Home / செய்திகள் / இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!!

யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைமை சுமூகமாக காணப்படுகின்றது எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளது. அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இன்று 323 குடும்பங்களைச் சேர்ந்த 595 நபர்கள் மட்டுமே சுயதனிமைப்படுத்தலுக்கு …

Read More »

பரீட்சை நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு அதிகரிப்பு!!

நாடு முழுவதிலும் தற்போது நடைபெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களை covid-19 தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். தற்போது உயர்தர பரீட்சை நடைபெறும் மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 2648 ஆகும். அத்தோடு இவ்வாறு பரீட்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படுகின்ற பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்கங்களுக்கு …

Read More »

ரிஷாட் பதியுதீன் விளக்கமறியலில்…!!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் அவர் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று (19) காலை தெஹிவளையில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

வன்னியின் சுகாதார நிலவரம் தொடர்பாக டக்ளஸ் – பவித்ரா கலந்துரையாடல்!!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறையை நீக்கி வைத்தியசாலையின் முழுமையான செயற்பாட்டிற்கு வழியேற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அவசர தேவையாக காணப்படும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினை உருவாக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு மாகாண சுகாதார தரப்பினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த வெள்ளிக் கிழமை(16) சுகாதார அமைச்சர் பவிதிரா வன்னியாராச்சி மற்றும் …

Read More »

சற்றுமுன் : இலங்கையில் மேலும் 40 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த19 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 21 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மினுவங்கொட கொத்தணியில் இதுவரையில் 2,162 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

Read More »

ரிஷாட் பதியுதீன், சஜித் பிரேமதாசவின் வீட்டில் மறைந்திருக்ககூடும்!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அல்லது அவருக்கு ஆதரவு வழங்கும் நபர் ஒருவரின் வீட்டில் ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்ககூடும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார். கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ரிஷாட் பதியுதீன் உடனடியாக கைது செய்யப்படவேண்டும், …

Read More »

வவுனியாவில் 4 கஞ்சா செடிகள் மற்றும் துப்பாக்கி மீட்பு : ஒருவர் கைது!!

வவுனியா, முருகனூர் பகுதியில் 6 அடி நீளமான கஞ்சா செடி நான்கு மீட்கப்பட்டதுடன், துப்பாக்கி ஒன்றும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இன்று (18) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில் பொலிஸ் …

Read More »

5 தேரர்களுக்கு கொரோனா!!

மதுகம ஓவிடிகம மற்றும் பதுகம புதிய காலனி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் விகாராதிபதி ஒருவரும் மற்றும் நான்கு தேரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், 11 பெண்களும் அடங்குவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். இவர்கள் கடந்த 07 ஆம் திகதி அனுராதபுரத்திற்கு சுற்றுலா பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

தொழிற்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களை இனங்காணும் நடவடிக்கை!!

இலங்கை முதலீட்டுச் சபைக்கு கீழுள்ள தொழிற்சாலைகளில் தற்போதைய நிலையில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார். முதலீட்டுச் சபைக்கு கீழுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் உள்ளடக்கும் வகையில் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கொரோனா அவதான நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கை முதலீட்டுச் சபை கடந்த சில மாதங்களாவே …

Read More »

இலங்கைக்கு 4 PCR பரிசோதனை இயந்திரங்களை வழங்கிய அவுஸ்திரேலிய அரசு !!

அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை மற்றும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 பி.சீ.ஆர் சோதனை இயந்திரங்களை இலங்கை கடற்படைக்கு, கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அண்மையில் வழங்கியது. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் வகுத்துள்ள ஒருங்கிணைந்த பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக, கடற்படை கடல் மண்டலத்தில் மேற்கொள்ளும் வழக்கமான நடவடிக்கைகளின் போது கடற்படைக்குத் தேவையான திறமையான மற்றும் பயனுள்ள பி.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொள்வதுக்காக இந்த …

Read More »

சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மழை நிலைமை : காங்கேசந்துறையில் இருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ …

Read More »

ரிஷாட் பதியுதீனை கைது செய்யமுடியாததையிட்டு சி.ஐ.டியினர் வெட்கப்படவேண்டும்!!

தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஐந்தாண்டு வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையகத்துக்கு இன்று (17) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ” உலகிலுள்ள மிகவும் பழமையான தேயிலை ஆராய்ச்சி நிலையங்களில் எமது நாட்டிலுள்ள இந்த ஆய்வு நிலையம் 2ஆவது இடத்தை வகிக்கின்றது. அதற்கு 95 வருடகால …

Read More »

ரிஷாட் பதியுதீனின் விடயத்தில் அரசு நீதியாக நடந்துகொள்ள வேண்டும்!!

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் விடயத்தில் அரசு நீதியாக நடந்துகொள்ள வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசித்து வரும் மக்கள், தமது வாக்குகளை மன்னாரில் அளிப்பதற்காக ´வடக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பின்´ நிதி ஒதுக்கீட்டில், அரச பேரூந்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர், அப்பணம் மீள அவ்வமைப்பினால் அரசுக்கு செலுத்தப்பட்டது. இதன் பின்னரும், தொடர்ந்து …

Read More »

அனைத்து மிருக்காட்சி சாலைகளுக்கும் பூட்டு!!

கொவிட் -19 தொற்று நிலைமை காரணமாக நாட்டின் அனைத்து மிருக்காட்சி சாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இன்று (17) முதல் அனைத்து மிருக்காட்சி சாலைகளையும் மூடுமாறு பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல் மிருக்காட்சி சாலைகளினுள் நுழைவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More »

இலங்கையில் மேலும் 42 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 20 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 22 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,972 ஆக அதிகரித்துள்ளது.

Read More »

குவைத்தில் இலங்கை பணிப் பெண்கள் பலருக்கு பலருக்கு கொரோனா !!

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பான வீட்டிற்கு இலங்கை பணிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. தூதரக அதிகாரிகள் குழு மற்றும் குறித்த வீட்டில் நீண்ட காலமாக பணியாற்றும் பணிப்பெண்கள் 160 க்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் – 19 தொற்று ஏற்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்;டு இதனை தெரிவித்துள்ளது. ஆகவே தற்போதைய சூழலில் அங்குள்ள பாதுகாப்பு வீட்டில் தங்குமிட வசதி போதாமையால் இனிமேல் வீட்டுப் …

Read More »

20 தொடர்பான விவாதம் குறித்து கட்சி தலைவர்களிடையே கலந்துரையாடல் !!

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள சரத்துக்கள் அரசியல் யாப்பிற்கு அனுகூலமானதா இல்லையா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள முடிவு சபாநாயகரினால் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் நடத்தப்படும் நாட்கள் குறித்து கட்சி தலைவர்களிடையே கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் பாராளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று (16) நடைபெறவுள்ளது.

Read More »

முகக்கவசம் அணிவதால் ஏற்படும் பயன்குறித்து விளக்கம் !!

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முகக்கவசத்தை அணிவதன் மூலம் சுமார் 70 சதவீதத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயரூபன் பண்டார கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இந்த தொற்று சமூகத்தின் மத்தியில் பரவில்லை என்றும் கூறினார். இலங்கையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட …

Read More »

ரியாஜின் மனுவை நிராகரிக்குமாறு அருட்தந்தை மனு தாக்கல்!!!

தான் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மீண்டும் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீனின் சகோதரன் ரியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை சார்பில் செத் சரண நிறுவனத்தின் பணிப்பாளர் லோரன்ஸ் ரமநாயக்க அருட்தந்தை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இடையீட்டு மனுவொன்றை …

Read More »

இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும், குறிப்பாக …

Read More »

கொவிட் தடுப்பு ஒழுங்கு முறைகள் – வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் கைச்சாத்திட்டார்!!

கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காகு தேவையான புதிய ஒழுங்குமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கைச்சாத்திட்டுள்ளார். அதன்படி, குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (15) நள்ளிரவு வௌியிடப்படவுள்ளது.

Read More »

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும், குறிப்பாக …

Read More »

பல்கலைகழக மருத்துவ பீடங்களில் PCR பரிசோதனை!!

பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பல்கலைகழக மருத்துவ பீடங்களின் ஒத்துழைப்மை வழங்குமாறு சுகாதார அமைச்சு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார அமைச்சின் செலாளரினால் இது தொடர்பில் நேற்று (14) எழுத்து மூலமாக கோரிக்கை விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படைய அனைத்து பல்கலைகழக துணைவேந்தர்களும் அதற்கு சார்ப்பாக பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஶ்ரீஜவர்தனபுர, காலி, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பேராதெனிய பல்கலைகழகங்களில் இந்த நடவடிக்கையை விரைவில் ஆரம்பிப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி குறித்த பகுதியில் முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார். இன்று இனங்காணப்பட்ட பெண் அலுத்கம பிரதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் களுத்துறை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அவர் வெலிகந்த கொவிட் சிகிச்சை வைத்தியசாலைக்கு …

Read More »

இன்றைய காலநிலை மாற்றம்!!

மேல், சப்ரகமுவ, மத்தியமற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் …

Read More »

தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டத்தை மீறிய 11 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டத்தை மீறிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டத்தை மீறிய 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரிதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறக்க தடை விதிப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் விற்பனை நிலையங்களை திறப்பது தொடர்பில் …

Read More »

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, இதுவரை நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5038 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 3328 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 1697 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Read More »

பிரதமரிடம் கையளிக்கப்பட்ட 90 மில்லியன் ரூபாய் காசோலை!!

2019 ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் (ரூ.89,895,000) பெறுமதியான காசோலை இன்று (13) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் சிறியான் டி சில்வா விஜயரத்னவினால் குறித்த காசோலை பிரதமரிடம் வழங்கி வைக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 5 …

Read More »

ரிஷாடை கைதுசெய்ய பிடியானை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்!!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்தின் ஊடாக பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பொதுமக்களின் பணத்தை தவறான முறையில் பயன்படுத்தி மற்றும் தேர்தல் சட்ட திட்டங்களை மீறி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தோரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் ஊடாக அழைத்து சென்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு …

Read More »

இன்றைய காலநிலை விபரம்!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை …

Read More »

நிறுவன ஊழியர்களின் தகவல்களை திரட்டுமாறு கோரிக்கை!!

எதிர்வரும் 3 தினங்களுக்குள் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிள் சேவையாற்றக்கூடிய ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை புதுப்பித்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார். தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய நிலமையின் அடிப்படையில் தேவை ஏற்படின் புலனாய்வு பிரிவிற்கு தகவல்களை வழங்குவதற்கு நிறுவன பிரதானிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் …

Read More »

மாணவியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டவருக்கு 7 வருட கடூழிய சிறை !!

16 வயதுக்கும் குறைந்த பாடசாலை மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இத்தீர்ப்பினை நேற்று (12) வழங்கியுள்ளார். இவ்வாறு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளவர் திருகோணமலை, மொரவெவ, குணவர்தனபுர பகுதியைச் சேர்ந்த சானக்க என்று அழைக்கப்படும் கிறிஸ்தோம்பூ பதுகே சுரங்க சில்வா (30 வயது) எனவும் தெரியவருகின்றது. …

Read More »

இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது!!

மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சோதனைச்சாவடி ஒன்றில் நேற்று (12) இரவு 9 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. இதன் போது சந்தேக நபர்கள் இருவரும் பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளையும் சூட்சுமமாக மறைத்து அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் பகுதிக்கு எடுத்துச் செல்லும் போது சோதனைச் சாவடியில் வைத்து கைதாகினர். இவ்வாறு …

Read More »

தனிமைப்படுத்தப்பட்ட மன்னார் கிராமங்கள் வழமைக்கு!!!

நேற்றைய தினம் (11) தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள் இன்று (12) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

Read More »

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

மேல், சப்ரகமுவ, மத்தியமற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் …

Read More »

இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இன்றி வைரஸை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம்!!

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் கொவிட் -19 வைரஸ்சை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது அரசாங்கத்தின் நோக்கமென விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்காக பொது மக்கள் சுகாதாரப் பிரிவினர் வழங்கும் ஆலோசனைகளை முறையாக பின்பற்றுவது அவசியம் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறினார். ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். …

Read More »

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை!!

எதிர்வரும் 08 ஆம் மற்றும் 09 ஆம் திகதிகளில் கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் துணை தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கையில் ஒன்றை வெளியிட்டு வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் மரணங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஏற்றுமதி சுற்றறிக்கை தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள 011-233 8836 மற்றும் 011-2335942 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

வௌிநாடுகளிலிருந்த எவரும் எமது தொழிற்சாலையை அணுகவில்லை!!

இந்தியா அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தும் எந்தத் தரப்பினரும் மினுவங்கொடை தொழிற்சாலையை அணுகவில்லை என பிரண்டிக்ஸ் நிறுவனம் நிறுவனம் தெரிவித்துள்ளது. மினுவங்கொடையில் பிரண்டிக்ஸ் தொழிற்சாலையில் கண்டறிந்த COVID-19 தொற்று தொடர்பாக எழுந்த வினாக்கள் குறித்த தெளிவுபடுத்தும் நோக்கில் வௌியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், எங்கள் பிரண்டிக்ஸ் நிறுவனம், மினுவங்கொடையில் அமைந்துள்ள எங்கள் தொழிற்சாலையில் ஏற்பற்ற COVID-19 நெருக்கடியை வழிநடத்தும் சவாலை தொடர்ந்து எதிர்கொள்கிறது. இந்த செயல்முறை முழுவதும், …

Read More »

போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் !!

கஞ்சா மற்றும் ஏனைய போதைப்பொருள் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் காணப்படும் பொறிமுறையை பலப்படுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதில் காணப்படும் மோசமான சுகாதார நிலைமைகள் தொடர்பில் சமூகத்தை விழிப்பூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்றைய (07) கேள்வி நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். கஞ்சா பயன்பாட்டின் …

Read More »

நிலக்கரி கொள்வனவினால் 1.1 பில்லியன் ரூபா நஷ்டம்!!

2015ஆம் ஆண்டு நிலக்கரிக் கொள்வனவுக்காக கேள்விப்பத்திரங்கள் கோரும்போது நிலக்கரியின் அளவு தொடர்பில் குறிப்பிடப்படாமையினால் 1.1 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக நேற்றையதினம் (06) நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவின் (கோப்பு) விசாரணைகளில் புலப்பட்டது. அத்துடன், லங்கா நிலக்கரி கம்பனி நீண்டகால விலைமனுக் கோரல் நடைமுறைகளுக்குச் செல்லாமல் கொள்முதல் பொறிமுறைக்கு அப்பாற் சென்று குழுகிய கால நடைமுறையின் கீழ் நிலக்கரியைக் கொள்வனவு செய்திருப்பதும் இதன்போது தெரியவந்தது. லங்கா நிலக்கரி கம்பனி …

Read More »