Home / செய்திகள் / உலகசெய்திகள்

உலகசெய்திகள்

இதுவரை கொரோனாவால் உயிரிழப்பு இல்லாத மாநிலங்கள் !!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்தபோதும், 8 வடகிழக்கு மாநிலங்களில் இந்த தொற்று பாதிப்பு அதிகளவில் இல்லை. இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம், கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய காலத்தில், இந்த மாநிலங்களில் மருத்துவ பரிசோதனை வசதிகளோ, சிறப்பு ஆஸ்பத்திரிகளோ கிடையாது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று வரை …

Read More »

38 கோடி ரூபா போதைப்பொருள் கடத்திய நபர் கைது!!

கனடாவிலிருந்து 38.10 கோடி ரூபா மதிப்புள்ள போதைப்பொருளை அமெரிக்காவுக்கு கடத்திச் சென்றதாக இந்திய லொரி ஓட்டுநரை அமெரிக்க பொலிஸார் கைது செய்தனா். கனடாவின் ஒன்டரியோவில் இருந்து அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லொரியை குா்பிரீத் சிங் (30) என்ற இந்தியா் ஓட்டிச் சென்றாா். நயாகரா வீழ்ச்சியை கடந்து அமெரிக்காவின் அமைதி பாலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த லாரியை பொலிஸாா் சோதனையிட்டனா். சரக்கு லொரியில் 58 பெரிய அட்டைப் …

Read More »

காற்றின் மூலமே பெரும்பாலும் கொரோனா பரவல்?

கொரோனா நோய்த்தொற்று காற்றின் மூலமாகப் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த நோய் பொரும்பாலும் காற்றின் மூலமே பரவுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து அமெரிக்காவில் அண்மையில் ஓா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், வேதியியலுக்காக 1995 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மரியோ …

Read More »

ஜாா்ஜ் ஃபிளாய்டுக்கு இன்று இறுதிச் சடங்கு!!

பொலிஸினால் தாக்கப்பட்டு உயிரிழந்த கருப்பினத்தவா் ஜாா்ஜ் ஃபிளாய்டின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அமெரிக்காவில் கடந்த மாதம் 25 ஆம் திகதி பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டு ஜாா்ஜ் ஃபிளாய்டு உயிரிழந்தாா். அவரது மரணத்துக்கு நீதி கோரியும் நிறவெறிக்கு எதிராகவும் அமெரிக்காவில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், ஜாா்ஜ் ஃபிளாய்டின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஹூஸ்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அவரின் குடும்ப உறுப்பினா் …

Read More »

4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் !!

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் திகதி முதல் வருகிற ஜூலை 5 ஆம் திகதி வரை மின் கட்டணம் செலுத்த கடைசி திகதி உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்ட தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்கட்டணத்தை வருகிற ஜூலை 6 ஆம் திகதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு …

Read More »

உலக அளவில் கொரோனா பாதித்த 385,991 பேர் பலி !!

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,815 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,432,370 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, நோய்த்தொற்றுக்கு 1,169 போ் பலியானதைத் தொடா்ந்து, அங்கு அந்த நோய் பாதிப்பால் பலியானவா்களின் எண்ணிக்கை 385,991 ஆக உயா்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 31,69,243 இலட்சத்தை கடந்துள்ளது. தொற்று பாதித்தோர் 29,57,110 பேர் …

Read More »

விலை உயர்ந்த விவாகரத்து!!

உலகில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்து அமேசான் நிறுவன ஜனாதிபதி ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்து ஆகும். தனது பங்குகளில் 4 சதவீத பங்குகளை மெக்கன்சிக்கு வழங்கினார். அதன்மூலம் மெக்கென்சி இப்போது 48 பில்லியன் டொலர் சொத்துக்களைக் கொண்டு, உலகின் 4 வது பணக்கார பெண்மணி ஆக உள்ளார். இதேபோல், சீனாவிலும் ஒரு விலை உயர்ந்த விவகாரத்து சமீபத்தில் நடைபெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு: சீனாவின் காங்டாய் உயிரியல் …

Read More »

கொரோனா தாக்கி கோமாவில் இருந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!!

பிரேசில் நாட்டில் பிறந்து சில மாதங்களே ஆன டாம் என்ற ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதை அங்கு ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள புரோ கார்டியாகோ ஆஸ்பத்திரி உறுதி செய்தது. அந்த குழந்தையை அங்கு சிகிச்சைக்கு பெற்றோர் அனுமதித்தனர். அந்த குழந்தையின் உடல்நிலை மோசமானது. தொடர்ந்து கோமா நிலைக்கு சென்றது. 32 நாட்கள் கோமாவில் இருந்து வந்தது. செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது. இப்போது …

Read More »

எச்சரிக்கை – அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்!!

அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உருவாக உள்ள புயலுக்கு நிசர்கா பெயரிடப்பட்டுள்ளது. நிசர்கா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. நிசர்கா புயல் காரணமாக, மேற்கு இந்திய …

Read More »

கொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 இலட்சத்தை எட்டியுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3 இலட்சத்து 69 ஆயிரமாக உள்ளது. இதன்படி உலகில் இதுவரை 6,059,017 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 369,126 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்து உயிரிழப்போரை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இங்கு கொரோனா பாதித்து இதுவரை 103,776 பேர் பலியாகியுள்ளனர். அடுத்த இடத்தில் பிரிட்டன் (38,458), …

Read More »

வுகான் சந்தையில் கொரோனா உருவாகவில்லை – புதிய குழப்பம்?

கண்ணுக்கு தெரியாத இந்த கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே? சீனாவின் மத்திய நகரமான வுகானில் உள்ள விலங்குகள் சந்தையில் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி இந்த வைரஸ் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த வைரஸ் காட்டுத்தீ போல பரவத்தொடங்கியதும் அந்த சந்தை மூடப்பட்டு விட்டது. இந்த 5 மாத காலத்தில் சுமார் 200 நாடுகளில் இந்த கொடிய வைரஸ் கால் பதித்து விட்டது. அந்த வகையில், ஏறத்தாழ …

Read More »

சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ், சீனாவின் வுகான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதை சீனா மறுத்துள்ளது. அதே சமயத்தில், கொரோனா எப்படி உருவானது என்பது பற்றி விசாரணை நடத்த சர்வதேச விஞ்ஞானிகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பதாக சீன அரசு ஆலோசகரும், சீன வெளியுறவுத்துறை மந்திரியுமான வாங் …

Read More »

டிரம்ப் பயன்படுத்தும் மருந்தை தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம்!!

மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை மருத்துவ பரிசோதனை பாதுகாப்பு அச்சம் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நாடுகளில் நடைபெற்று வந்த சோதனை பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைட்ராக்சி குளோரோகுயின் கோவிட் 19 ஆல் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரியவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி …

Read More »

342, 097 பேர் பலி – அதிரும் உலக நாடுகள்!

உலகம் முழுவதும் 213 நாடுகள் / பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை கடந்தது. தற்போதைய நிலவரப்படி, 53 லட்சத்து 10 ஆயிரத்து …

Read More »

500 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம்!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், மிக்சிகன் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மேலும் பாதித்து உள்ளது. கனமழையால் ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் மிட்லேண்ட் கவுண்டியில் உள்ள ஈடன்வில் அணை மற்றும் சான்ஃபோர்ட் அணையில் உடைப்பு ஏற்பட்டது. அணைகளில் இருந்து தண்ணீர் ஆக்ரோஷமாக வெளியேறத் …

Read More »

வைரலாகும் பகீர் வீடியோ – புலம் பெயர்ந்த தொழிலாளர்களா?

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் பகீர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பகல் நேரத்தில் சாலையில் சென்ற நபரை இருவர் கொடூரமாக தாக்குகின்றனர். இருவரில் ஒருவர் தாக்குவதும், மற்றொருவர் தாக்கப்படும் நபரிடம் இருந்து பணத்தை பறிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. வைரல் வீடியோ டெல்லியின் பல்ஜீத் நகரில் எடுக்கப்பட்டது என்றும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிறார்கள் என்றும் தெரியவந்து இருக்கிறது. மேலும் தாக்குதலுக்கு ஆளான நபர் புலம் பெயர்ந்த தொழிலாளி இல்லை என்பதும், அவர் …

Read More »

WHO க்கு கெடு விதித்த அமெரிக்கா – சீனா பதிலடி!!

கொரோனா வைரஸ் தொற்று நோயை பொறுத்தமட்டில் சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் நிதி உதவியையும் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. 2 தினங்களுக்கு முன் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதானோமுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அனல் பறக்கும் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர், உலக சுகாதார நிறுவனம் 30 …

Read More »

கொரோனாவால் ஓரின சேர்க்கையாளர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் – ஐ.நா!

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 17 ஆம் திகதி ஹோமோபோபியா, பிபோயியா, டிரான்ஸ்போபியாவுக்கு எதிரான சர்வதேச நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் எல்.ஜி.பி.டி.ஐ. என்று அழைக்கப்படுகிற ஓரின சேர்க்கையாளர்கள், இரு பாலுறவினர், திருநங்கையர் உள்ளிட்டவர்கள் நலனுக்காக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளையொட்டி ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் நேற்று ஒரு செய்தி விடுத்துள்ளார். அந்த செய்தியில் அவர், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகிறபோது, அது மாற்று பாலுறவு …

Read More »

சீன தலைநகரில் இனி முக கவசம் அணிய தேவையில்லை!!

சீனாவின் மத்திய நகரமான வுகானில் டிசம்பர் 1 ஆம் திகதி கொரோனா வைரஸ் தென்பட்டது. இந்த 5 மாத காலத்தில் ஏறத்தாழ 200 நாடுகளில் பரவிவிட்டது. 46 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ள இந்த வைரஸ், 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடுகள் வலியுறுத்தி வரும் 2 அம்சங்களில் முதல் அம்சம், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். …

Read More »

கொரோனா தொற்றுநோயை 100% தடுக்கக்கும் Antibody கண்டுபிடிப்பு !!

அமெரிக்காவின் கலிபோர்னியா பயோடெக் நிறுவனத்தின் கொரோனா வைரஸூக்கு எதிரான ஒரு ஆன்டிபாடியைக் கண்டுபிடித்துள்ளனர், இது கொரோனா வைரஸை முற்றிலும் தடுக்கிறது. சான் டியாகோவை தளமாகக் கொண்ட சோரெண்டோ தெரபியூடிக்ஸ் பயோடெக் நிறுவனம் அதன் எஸ்.டி.ஐ 1499 என்ற ஆன்டிபாடி மருந்து 100 சதவீதம் ஆரோக்கியமான மனித உயிரணுக்களில்கொரோனா வைரஸை நுழைவதைத் தடுத்தது பரிசோதனையில் தெரியவந்து உள்ளதாக கூறி உள்ளது. சோரெண்டோ வெளியிட்டு உள்ள அறிக்கியைல் ஒரு மாதத்திற்கு 200,000 டோஸ் …

Read More »

விஷ சாராயம் குடித்த 35 பேர் பலி!!

கொலைகார கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. அதன் அண்டை நாடான மெக்சிகோவில் கொரோன வைரஸ் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 42 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மெக்சிகோ முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக …

Read More »

ATM மூலம் ஏழைகளுக்கு இலவச அரிசி!!

இந்தோனேஷியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அங்கு 14 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் அந்த நாடு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. சிறு, குறு தொழில்களில் ஈடுபடுவோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அங்கு கடந்த 6 வாரங்களில் 20 …

Read More »

70% சிறை கைதிகளுக்கு கொரோனா!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் லம்போக் என்ற இடத்தில் உள்ள மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களில் சுமார் 70 சதவீத கைதிகளுக்கு, அதாவது 792 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறை ஊழியர்கள் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுபோல், கலிபோர்னியா மாகாணத்தில், டெர்மினல் தீவில் உள்ள மத்திய சிறையில் பாதி கைதிகளுக்கு, அதாவது 644 பேருக்கு …

Read More »

கொரோனா சீன ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டது – ஆதாரம் உண்டு!

உலகையே உலுக்கி வரும் கொரோனா அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 10 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் உள்ள ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா …

Read More »

பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு சட்டமா அதிபர் அனுமதி!!

பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

மிரட்டும் கொரோனா – இதுவரை 202,880 பேர்பலி!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரஸ் தாக்கமும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. …

Read More »

ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்துங்கள் – அதிரடி உத்தரவு!!

உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையேயான பதற்றம் தனிந்தபாடில்லை. அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், பாரசீக வளைகுடா பகுதியின் சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15 ஆம் திகதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு …

Read More »

எச்சரிக்கை – ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம்!!

உலக அளவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 இலட்சத்தை தாண்டிவிட்டது. பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை கடந்து விட்டது. முதலில் கொரோனா தோன்றிய சீனாவில் இயல்புநிலை திரும்பி வருவதால் அங்கு அலுவலகங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால், அங்கும் படிப்படியாக தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு ஊரடங்கால் மக்கள் …

Read More »

கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம்!!

புதிய கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம் என ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தொடர்பான பேராசிரியர் பேராசிரியர் சாரா கில்பேர்ட் (Professor Sarah Gilbert) தெரிவித்துள்ளார். எனினும் முறையான வகையில் நிதி கிடைக்குமானால் இந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி (Vaccinology) ஒன்றை தயாரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை விட தடுப்பூசி மூலம் அதிக எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் எனவும் …

Read More »

அறிகுறிகள் இல்லாமலேயே கொரோனா – விஞ்ஞானி வேதனை!!!

கொரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 500 க்கும் மேல் உயர்ந்துவிட்டது. பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பு தும்மல், இருமல், சளி, காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த விதமான எந்த அறிகுறிகளும் தென்படாமல் தொற்று பரவுவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக …

Read More »

26,033 பேர் பலி – நிலை குலைந்த அமெரிக்கா!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1,981,239 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 1,392,599 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 478,425 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு …

Read More »

உலகளவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்தது!!

உலகளவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டியது. சர்வதேச அளவில் இதுவரை 20,00,065 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 51,603 பேரின் உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா …

Read More »

இத்தாலியில் கொரோனா வைரஸூக்கு 100 டொக்டர்கள் பலி !!

உலக அளவில் கொரோனா வைரஸூக்கு அதிகம்பேர் பலியான நாடாக இத்தாலி திகழ்கிறது. இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சிகரமான தகவலாக, அங்கு கொரோனாவுக்கு இதுவரை 100 டொக்டர்கள் பலியானதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் வேலையில் சேர்ந்த ஓய்வுபெற்ற டொக்டர்களும் அடங்குவர். இதை அந்நாட்டு சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. இதுபோல், 30 தாதிகள் மற்றும் மருத்துவ உதவியாளர்களும் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர், மருத்துவ துறையில் …

Read More »

சீனாவுக்கு ஆதரவு – அச்சுறுத்தும் அமெரிக்கா!!

கோவிட்-19 நோய்த்தொற்று விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார நிறுவனத்திற்கு, அமெரிக்கா வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்தவது குறித்து சிந்தித்து வருவதாக அதிபர் டிரம்ப் கூறியதையடுத்து, இது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் என்று சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். முன்னதாக உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக உள்ளதாக அதிபர் …

Read More »

உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம்!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆரம்ப காலத்தில் கொரோனாவின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வைரஸ் அசுர வேகத்தில் பரவத் தொடங்கியதும் சுகாதார நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தினார். அதேசமயம் கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் என்ற விஷயத்தை …

Read More »

கொரோனா மருந்து தொடர்பில் வெட்கம் – டிரம்ப் புலம்பல்!!

அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் வேக, வேகமாக பரவி வருகிறது. அங்கு ஏறத்தாழ 25 கோடி மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தும் கூட கொரோனா வைரஸ் “விட்டேனா, பார்” என்று சொல்கிற வகையில் தன் ஆதிக்கத்தை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல் கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையத்தின் புள்ளி விவரப்படி அமெரிக்காவில், அந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 68 …

Read More »

சீன இறைச்சி சந்தைகளில் வவ்வால், பூனை, முயல் விற்பனை அமோகம் !!

சீனாவில் பாம்பு, பூனை, வவ்வால்களின் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள இறைச்சி சந்தையில் இருந்து தான் கடந்த டிசம்பர் மாதம் வைரஸ் பரவியது. இந்த சந்தையில் இறால் விற்கும் பெண் ஒருவர் தான் உலகின் முதல் கொரோனா நோயாளி என தெரிய வந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக சீனாவை உலுக்கிய …

Read More »

அமெரிக்க வரலாற்றில் முதல்முறை நடக்கும் சம்பவம்!!

கொரொனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 2 டிரில்லியன் டொலர்கள் மதிப்பிலான நிவாரணத் தொகைக்கு கையெழுத்திட்டார் அந்நாட்டு ஜனாதிபதி டொனாலட் டிரம்ப். அமெரிக்க வரலாற்றிலேயே கையெழுத்தான மிகப் பெரிய நிவாரண நிதி இதுதான். ஜனநாயக கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும், தங்கள் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாக இருந்து இதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக ஜனாதிபதி டிரம்ப் இரு கட்சியினருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார். ஆண்டுக்கு 75 ஆயிரம் டொலர்களுக்கு குறைவாக …

Read More »

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது!!

அமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், உயிரிழப்பு 1000ஐ தாண்டி உள்ளது. உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசின் பிடியில் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றபோதிலும், கடந்த சில தினங்களாக புதிய நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இறப்பு விகிதமும் பெருமளவில் உயர்ந்து வருகிறது. …

Read More »

கொரோனா வைரஸ் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 73 வயதான கிரேஸ் பியூஸ்கோ என்ற மூதாட்டி மற்றும் அவரது ஆறு பிள்ளைகளும் மிகப் பெரிய குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுக்கூடல் நிகழ்வுக்கு சென்று வந்த பிறகு அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தெரியவந்துள்ளது. …

Read More »