள் வரிசையில் 4வது இடத்தை நரேந்திர மோடி பிடித்துள்ளார். முதல் இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உள்ளார். 2009ம் ஆண்டு அக்டோபரில் நரேந்திர மோடி டுவிட்டரில் கணக்கு தொடங்கினார். அதன்பின், அவர் தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் ஏதாவது கருத்துகளை பதிவு செய்து வருகிறார். பொதுவாக …

Read More »

பிணங்களுடன் பாலியல் உறவு வைத்திருந்த பிரபலம்!!

இங்கிலாந்தைச் சேர்ந்த உலக பிரசித்தி பெற்ற ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ஜிம்மி சேவில். ஒரு தனியார் வானொளியில் நிகழ்ச்சி வர்ணனையாளராகவும் இருந்தார். 84 வயதான இவர் கடந்த 2011–ம் ஆண்டில் மரணம் அடைந்தார். இவர் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு குழந்தைகளிடம் ‘பாலியல்’ உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அது குறித்த விசாரணையை இங்கிலாந்து பொலிசார் மேற்கொண்டனர். அப்போது நாடு முழுவதும் உள்ள 28 தேசிய …

Read More »

இளம்பெண்ணின் உயிரைப் பறித்த தரமற்ற போன் சார்ஜர்!!

கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வடக்கே உள்ள கோஸ்போர்ட் என்ற நகரத்தில் 28 வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் இறந்துள்ளார் என்ற செய்தி பொலிஸாருக்கு கிடைத்தது. இறப்பிற்கான காரணத்தை அறிய அங்கு சோதனையிடச் சென்ற பொலிஸார் அந்தப் பெண் மடியில் தனது லேப்டாப்பை வைத்திருந்த வண்ணம் இறந்திருப்பதைக் கண்டார்கள். அவரது காதுகளில் ஹெட்போன் பொருத்தப்பட்டிருந்தது. அவரது ஸ்மார்ட் போன் ஒன்றும், லேப்டாப்பும் சார்ஜரில் பொருத்தப்பட்டிருந்தன. இறந்திருந்த …

Read More »

ஈராக்கின் 2வது பெரிய அணையை நெருங்கும் தீவிரவாதிகள்!!

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அணையான ஹதிதா அணையை நெருங்குவதால் தலைநகர் பாக்தாத் குடிநீர் இன்றி வாட வேண்டி இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஈராக்கில் ஷியா பிரிவினரின் தலைமையிலான அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் கார் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தீவிவரவாதிகள் பலுஜா மற்றும் மொசுல் ஆகிய …

Read More »

முதல் முறையாக வீடு வாங்கினால் சலுகை?

மத்தியில் ஆளும் பா.ஜனதா கூட்டணி அரசின் முதலாவது பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி வரும் 10-ந் திகதி தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த பட்ஜெட் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதா கூட்டணி அரசுக்கு மட்டுமல்ல, அருண் ஜெட்லிக்கும் இதுவே முதல் பட்ஜெட். பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும் …

Read More »

ஹிட்லர் அதிலும் கெட்டிக்காரராம்!!

ஜேர்மனி சர்வாதிகாரியான ஹிட்லர் மிகப் பெரிய வரி ஏய்ப்பாளராகவும் இருந்துள்ளது தற்போது ஆவணப்படம் மூலமாக அம்பலமாகியுள்ளது. சர்வாதிகாரியாக வாழ்ந்த அடால்ப் ஹிட்லர் தனது உருவத்திற்கு கூட காப்புரிமை பெற்று வைத்திருந்தார். அவரது உருவம் பொறித்த தபால் தலை விற்பனை மூலம் கூட அவருக்கு வருமானம் கிடைத்துள்ளது. இது போக, கூட்டங்களில் பேசுவது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் பணம் வசூலித்துள்ளார் ஹிட்லர். ஆனால் இப்படி தான் சேமித்த பணத்திற்கெல்லாம் வரி …

Read More »

அசரவைக்கும் அதிதி (விமர்சனம்)!!

சிம்பிளான திரைக்கதையைக் கொண்டு அசர வைக்கும் படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்த படங்களின் வரிசையில் அதிதியை சேர்க்கலாம். மலையாள படமான காக்டெயில் படத்தின் ரீமேக்கான இப்படத்தை பரதன் இயக்கி இருக்கிறார். கலர்ஃபுல் காதல் காட்சிகள், அதிரடி சண்டை சாகசங்கள், குதூகலிக்கும் குத்தாட்டங்கள் என எதையும் நம்பாமல் திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் அதிர்ச்சியாகவும் அதே சமயம் நியாயமான கேள்வியாகவும் அமைந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் பிசினஸில் திறமையானவர் …

Read More »

உயிருக்குப் போராடியவரை காப்பாற்றிய முதல்வர்!!

ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தராராஜே அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த 24–ம் திகதி ஸ்ரீகங்கா நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் ஸ்ரீகங்கா நகர் இராணுவ மையம் அருகே வந்தபோது, 3 பேர் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அருகில் மோட்டார்சைக்கிள் ஒன்று நொறுங்கிய நிலையில் கிடந்தது. இதை பார்த்த முதலமைச்சர் வசுந்தராராஜே காரை நிறுத்தினார். உடனே தன்னுடன் வந்த அதிகாரிகளை அழைத்து 3 பேரையும் வைத்தியசாலைக்கு …

Read More »

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம்!!

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல்பருமன் நோய் சர்வதேச மக்களிடம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏனெனில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. எனவே, உடல் எடையை குறைக்க பகீரத்தன முயற்சி மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சி, பட்டினி போன்றவை மூலம் உடலை வருத்தி கொள்கின்றனர். ஆனால் உடல் பருமனை தடுக்க இதுபோன்று கஷ்டப்பட தேவையில்லை …

Read More »

திருப்பதியில் இனி காத்திருக்கத் தேவையில்லை!!

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் பக்தர்கள் எண்ணிக்கை இலட்சத்தை தாண்டி வருகிறது. இவர்கள் ஏழுமலையானை தரிசிக்க அதிகபட்சமாக 20 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை ஆகிறது. தரிசனத்துக்காக அவர்கள் கியூவில் காத்து நிற்க வேண்டியது உள்ளது. 300 ரூபாய் சிறப்பு கட்டண டிக்கெட் எடுப்பவர்கள் கூட மணிக்கணக்கில் காத்து நின்றுதான் ஏழுமலையானை தரிசிக்க முடிகிறது. …

Read More »

15 வயதுச் சிறுமியை கடத்திச் சென்ற காதலனுக்கு வலை வீச்சு!!

சிறுமி ஒருவரை அவரது பெற்றோருக்கு தெரியாது கடத்திச் சென்ற நபரை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் – தெதுருஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அப் பிரதேச பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்ற சிறுமி கடந்த ஆறு மாதத்திற்கு முன் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளார். நேற்று (26) தனது தாத்தாவின் வீட்டிற்குச் செல்வதாக கூறிச் …

Read More »

பக்கமூண விகாராதிபதி கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது!!

எலஹெர பக்கமூண, வீரஹீரடிய பிரதேச விகாரையின் விகாராதிபதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18, 22 மற்றும் 28 வயதான சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பொலன்நறுவை, அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விகாராதிபதியிடம் சந்தேகநபர்கள் ஒரு லட்சம் ரூபா பணத்தை கோரியதாகவும் இதன்போது முரண்பாடு ஏற்பட்டதாகவும் பொலிஸாரது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் விகாராதிபதியை தாக்கியதாகவும் அதன்போது அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக …

Read More »

கணவன் கொலையுடன் தொடர்புடைய இலங்கை வைத்தியர் கைது!!

அவுஸ்திரேலியாவில் வைத்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவியான இலங்கை பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தினேந்திர அத்துகோரள என்ற வைத்தியர் கொலை தொடர்பிலேயே இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதின்று 34 வயதான குறித்த வைத்தியர் காயங்களுடன் சென்டன் வீதியில் இறந்துகிடந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்தநிலையில் 34வயதான அவரது மனைவியின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவரும் ஒரு வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றஞ்சாட்டப்பட்ட பெண் …

Read More »

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய, பங்குத்தந்தையுடன் சுவிசில் ஓர் கலந்துரையாடல்..!

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய பங்குத்தந்தை “பாதர் சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங்” அவர்களின் ஐரோப்பிய விஜயத்தின் தொடர்ச்சியாக தற்போது சுவிஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இதனை முன்னிட்டு நாளைய தினம் 28.06.2014 சனிக்கிழமை மதியம் 14.00 மணியளவில் சுவிசின் சூரிச் மாநிலத்தில் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய பங்குத் தந்தை “பாதர் சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங்” அவர்களுடனான கலந்துரையாடலுக்கு புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய சுவிஸ் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. …

Read More »

இரவு நேர கார் பந்தய போட்டிகளை நடத்துவதற்கு ஐதேக கண்டனம்!!

கண்டியில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரவு நேர கார் பந்தய போட்டிகளை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இப் போட்டிகளை ரத்து செய்யுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வார இறுதி நாட்களில் ராஜபக்‌ஷ அரசாங்கம் கண்டியில் இரவு நேர கார் பந்தய போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தான் ஊடகங்கள் மூலம் அறிந்ததாக தேசிய கட்சி தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார். …

Read More »

இலங்கைக்கு கஞ்சா கடத்த உதவிய மீனவர்கள் மூவர் கைது!!

ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலில் ஜூன் 11ல் உயிருக்கு போராடிய இலங்கைத் தமிழர் சிந்துசன் 27, என்பவரை மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் கொண்டு சென்றனர். பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு செல்ல முயன்ற போது, தனுஷ்கோடி மூன்றாம் மணல் தீடையில் மீனவர்கள் இறக்கி விட்டதாக, விசாரணையின் போது பொய் சொல்லி நாடகமாடினார். இதன்பின் சிந்துசனை தனுஷ்கோடி பொலிஸார் காவலில் எடுத்து விசாரித்த போது, பாம்பனில் இருந்து 60 கிலோ கஞ்சாவை கடத்தி …

Read More »

நாகப்பட்டினம் மீனவர்கள் 7 பேர் விடுதலை!!

திருகோணமலை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதி நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் 7 பேரும் நடுக்கடவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை செய்த நீதிபதி 7 மீனவர்களையும் சிறையில் அடைக்க …

Read More »

சிவாஜிலிங்கத்திற்கு 12 வருடமாக வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்!!

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கடந்த 12 வருட காலமாக வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. தற்போது வடமாகாண சபை உறுப்பினராக உள்ள எம்.கே.சிவாஜிலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். அவருக்கு அமைச்சரவை அந்தஸ்து உடைய பாதுகாப்பு உத்தியோகஸ்தர் (M.S.D) பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலம் தொடக்கம் நேற்று முன்தினம் நள்ளிரவு வரையான கடந்த 12 வருடகாலமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் …

Read More »

ரஜரட்டை பல்கலைக்கழகத்துக்கு பூட்டு!!

ரஜரட்டை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களது பாதுகாப்பு கருதி இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள் நிர்வாக கட்டடத்துக்குள் மாணவர்களால் நேற்று (26) தடுத்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை உருவானது. சுமார் 300 வரையான மாணவர்கள் இதன்போது அங்கிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கலகம் அடக்கும் பொலிஸாரும் நேற்று சம்பவ இடத்திற்கு சென்றனர். மாணவர்கள் 13 பேரது வகுப்பு தடைக்கு எதிராக …

Read More »

பென்சில் வாங்க காசு தராததால் சிறுமி தீக்குளித்து தற்கொலை!!

ஒடிசாவில் பென்சில் வாங்க பெற்றோர் காசு தராததால், சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அம்மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட சர்வ ஷிக்ச அபியான் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை தற்கொலைக்கான காரணத்தை கண்டறியுமாறு உத்தரவிட்டுள்ளதாக கஞ்சம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரேம் சந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார். ஒடிசா தலைநகரான புவனேஷ்வரிலிருந்து 170 கி.மீ தொலைவில் உள்ள அஸ்கா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிஜோய் …

Read More »

நடிகர் பாலமுரளி மோகன் தற்கொலை!!

நடிகர் பாலமுரளி மோகன் சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பாய்ஸ், அள்ளிதந்த வானம், சிவாஜி உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் பாலமுரளி மோகன். வெள்ளித்திரை சினிமா மட்டுமன்றி சின்னத்திரை மற்றும் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். 54 வயதான பாலமுரளி மோகன், சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள வீட்டில், மனைவி சுமதியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சுமதி உறவினர் வீட்டு …

Read More »

நுவரெலியாவில் கர்ப்பிணித் தாய்மார்களின் மரண வீதம் அதிகரிப்பு!!

நுவரெலியா மாவட்டப் பெருந்தோட்டப் பகுதிகளில் கர்ப்பிணித் தாய்மார்களின் மரண வீதம் அதிகரித்து வருகின்றமையானது கவலைக்குரிய விடமாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய மட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களின் மரண வீதத்தினை முழமையாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதும் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் இந்த மரணவீதத்தினை குறைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அண்மையில் …

Read More »

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட செந்தூரன் கைது!!

தமிழக முகாமில் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட செந்தூரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்பு முகாமெனும் பெயரில் உருவாக்கப்பட்ட வதைமுகாமில் அடைபட்டு அவதியுறும் ஈழ உறவுகளின் நலனுக்கா கடந்த மூன்று நாட்களாக உண்ணா நிலையில் இருந்து வந்த நமது ஈழத்து உறவான செந்தூரன் நேற்று (26) மாலை நான்கு மணியளவில் காவல்துறையினரின் வற்புறுத்தலால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை முடிந்தவுடன் தற்கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு …

Read More »

ரஜரட்டை மாணவர் பிடியிலிருந்த உபவேந்தர், விரிவுரையாளர்கள் விடுதலை!!

ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள் நிர்வாக கட்டடத்துக்குள் மாணவர்களால் நேற்று (26) மாலை முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். சுமார் 300 வரையான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் கலகம் அடக்கும் பொலிஸாரும் நேற்று சம்பவ இடத்திற்கு சென்றனர். மாணவர்கள் 13 பேரது வகுப்பு தடைக்கு எதிராக பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் …

Read More »

வாயால் மென்று கொண்டிருக்காது மங்களவை கைது செய்யுங்கள் – அஜித் பீ. பெரேரா!!

அரச இரகசியங்களை வெளிப்படுத்தி தவறு செய்திருப்பின் மங்கள சமரவீரவை கைது செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். மங்கள சமரவீர தவறு செய்து விட்டார், தவறு செய்து விட்டார் என வாயால் மென்று கொண்டிருக்காது அவரை கைது செய்யுமாறு அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்றத்திற்கு வெளியால் மங்கள …

Read More »

ஆய்வுகூடத்தில் கேஸ் சிலிண்டர்களைத் திருடிய ஆசிரியர் விளக்கமறியலில்!!

பஹமுண – கல்முல்ல பாடசாலை ஆய்வுகூடத்தில் உள்ள இரண்டு கேஸ் சிலிண்டர்களை கொள்ளையிட்ட அதே பாடசாலை ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாடசாலை அதிபரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து சந்தேகத்தின் பேரில் இவர் கைதுசெய்யப்பட்டார். பின்னர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More »