Home / செய்திகள் (page 10)

செய்திகள்

கடலில் மிதந்து வந்த பை! கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இலங்கை கடற்படை நேற்றைய (22) தினம் தலைமன்னார் கலங்கரை விளக்கத்திக்கு வடக்கு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு ரோந்துப் பணியின் போது 76 கிலோகிராம் ஈரமான கேரள கஞ்சாவை கைப்பற்றியது. இலங்கைக்கு கடல் வழியாக கொண்டு வரப்படும் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, தலைமன்னார் கலங்கரை விளக்கத்தின் வடக்கு கடல் பகுதியில் சிறப்பு ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான பை ஒன்று …

Read More »

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த அழைப்பு!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி குறித்த கூட்டம் அலரிமாளிகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

வட மத்திய மாகாண ஆளுநராக மஹிபால ஹேரத் பதவிப் பிரமாணம்!!

வட மத்திய மாகாண ஆளுநராக சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் வைத்து அவர் இன்று (23) பதவி பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More »

ஊரடங்கு காலத்தில் 1754 பேர் அதிரடியாக கைது, 477 வாகனங்கள் பறிமுதல்!!

ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறியதற்காக மொத்தம் 1,754 பேர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி உள்ளிட்ட 447 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக விளையாட்டு மைதானங்களில், வாகனங்களில் பயணம் செய்தல், வர்த்தகத்தில் ஈடுபடுவது மற்றும் பொது இடங்களில் மது அருந்திய குற்றச்சாட்டுக்களில் …

Read More »

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் தொடர்பில் வதந்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் உண்மைக்குப் புறம்பான தகவல்களில் பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம் நோயாளிகள் தொடர்பான விடயங்கள் நாளாந்தம் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் 1990 என்ற சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் தொடர்பு கொண்டு சுகாதார பிரிவுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் சுகாதார …

Read More »

அச்சத்திற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் போடப்பட்ட ஊடரங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் மக்கள் அச்சத்திற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கல்குடாப் பிரதேசத்தில் இன்று (23) பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். அத்தோடு பொதுமக்கள் மிகுந்த பயத்துடன் வியாபார …

Read More »

மக்களுக்காக அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டம்!!

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப் பகுதியிலும் மக்கள் தமது அத்தியாவசிய கடமைகளை முன்னெடுக்க கூடிய வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கமைய அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமது அத்தியாவசிய தேவைகள் குறித்து அறிவித்ததன் பின்னர் அத்தியாவசிய பொருட்களை கொண்டுச் செல்ல முடியும். அதேபோல் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் நபர்கள் தத்தமது பணியிடங்களுக்கு செல்வதற்கான இயலுமை உள்ளது. மேலும் நாட்டின் எந்தவொரு பகுதியில் இருந்தும் …

Read More »

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள வேண்டுகோள்!!!

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனுமதி பெற்ற வணிக வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற விசேட வங்கி கிளைகளை இன்று குறைந்தது இரண்டு மணித்தியாலங்கள் வரை திறக்குமாறு இலங்கை மத்திய வங்கி கேட்டுள்ளது. எனினும் கொடுக்கல் வாங்களை மேற்கொள்ள முடியுமானவரை யுவுஆ இயந்திரங்களையும் ஏனைய தொழினுட்பவசதிகளை பயன்படுத்துமாறு மத்திய வங்கி வாடிக்கையாளர்களை கேட்டுள்ளது. மேலும் கொடுக்கல் வாங்களை மேற்கொள்ளும் போது முடியுமானவரை அத்தியாவசிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு …

Read More »

கொரோனா வைரஸ் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 73 வயதான கிரேஸ் பியூஸ்கோ என்ற மூதாட்டி மற்றும் அவரது ஆறு பிள்ளைகளும் மிகப் பெரிய குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுக்கூடல் நிகழ்வுக்கு சென்று வந்த பிறகு அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தெரியவந்துள்ளது. …

Read More »

சுய ஊரடங்கு தொடங்கியது !!

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 315 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்த வேண்டும். மார்ச் 22 (இன்று) யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சுய ஊரடங்கை பின்பற்றவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் …

Read More »

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி!!

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு பொலிஸ் அனுமதி வழங்கியுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Read More »

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 790 பேர் கைது!!

நாட்டில் நிலவும் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 790 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அடங்களாக 156 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய், ´தனிமைப்படுத்தற்குரிய நோய்´ Quarantine and Prevention of diseases என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இதனை பிரகடனப்படுத்தியுள்ளார். தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, அந்த வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்டுள்ளார். இதற்கமைய, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு …

Read More »

மருந்தக உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

அனைத்து சில்லரை மருந்தக உரிமையாளர்களுக்கும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். விசேட வைத்தியர் ஒருவரின் வலிதான மருந்து சீட்டு இல்லாமல் குளோரோகுயின் “Chioroquine” மற்றும்கைரொக்சிகுளொரோகுயின் “Hydroxychioroquine” எனப்படும் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை / அறிவுறுத்தல்களை மீறும் ஒவ்வொரு நபரும் குற்றமிழைத்தவர் என குறிப்பிடப்பட்டுள்ள …

Read More »

கொரோனா வைரஸால் பாதிக்கவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். அதன்படி இதுவரை 80 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More »

ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 11 குடும்பங்கள்!!

மடு மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி தெரிவித்தார். சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரின் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னும் சந்தேகத்தில் குறித்த 11 குடும்பங்களும் அவர்களது வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த போதகர் ஒருவர் கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மத போதனைக் கூட்டம் ஒன்றை நடாத்தியுள்ளார். இந்த …

Read More »

பொதுத் தேர்தல் ஒத்திவைப்புடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல்!!

2020 பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் பொதுத்தேர்தலை அன்றைய தினம் நடாத்த முடியாது என்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1981 ஆம் இலக்க பொதுத் தேர்தல் சட்டத்தின் 24-3 சரத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய இந்த விசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

Read More »

22 முகாம்களில் சுமார் 3063 பேர் கண்காணிப்பில்!!

கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மாலம்பே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதேபோல் கொத்தலாவல வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார். இவ்வாறு நாட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் இதுவரை 300 க்கும் அதிகமானவர்கள் தங்க …

Read More »

மதுபான சாலைகளை மூடுமாறு உத்தரவு!!

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் விவசாயம் செய்யும் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தங்களுடைய கடமைகளை செய்து கொள்வதற்கு இடமளிக்குமாறு அரசாங்கம் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்தியவசிய பொருட்கள் தேவையான அளவு களஞ்சியப்படுத்த பட்டுள்ளதால் மக்கள் தேவையற்ற விதத்தில் அச்சப்பட தேவையில்லை எனவும் அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More »

அமலா பாலுக்கு 2 ஆம் திருமணம் முடிந்தது – புகைப்படம் இதோ!

நடிகை அமலா பால் தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த நடிகை, சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை படம் கூட மிக பெரிய வரவேற்பை பெற்றது. பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் பிரபலமானவர் நடிகை அமலா பால். இதன்பின் பல படங்களில் நடித்து தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார். ஆம் விக்ரம், விஜய் …

Read More »

இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட்டம்?

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது ஏற்புடையது என பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மக்கள் பொறுப்பற்று செயற்படுவதை கருத்தில் கொண்டு இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். தற்போது அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கு முன்னரான சூழலில் நாடு தற்போது பயணிப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். அதன் காரணமாக எதிர்வரும் வாரங்கள் மிகுந்த சவாலுக்குரியவை எனவும் பேராசிரியர் …

Read More »

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம்!!!

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம் மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதை தடுப்பதற்காகவே என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனூடாக கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நவீன் த சொய்சா தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலத்தில் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கக்கூடிய நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக பிரதி …

Read More »

ஐரோப்பாவில் 5 ஆயிரத்தை தாண்டிய உயிர் பலி!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவத்தொடங்கிய இந்த வைரஸ் உலகின் 160-க்கும் மேற்பட்ட அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. சீனாவில் பெரும் அளவில் …

Read More »

6 மாதங்களுக்கு அரிசி இலவசம்!!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் இரண்டு பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 206 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில முதல் மந்திரி மம்தா …

Read More »

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் கம்பஹாவில்!!

இந்நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் இலங்கையில் 65 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களுள் 18 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 17 பேர், புத்தளம் மாவட்டத்தில் 12 பேர், குருணாகல் மற்றும் களுத்தறை மாவட்டங்களில் நால்வர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 3 …

Read More »

ஊரடங்கு சட்டம் குறித்த அடுத்த அறிவிப்பு 22 ஆம் திகதி!

இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. புத்தளம், சிலாபம், நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவின் கொச்சிக்கடை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் நண்பகல் 12 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து விதமான ரயில் சேவைகளும் …

Read More »

ஊரடங்கு சட்டம் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறாக அமையாது!!

ஊரடங்கு சட்டம் அத்தியாவசிய சேவைகளை பராமரித்து செல்வதற்கு இடையூறாக அமையாது என அமைச்சரவை இணை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், விசேடமாக சுகாதார பிரிவு, பாதுகாப்பு பிரிவு, தனிநபர் பாதுகாப்புக் சேவைகள் , துறைமுகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் ஆகிய …

Read More »

யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!

மத வழிபாட்டுக்கான யாத்திரைகள், உல்லாச பயணங்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றை தடுப்பதற்கு மற்றுமொரு நடவடிக்கையாக குறித்த தடையை அரசாங்கம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பொது மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்கள் நடமாடும் இடங்களில் …

Read More »

கொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான காரணம் இதுதான்!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலுக்கான பிரதான காரணமாக அமைவது புகைப்பிடித்தல் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் வைத்திய ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த நிலைமை தொடர்பில் தொடர்ந்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தி வந்ததாக தெரிவித்தார். தற்போது காணப்படும் சட்டம் போதுமானதாக இல்லையென்றால் …

Read More »

முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்!!

இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் நேற்று (19) இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

மோட்டார் வாகனங்கள், அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்!!

அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த நடவடிக்கையினை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

Read More »

கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!

கிருமி நாசினிகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான ஆயிரம் லீட்டர் எத்தனோலை சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி கலால் திணைக்கள பணிப்பாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். இந்த எத்தனோல் தொகையை பயன்படுத்தி ஒரு இலட்சத்து இருபதாயிரம் லீட்டர் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

குழந்தை ஒன்று உட்பட மேலும் மூவருக்கு கொரோனா!!

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் தற்போது இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார். இவர்களுள் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

நாளை முதல் அரச மற்றும் தனியார் துறையினருக்கு விஷேட சலுகை!!

நாளை முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடமுறை தொடர்பில் ஊடகங்கள் ஊடாக தெளிவுபடுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Read More »

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரண்டு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் இருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். குறித்த நபர்கள் ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் இலங்கையில் 50 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் 212 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More »

பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக …

Read More »

வேட்பு மனுக்களை ஒப்படைப்பதற்கான இறுதி தினம் இன்று!!

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் இறுதி தினம் இன்றாகும். இன்று (19) நண்பகல் 12.30 மணி வரையில் இந்த பணிகள் இடம்பெறும். நேற்று (18) காலை வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணி ஆரம்பமானது. முக்கிய அரசியல் கட்சிகளைப் போன்று சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை கையளிப்பதில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றன. கொழும்பு மாவட்டத்தில் தற்பொழுது அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் தெரிவு அத்தாட்சி …

Read More »

கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!

தற்பொழுது உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸானது வடக்குப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துமேயாயின் வடக்கில் பாரிய உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் ஏற்கனவே நாம் யுத்தத்தாலும் பல்வேறு இடர்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் எனினும் மீண்டும் அவ்வாறு அழிவினை நாம் எதிர்நோக்க அதற்கு இடமளிக்க முடியாது. …

Read More »

மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார்!!

மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் உறுப்பினராக அவரது பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

கடந்த 36 மணி நேரத்தில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை!!

ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக மத்திய சீனாவின் ஹூபெய் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இந்த வைரசால் சீனா …

Read More »