Home / செய்திகள் (page 1022)

செய்திகள்

உக்ரைனில் தற்காலிக யுத்த நிறுத்தத்தை நீட்டிக்க சர்வதேச முயற்சிகள்!!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான அனுமதி கடந்த ஆண்டு இறுதியில் மறுக்கப்பட்டபோது உக்ரைனில் தொடங்கிய போராட்டங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இத்துடன் அந்நாட்டின் கிழக்குப் பிராந்தியங்களில் ஒன்றான கிரிமியா தன்னை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டது வன்முறையை அங்கு அதிகரித்தது. மேலும் லுகான்ஸ்க், டோநெட்ஸ்க் போன்ற பகுதிகளிலும் ரஷ்யாவுடன் இணைவதற்கான கலவரங்கள் தொடர கடந்த 11 வாரங்களில் அங்கு 435 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையை மாற்றும் வகையில் உக்ரைனின் …

Read More »

இங்கிலாந்தில் 2000-க்கு பின்னர் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க கூடாது: புதிய திட்டம் பரிந்துரை!!

இங்கிலாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அங்கு தினமும் சிகரெட் பிடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இந்த கணக்கீட்டின் முடிவில் 16 வயதுக்கும் குறைவான மாணவர்களில் குறைந்தது 600 பேராவது தினமும் சிகரெட் பிடிப்பது தெரியவந்தது. 3.7 மில்லியன் சிறுவர்களில் 11லிருந்து 15 வயதுக்குட்பட்டவர்கள் 463 பேர் தினமும் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதே அளவில் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து பகுதிகளில் 55, 30, 19 …

Read More »

தைவானுடன் உறவை மேம்படுத்த முதல் முறையாக அமைச்சரை அனுப்பிய சீனா!!

கடந்த 1940களில் நடைபெற்ற சீன உள்நாட்டுப் போருக்குப்பின்னர் சீனாவும், தைவானும் தனித்தனியே ஆட்சி செய்யப்படுகின்றன. இருப்பினும் தைவானை தனது எல்லைக்குள் ஒரு பகுதியாகவே பார்க்கும் சீனா தேவைப்பட்டால் பலத்தைப் பிரயோகித்து அதனை மீண்டும் தனது அதிகாரத்துக்குள் கொண்டுவரவே எண்ணுகின்றது. எனினும் கடந்த 2008ஆம் ஆண்டில் தன்னுடைய ராணுவ அச்சுறுத்தல்களைத் தள்ளி வைத்துவிட்டு நிதி முதலீட்டை எதிர்பார்த்திருந்த தைவானுடன் சீனா பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொண்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் நூற்றுக்கணக்கான …

Read More »

தமிழில் குத்தாட்டம் போடவரும் பிரியங்காவின் தங்கை!!

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட தங்கை பர்பி ஹண்டா. இவர் முறைப்படி பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி, பெல்லி நடனங்களை கற்றவர். பல்வேறு நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளார். இதுவரை 13 விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். அதில் மூன்று விளம்பரங்களில் பிரியங்கா சோப்ராவுடன் நடித்துள்ளார். பர்பி ஒரு தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வௌியாகவுள்ளது. தற்போது ஹிந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதற்கு முன் தமிழ் …

Read More »

நான் பிசி, விசாரணைக்கு வீட்டுக்கு வாங்க! பொலிஸாரிடம் கூறிய ப்ரீத்தி!!

நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தன் முன்னாள் காதலரும் தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது சமீபத்தில், பொலிசில் புகார் அளித்திருந்தார். அதில், மும்பை கிரிக்கெட் மைதானத்தில் நெஸ் வாடியா, தன்னிடம் அத்து மீறி நடந்ததாகவும், தரக் குறைவாக பேசியதாகவும் தெரிவித்து இருந்தார். புகார் அளித்த அடுத்த நாளே, அமெரிக்காவுக்கு சென்று விட்டார். இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து, இரண்டு நாட்களுக்கு முன், …

Read More »

அது எப்போது வேண்டுமானாலும் வௌியாகலாம்! கமல்!!

விஸ்வரூபம் பட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. எந்த நேரமும் அந்தப் படம் வெளியாகலாம் என படத்தின் இயக்குநரும் நாயகனுமான கமலஹாஸன் தெரிவித்துள்ளார். கமலஹாஸன் இரசிகர்களுக்கு இது கொண்டாட்ட ஆண்டு. எண்பதுகளில் இருந்தது போல, மகா பிஸியாக உள்ளார் கமல். ஒரே நேரத்தில் அவரது மூன்று பட வேலைகள் நடக்கின்றன. அவர் நடிப்பில் நடித்து வரும் உத்தமவில்லன் நகைச்சுவை படம் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்து மோகன்லால் நடிப்பில், வெளியான மலையாள …

Read More »

நைஜீரியாவில் குழந்தைகள் உள்பட 38 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்!!

வன்முறையும், தீவிரவாதமும் தலைவிரித்தாடும் நைஜீரியாவின் கிராமங்களுக்குள் புகுந்த தீவிரவாதிகள் குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேரை துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்று குவித்துள்ளனர். அந்நாட்டில் வசிக்கும் இரு பெரிய மதங்களுக்கிடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகின்றன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கு நைஜீரியாவின் கடுன்யா மாவட்டத்தில் உள்ள ஃபடான் கர்ஷி என்ற கிராமத்துக்குள் புகுந்த ஆயுதமேந்திய தீவிரவாதிகள், காக்கை, குருவியை சுட்டுத் தள்ளுவதைப் போல் 21 பேரை கொன்று சாய்த்தனர். …

Read More »

ஈராக்கில் கடத்தப்பட்டுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல்!!

ஈராக்கில் கடத்தப்பட்டுள்ள இந்திய தொழிலாளர்களை மீட்கும் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தீவிரவாதிகள் மறுத்துவிட்டதால் சிக்கல் நீடிக்கிறது. ஈராக்கில் இராணுவத்திற்கும் சன்னி தீவிரவாதிகளுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடத்தப்பட்ட இந்திய தொழிலாளர்களை மீட்க பல்வேறு முடிவுகளை எடுத்துவரும் மத்திய அரசு, செம்மறி சங்கம் மூலம் அவர்களிடம் பேச திட்டமிட்டுள்ளனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மறுத்து விட்டதாக அந்த சங்கம் கூறியுள்ளது. இதனால் தொழிலாளர்களை மீட்பதில் …

Read More »

முத்தக்காட்சியா முடியவே முடியாது! சொல்வது சிவகார்த்திகேயன்!!

முத்தக்காட்சியில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திக்கேயன். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் ஹீரோவானவர் சிவகார்த்திக்கேயன். மெரீனா தொடங்கி மான் கராத்தே வரை அவர் நடித்த படங்கள் அனைத்தும் இரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளது. குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியினால் சிவகார்த்திக்கேயனின் சம்பளம் பலமடங்கு உயர்ந்துள்ளது. அடுத்த படத்தில் பொலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதற்காக 6 கிலோ எடை கூடியிருக்கிறார் சிவகார்த்திக்கேயன். அவருடைய அப்பா …

Read More »

ஓராண்டு நிறைவு: தன்னைத் தானே படமெடுத்து அனுப்பிய க்யூரியாசிட்டி!!

சிகப்பு கோளான செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு அனுப்பியுள்ள ´க்யூரியாசிட்டி´ விண்கலம் நேற்றுடன் அக்கிரகத்தில் 687 நாட்களை கடந்துள்ளது. இது செவ்வாய் கிரகத்தின் ஓராண்டு காலமாகும். பூமியிலிருந்து ஏவப்பட்டு 8 மாத பயணத்துக்குப் பின் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்து, பத்திரமாக தரையிறங்கிய பின் அங்கிருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிகப்பு கோளில் தரையிறங்கிய இந்த விண்கலம் ஓராண்டு கடந்ததை …

Read More »

பிரியுமா திருச்சி? உதயமாகுமா ஸ்ரீரங்கம் மாவட்டம்?

தமிழகத்தின் திருச்சி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாகக்கொண்ட தனி மாவட்ட அறிவிப்பை 30ம் திகதி முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டை பகுதி கடந்த 1974ம் ஆண்டு திருச்சியில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகள் மட்டும் திருச்சி மாவட்டமாக இருந்து வந்தது. அத்தகைய சூழ்நிலையில் தான் திருச்சி …

Read More »

மைக்கேல் ஷூமேக்கரின் மருத்துவக் கோப்புகள் கொள்ளை!!

மைக்கேல் ஷூமேக்கரின் மருத்துவக் கோப்புகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் ஷூமேக்கரின் செய்தி தொடர்பாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் கார் பந்தயத்தில் 7 முறை உலகச் சாம்பியனாக இருந்த மைக்கேல் ஷூமேக்கரின் திருடப்பட்ட இரகசிய கோப்புகள் விற்பனைக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாக மைக்கேல் ஷூமேக்கரின் செய்தி தொடர்பாளர் சபீன் கெம் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் உண்மையானவையா என்பது தெளிவாக இல்லை என்றும் அவர் கூறினார். மருந்துவ ரீதியாக வைக்கப்பட்டிருந்த …

Read More »

ஈகுவடார்-பிரான்ஸ் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஈகுவடார் அணியும் பிரான்ஸ் அணியும் மோதின. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் ஈகுவடாரின் மிண்டா பவுல் செய்தார். ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் பிரான்சின் போக்பா அடித்த பந்தை ஈகுவடார் அணியின் மிண்டா லாவகமாக தடுத்தார். ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் பிரான்சின் சிசோகோ அடித்த பந்தை ஈகுவடார் கோல்கீப்பர் டோமிங்கஸ் லாவகமாக செயல்பட்டு தடுத்தார். ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் ஈகுவடாரின் நோபோ அடித்த பந்தை …

Read More »

ஹோண்டுராசை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சுவிட்சர்லாந்து

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஹோண்டுராஸ் அணியும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின. தொடக்கம் முதலே சுவிட்சர்லாந்து வீரர்களின் ஆதிக்கம் காணப்பட்டது. ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஷாகிரி அடித்த பந்தை ஹோண்டுராஸ் கோல் கீப்பர் வல்லாடரஸ் லாவகமாக தடுத்தார். ஆனால் 6வது நிமிடத்தில் ஷாகிரி கோல் அடித்து சுவிஸ் அணியின் கோல் கணக்கை துவக்கினார். ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை …

Read More »

மாசுபட்டுள்ள கங்கை நீர்: மூழ்கி எழுந்தால் புற்றுநோய் அபாயம்!!

ஐதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம் கங்கை நீரின் மாதிரிகளை சோதனை செய்து பார்த்தது. கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளாத் திருவிழாவின்போது சேகரிக்கப்பட்ட நீரின் மாதிரிகளே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அதில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கதிர்வீச்சு தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவிருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் பதவியேற்றபின் தெரிவித்திருந்தார். ஆயினும், இதில் …

Read More »

எந்திரன்-2 வருமா? வராதா?

ரஜினிக்கும், ஷங்கருக்கும் மட்டுமின்றி தமிழ் சினிமா வர்த்தகத்துக்கும் மைல்கல்லாக அமைந்த படம் எந்திரன். விஞ்ஞானி, ரோபோ என ரஜினி இரு வேடங்களில் நடித்த இப்படம் 150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. படத்தில் வெளிநாட்டு அனிமேஷன் நிறுவனங்கள் மேற்கொண்ட சில கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டுவதாக இருந்தது. எந்திரன் 2 -ம் பாகத்தை எடுக்க ஷங்கர் ஆர்வமுடன் இருக்கிறார். படத்தில் நடிக்க ரஜினிக்கும் விருப்பம் உள்ளது. ஆனால் அவரது உடல்நிலை …

Read More »

கரடியிடம் இருந்து சிறுவனை காப்பாற்றிய நாய்!!

கரடியிடம் இருந்து தனது 5 வயது எஜமானரை வளர்ப்பு நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது. ஜப்பானை சேர்ந்த 5 வயது சிறுவன் ஷிபா இனு. சம்பவத்தன்று இவன் தனது தாத்தா மற்றும் வளர்ப்பு நாயுடன் வடக்கு ஜப்பானில் உள்ள ஒடாடே பகுதியில் சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டான். அப்போது புதர் மறைவில் இருந்து ஒரு கரடி அவனை தாக்க பாய்ந்து வந்தது. அதை பார்த்த நாய் வழக்கத்தை விட சத்தமாக குரைத்தது. இதனால் …

Read More »

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி!!

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள எனது தலைமையிலான தமிழக அரசு, அவர்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரமழான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க எனது முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 9.11.2001 அன்று ஆணையிட்டிருந்தேன். அதன்படி, பள்ளிவாசல்களுக்கு …

Read More »

பூமி அளவிலான மிகப்பெரிய வைர நட்சத்திரம்!!

விண்வெளியில் பூமி அளவில் மிகப்பெரிய வைரத்தை அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிகவும் குளிர்ச்சியான வெளிப்படையாக தெரியும் வெள்ளை நிற சிறிய நட்சத்திரங்களை வானியல் ஆய்வாளர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வரிசையில் இப்போது மிகவும் குளிர்ச்சியான மங்கலான ஒரு நட்சத்திரத்தை விஸ்கான்சின் மில்வாகி பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் கப்லான் தலைமையிலான ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மற்ற நட்சத்திரங்களில் இருந்து இதன் தன்மை வேறுபட்டுள்ளது. அதன் கார்பன் படிகமாகி அதன் விளைவாக பூமியை …

Read More »

பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோவை வௌியிட்ட கும்பல்!!

உத்திரப் பிரதேச மாநிலம் முசாபர் நகரில் 20 வயது பெண்ணை எட்டு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவில் படமாக்கி, பேஸ்புக்கிலும் போட்டுள்ளனர். பலாத்காரம் செய்த கும்பலில் அந்தப் பெண்ணின் நண்பன் ஒருவனும் இருந்துள்ளான். அவன்தான் இந்த அக்கிரமச் செயலை வீடியோப் படமாக்கியுள்ளான். இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்துள்ளது. இதுகுறித்து தற்போது அப்பெண் பொலிஸில் புகார் கொடுத்துள்ளார். அதில், தனது நண்பனுடன் …

Read More »

ஈரானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போஸ்னியா

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஈரானும் போஸ்னியாவும் மோதின. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் போஸ்னியாவின் ட்செகோ அடித்த பந்தை ஈரானின் கோல் கீப்பரான ஹகிகி அற்புதமாக தடுத்தார். ஆட்டத்தின் 23வது ஓவரில் ட்செகோ மீண்டும் ஒரு கோல் அடித்து தான் இருப்பதை உறுதி செய்தார். ஆட்டத்தின் முதல் பாதி முடிவடையும் போது போஸ்னியா 2 கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. சிறிது …

Read More »

நைஜீரியாவை 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜெண்டினா

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் நைஜீரியாவும் அர்ஜெண்டினாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவின் சாபெல்டா பவுல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த நிமிடத்தில் ஓடம் விங்கிக்கும் இதே காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது. ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி அற்புதமான கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே நைஜீரிய அணியின் மூசா தன் பங்குக்கு ஒரு கோலடித்து அசத்தினார். அதன் …

Read More »

வடக்கு மீன் வளத்தை தமிழ்நாடு மீனவர்கள் கொள்ளையடிக்கின்றனர் – கோசல!!

வடக்கு மீனவர்களை பாதிக்கும் வகையில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர் என கடற்படை ஊடகப்பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். வடக்கு மீன் வளத்தை கொள்ளையிடும் தமிழ்நாட்டு மீனவர்களையே இலங்கை கடற்படை கைது செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த கைது தொடர்பில் கடற்படையை குற்றஞ்சாட்டுகிறது என வர்ணகுலசூரிய கூறினார். வடக்கு கடற்பரப்பில் அதிக மீன் வளம் காணப்படுவதாகவும், அதனை பிடிப்பதற்காக …

Read More »

2-வது போட்டியில் அபார வெற்றி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை

இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 257 ரன்களும், இங்கிலாந்து 365 ரன்களும் எடுத்தன. 108 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணியானது மேத்யூஸ் (160), ஜெயவர்தனே (79) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 457 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி …

Read More »

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இளைஞன் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி!!

மொனராகம மேல் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் கழுத்தறுத்துக் கொண்டுள்ளார். இதன்போது படுகாயமடைந்த நபர் தற்போது மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு கழுத்தறுத்துக் கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2012ஆம் ஆண்டு மெதகம, கொடகமுவ பிரதேசத்தில் நபர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் இவ் இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்டதன் …

Read More »

துப்பாக்கிகளுடன் இருவர் கைது!!

வென்னப்புவ பிரதேசத்தில் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ பொலிஸ் குழு ஒன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கிகள் இரண்டு, 3 துப்பாக்கி ரவைகள் உட்பட பல வெடி பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வென்னப்பு மற்றும் லுணுவில பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று (25) மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Read More »

தமிழக மீனவர்கள் 46 பேர் விடுதலை!!

இலங்கை தடுத்து வைக்கப்பட்டிருந்த 46 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த 24 மீனவர்கள் கடந்த 18-ம் திகதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதேபோல் ராமேஸ்வரம், பாம்பனைச் சேர்ந்த 22 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 24 புதுக்கோட்டை மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஊர்க்காவல் துறை நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். இதேபோல் ராமேஸ்வரம், …

Read More »

வாய்த் தர்க்கத்தால் 26 வயது இளைஞனின் உயிர் பறிபோனது!!

ஹபராதுவ, உணவடுன பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட மோதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உணவடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்பட்டாத அதேவேளை ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More »

திருமதி குலசேகரம்பிள்ளை கண்ணம்மா

திருமதி குலசேகரம்பிள்ளை கண்ணம்மா தோற்றம் : 27 பெப்ரவரி 1935 — மறைவு : 24 யூன் 2014 யாழ். புங்குடுதீவு ஊரதீவைப் பிறப்பிடமாகவும், மடத்துவெளியை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம்பிள்ளை கண்ணம்மா அவர்கள் 24-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா(ஊரதீவு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்கான இராமலிங்கம் பேரின்பம்(பெடுங்காடு) தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்- யாழ். …

Read More »

திருகோணமலை விபத்தில் இராணுவ சிப்பாய் பலி!!

திருகோணமலை, சல்லி சாம்பல்தீவு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ் வண்டியை மோட்டார் வண்டி முந்திச் செல்ல முயன்று விரைவாக பயணித்தவேளை, சாரதியால் மோட்டார் வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது மோட்டார் வண்டி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது மோட்டார் வண்டியின் சாரதி பஸ் சில்லுகளுக்குள் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். பொல்ஹகவெல, வீராகல பிரதேசத்தைச் சேர்ந்த 26 …

Read More »

மூன்று பேருக்கு நுவரெலிய மேல் நீதிமன்ற மரண தண்டனை!!

நுவரெலியா லிந்துல லோகி கூமூட் தோட்டத்தில் 1993ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய மூன்று பேருக்கு நுவரெலிய மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இன்று (25) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்களில் 4 பேர் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டதுடன் மூன்று பேருக்கு பதினைந்தரை வருட கடூழிய சிறைதண்டனை வழங்கப்பட்டதுன் 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. …

Read More »

ஜூலை 2 வரை வட்டரக்கே விஜித தேரர் விளக்கமறியலில்!!

ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட தேரரை ஜூலை 2ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணதுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொய் குற்றச்சாட்டை வழங்கிய காரணத்தினால் தேரர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற இளைஞன் கைது!!

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற இலங்கை இளைஞன் தமிழக உளவுத்துறை பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஜூன் 11ல், தனுஷ்கோடி கடலில் உயிருக்கு போராடி நீந்தி கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த சிந்துசனை 25, நாட்டுப்படகு மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் கரைக்கு கொண்டு வந்தனர். இலங்கையில் இருந்து கடவுச்சீட்டில் வந்த இவர், மீண்டும் இலங்கை செல்ல பாம்பன் மீனவர்களின் நாட்டுபடகில் ஏறியதாகவும்; தனுஷ்கோடி மணல் தீடையில் இறக்கி விட்டதால் கடலில் நீந்தி …

Read More »

140 யானைகள் மட்டுமே உள்ளன!!

தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்ட யானைகள் 140 மட்டுமே உள்ளதாக வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பதியப்படாத யானைகள் தொடர்பில் நாடு முழுவதும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் எப்.டீ.ரத்நாயக்க தெரிவித்தார். கடந்த 1991ஆம் ஆண்டு பதியப்பட்ட 350 யானைகள் இருந்ததாகவும் அவற்றில் 92 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை வேறு 90 யானைகள் தெஹிவளை மிருகக் காட்சிசாலை மற்றும் பின்னவல யானைகள் …

Read More »

பெண் ஒருவர் அதிபராகும் நேரம் வந்து விட்டது… ஆனால், அது நானில்லை என்கிறார் மிஷல்!!

அமெரிக்காவின் அதிபராக பெண் ஒருவரை தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார் தற்போதைய அதிபர் ஒபாமாவின் மனைவியான மிஷல் ஒபாமா. புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அமெரிக்காவில் வரும் 2016-ம் ஆண்டு நடக்க உள்ளது. இத்தேர்தலில், முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஹிலாரி கிளின்டன், ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் …

Read More »

கடற்படை தளபதியாக ஜெயந்த பெரேரா நியமனம்!!

இலங்கை கடற்படை தலைமை அதிகாரியாக பணியாற்றும் றியர் அட்மிரல் ஜெயந்த பெரேரா இலங்கை கடற்படை தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் கடற்படை தளபதியாக எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி பதவியேற்கவுள்ளார். றியர் அட்மிரல் ஜெயந்த பெரேரா 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் திகதி இலங்கை கடற்படையில் இணைந்துள்ளார்.

Read More »

ஒபாமாவிடம் நியமனக் கடிதம் பெறவுள்ளார் பிரசாத் காரியவாசம்!!

அமெரிக்காவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பிரசாத் காரியவாசம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்து பேசவுள்ளார். எதிர்வரும் 14ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராகக் கடமையாற்றிய பிரசாத் காரியவாசம் அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவராக கடந்த வாரத்தில் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவில் இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய ஜாலிய ஜெயசூரியவின் இடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய நியமனப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதியை …

Read More »

இந்தியாவுக்கான இலங்கை தூதராக சுதர்சன் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்!!

இந்தியாவுக்கான புதிய இலங்கை தூதராக சுதர்சன் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்தப் பதவியை வகித்த பிரசாத் கரியவாசம், அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சுதர்சன் செனவிரத்னவுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரதேனியா பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவராக பதவி வகித்து வந்த செனவிரத்ன, இலங்கையின் பாரம்பரியச் சின்னங்களைக் காக்கும் பணியை செய்து வந்தார். அத்துறையில் அவர் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, அமெரிக்க தொல்லியல் கழகத்தின் 2013ம் ஆண்டுக்கான “பாரம்பரிய …

Read More »

வட்டரக்கே விஜித தேரர் கைது!!

ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொய் குற்றச்சாட்டை வழங்கிய காரணத்தினால் தேரர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். கடும் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தேரர் இன்று வைத்தியசாலையிலிருந்து விடுதலையானதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பினரே தன்னை தாக்கியதாக …

Read More »

இலங்கை மீதான விசாரணை குழு ஆலோசகர்கள் நியமிப்பு!!

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழுவிற்கான ஆலோசகர்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் குழுவின் ஆலோசகர்களாக மார்ட்டி அத்திசாரி, சில்வியா கட்ரைட் மற்றும் அஸ்மா ஜஹங்கிர் ஆகியோரை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »