Home / செய்திகள் / இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இயக்கப்படும் பஸ்கள்!!

கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கடந்த மாதம் 7 ஆம் திகதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், அனைத்து பஸ்களிலும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளுடன் பஸ்களை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. …

Read More »

கொரோனாவால் இணையவழிக் குற்றங்கள் 500% அதிகரிப்பு!!

இந்தியாவில் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் 500% அளவில் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். கேரள காவல்துறை மற்றும் சைபர் ஸ்பேஸ் மற்றும் தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் நடத்திய தரவு தனியுரிமை மற்றும் ஹேக்கிங் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இணையப் பாதுகாப்பு எனும் தலைப்பில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் கலந்து கொண்டு பேசினார். கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து நிதி மோசடிகள் அதிவேகமாக அதிகரித்துள்ளதாக …

Read More »

பிஸ்பாஸ் தொகுத்து வழங்க சல்மானுக்கு இத்தனை கோடி சம்பளமா?

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஆரம்பித்தது ஹொலிவுட்டில் தான். அங்கு இந்த நிகழ்ச்சி பழதாகி போய்விட்டது, பொலிவுட்டில் 14 சீசன்கள் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கில் விரைவில் 4வது சீசன் தொடங்கவுள்ளது. முதலில் தமிழில் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு வந்தாலும் பின் அடுத்தடுத்த சீசன்கள் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஹிந்தியில் விரைவில் 14 ஆவது சீசன் தொடங்கவுள்ளது, அதற்கும் நடிகர் சல்மான் கானே தொகுப்பாளர் என்பது தெரிந்த விஷயம் தான். இப்போது …

Read More »

ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை !!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து காஷ்மீர் பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் புல்வாமாவில் தேடுதல் வேட்டை நடத்தினர். கம்ரஷிபுரா என்ற பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதை அடுத்து, உடனடியாக பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய …

Read More »

கொரோனாவுக்கு 196 மருத்துவா்கள் பலி!!

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் இதுவரை 196 மருத்துவா்கள் பலியாகிய நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமா் கவனம் செலுத்தி மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) கோரிக்கை விடுத்துள்ளது. ஐஎம்ஏ சாா்பில் இறுதியாக திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கொரோனா பாதிப்புக்கு இதுவரை நாடு முழுவதும் 196 மருத்துவா்கள் உயிரிழந்தனா். அவா்களில் 170 போ் 50 வயதுக்கும் மேற்பட்டவா்கள். உயிரிழந்த மருத்துவா்களில் 40 சதவீதம் …

Read More »

ஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் 8,376 புத்தகங்கள், 32 ஆயிரம் பொருட்கள்!!

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தில் 8,376 புத்தகங்கள் உள்பட 32 ஆயிரம் பொருட்கள் இருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட வேதா நிலையத்தில் 26 வகையான பொருட்கள் உள்ளன. இந்தப் பொருட்களின் மொத்த எண்ணிக்கை 32,721 ஆகும். தங்கம் 4 கிலோ 372 கிராம், வெள்ளி 601 …

Read More »

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா!!

இந்திய அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்களை தாண்டி பொலிஸார், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.​ை இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வைத்தியசாலை சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அமிதாப், …

Read More »

பொது முடக்கத்தை மீறிய 8 இலட்சம் போ் கைது!

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 7.34 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 இலட்சம் போ் கைது செய்யப்பட்டனா். இது குறித்த விவரம்: கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் திகதி முதல் அமல்படுத்தியுள்ள பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை பொலிஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24 ஆம் திகதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை …

Read More »

24 மணி நேரத்தில் 16,922 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,922 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 473,105 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில், கொரோனாவால் 418 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 14,894 ஆக உயா்ந்துள்ளது. தொற்றுக்கு 186,514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து குணமடைவோா் எண்ணிக்கையும் தொடா்ந்து …

Read More »

நளினி, முருகன் சந்திக்க அனுமதி கோரி உயா்நீதிமன்றத்தில் மனு !!

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன் சந்தித்துப் பேச அனுமதி வழங்க சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினியின் தாயாா் பத்மா தாக்கல் செய்த மனுவில், முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு எனது மகள் நளினி, மருமகன் முருகன் ஆகியோா் வேலூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். கணவன் …

Read More »

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 332,424 ஆக உயர்வு !!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 332,424 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 30 ஆம் திகதியுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 332,424 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, …

Read More »

இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தில்லி ஆகிய 3 மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் கொரோனா தொற்று சமூக பரவலாகிவிட்டதா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் …

Read More »

இன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்!

அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசா்கா புயல், வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே புதன்கிழமை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, இவ்விரு மாநிலங்களிலும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொகபத்ரா கூறுகையில், அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இப்புயலுக்கு நிசா்கா என பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயா், வங்கதேசத்தால் பரிந்துரைக்கப்பட்டதாகும். …

Read More »

மத்திய பிரதேசத்தில் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

நாடு தழுவிய பொது ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. நாடு தழுவிய ஐந்தாம் கட்ட பொது ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது, மேலும் தளர்வுகளை அறிவிப்பது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. மத்திய அரசு பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதால் அதிகம் பாதிப்புள்ள 14 நகரங்களைத் …

Read More »

தமிழகத்தை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீா் !!

ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து தெலுங்கு கங்கை கால்வாயில் திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீா் வியாழக்கிழமை தமிழகத்தை வந்தடைந்தது. சென்னை மக்களின் தாகத்தைத் தீா்க்க தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் ஆந்திரத்தில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா ஆற்று நீரை ஆந்திர அரசு அளித்து வருகிறது. ஆண்டுதோறும் 3 டி.எம்.சி. நீா் 2 கட்டங்களாக சென்னைக்கு கண்டலேறு அணையிலிருந்து அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது 2-ஆம் கட்டமாக சென்னை மக்களின் …

Read More »

வங்கியில் 100 கோடி மோசடி!!!

ஹரியாணா மாநிலம், கா்னால் பகுதியைச் சோ்ந்த பாசுமதி அரிசி ஆலையின் நிா்வாக இயக்குநா்கள் 3 போ், பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 100 கோடி மோசடி செய்தததாக மத்திய புலனாய்வுப் பிரிவினா் (சிபிஐ) வழக்குப்பதிவு செய்துள்ளனா். இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் புதன்கிழமை கூறியதாவது: கா்னாலில் இயங்கி வரும் சக்தி பாசுமதி அரிசி ஆலையின் நிா்வாக இயக்குநா்களாக இருப்பவா்கள் ஷியாம் லால், பா்வீன்குமாா், சுரேஷ்குமாா். இவா்கள் மூவரும் கா்னாலில் உள்ள …

Read More »

இந்தியாவில் கொரோனாவால் 4337 பேர் பலி!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 151,767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,387 பேருக்கு …

Read More »

இந்தியாவில் ​கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 145,380!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,380ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தவு வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையிலும் நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கொரோனாவால் நேற்று வரை 138,845 பேர் பாதிக்கப்பட்டிருந்த …

Read More »

கொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணம்?

இணையத்தில் வைரலாகி வரும் தகவல்களில், உலக சுகாதார மையம் உலக மக்கள் தொகையை குறைக்க மக்களுக்கு நோய் பற்றிய தவரான தகவல்களை வழங்க திட்டமிட்டுள்ளதை இத்தாலி நாட்டு மருத்துவர்கள் கண்டறிந்து இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. வைரல் தகவலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைகள், நோயின் தன்மை, உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான காரணம் என பல்வேறு பகீர் விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த தகவலில் கொரோனா வைரஸ் உண்மையில் வைரஸ் இல்லை அது …

Read More »

கொரோனாவுக்கு பலியானவர்களில் 64% பேர் ஆண்கள்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்தியாவில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 435 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 64 சதவீதம்பேர் ஆண்கள், 36 சதவீதம்பேர் பெண்கள் ஆவர். வயது அடிப்படையில் பார்த்தால், 0.5 சதவீதம்பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். 2.5 சதவீதம்பேர் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 11.4 சதவீதம்பேர் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். குறைவான இறப்புக்கு காரணம் 35.1 சதவீதம்பேர், …

Read More »

வைரலாகும் பகீர் வீடியோ – புலம் பெயர்ந்த தொழிலாளர்களா?

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் பகீர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பகல் நேரத்தில் சாலையில் சென்ற நபரை இருவர் கொடூரமாக தாக்குகின்றனர். இருவரில் ஒருவர் தாக்குவதும், மற்றொருவர் தாக்கப்படும் நபரிடம் இருந்து பணத்தை பறிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. வைரல் வீடியோ டெல்லியின் பல்ஜீத் நகரில் எடுக்கப்பட்டது என்றும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிறார்கள் என்றும் தெரியவந்து இருக்கிறது. மேலும் தாக்குதலுக்கு ஆளான நபர் புலம் பெயர்ந்த தொழிலாளி இல்லை என்பதும், அவர் …

Read More »

முகக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபா அபராதம்!!!

தெலுங்கானாவில் இன்று புதிதாக 41 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,592 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 1,002 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தெலுங்கானா முதல்மந்திரி சந்திர சேகர ராவ் இன்று …

Read More »

ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிப்பு? புதிய வழிமுறைகளுடன் இன்று அறிவிப்பு!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம், வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. என்றாலும் முககவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது போன்றவற்றை மக்கள் சரியாக …

Read More »

வங்கக்கடலில் இன்று மாலை உருவாகிறது ஆம்பன் புயல்!!!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஆம்பன் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாக உள்ள ஆம்பன் புயல், வரும் 20 ஆம் தேதி மேற்கு வங்காளம் – வங்காளத் தேசத்தை ஒட்டிய கடற்பகுதியில் கரை கடக்கும் என்றும் இந்திய …

Read More »

இந்து முதியவரின் உடலை தகனம் செய்ய உதவிய முஸ்லிம் இளைஞர்கள்!

உலகம் முழுவதையும் நடுங்க வைக்கும் கொரோனா வைரஸ் மனித இனத்திற்கு பெரும் தீங்கிழைத்து வருகிறது. இந்த நோய் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களால் அடக்கம் செய்ய முடியாது. சுகாதாரத்துறையினரே விஞ்ஞான ரீதியில் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்து வருகிறார்கள். தங்களையும் கொரோனா பாதித்துவிடுமோ என்ற அச்சத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவிடாமல் கூட சில பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்திய சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. …

Read More »

50 நாளுக்கு பின் தொடங்கிய ரயில் போக்குவரத்து!!

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாத இறுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்ல கடந்த 1 ஆம் திகதியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வழக்கமான ரயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கும் வகையில் நேற்று முதல் குறிப்பிட்ட நகரங்களுக்கு ரயில்கள் இயங்கின. இதனால் 50 நாட்களுக்கு பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கியது. புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து …

Read More »

கருப்பு பூனைப்படைக்கும் பரவிய கொரோனா!!

என்.எஸ்.ஜி. எனப்படும் கருப்பு பூனைப்படைக்கும் முதல்முறையாக கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. அந்த படையின் மருத்துவ ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஊழியர், என்.எஸ்.ஜி. வைத்தியசாலையிலும் குர்கானில் உள்ள அதன் முகாமிலும் பணியாற்றி வந்தார். அறிகுறி வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது அவர் நொய்டாவில் உள்ள மத்திய பொலிஸ் படை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More »

இந்தியாவில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு !!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது. …

Read More »

96 பொலிஸாருக்கு கொரோனா !!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் 96 பொலிஸார் கொரோனா வைரஸால் பாதிப்பு …

Read More »

கொரோனா வைரஸ் பரவல் – முஸ்லிம்களை பொறுப்பாக்க முடியாது!

கொரோனா வைரஸ் பரவலுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களை பொறுப்பாக்க முடியாது என மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்ததாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. அவர் டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்களால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவியதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட குழுவினரின் இந்த நடவடிக்கையை முஸ்லிம் …

Read More »

கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் !!

கொரோனா என்ற கொலைகார வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளும் அனைத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவை சிறப்பாக கையாளும் உலக தலைவர்கள் யார்? யார்? என்பது குறித்து ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற சர்வதேச நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி 68 புள்ளிகளுடன் முதல் இடத்தில் …

Read More »

கழிவுகள் கலக்காததால் சுத்தம் அடைந்த கங்கை!!

இந்தியாவின் தேசிய நதியான புனித கங்கை, இமயமலையில் புறப்பட்டு உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காள மாநிலங்கள் வழியாக வங்காள தேசத்தை நோக்கி பாய்கிறது. ஹரித்வார், பிரயாக்ராஜ், வாரணாசி, ரிஷிகேஷ், கொல்கத்தா போன்ற பல நகரங்கள் அதன் பாதையில் இருக்கின்றன. இமயமலையில் தொடங்கும் போது புனித கங்கையாகப் புறப்பட்டாலும், இடையில் மனிதர்கள் செயலாலும், தொழிற்சாலைகளாலும் அது மாசுபட்டு விடுகிறது. கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ …

Read More »

கொரோனா வைரஸ் – மொட்டை அடித்துக் கொண்ட பொலிஸார்!

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் மட்டும் 544 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 பேர் பலியாகி உள்ளனர். வேகமாக நோய் பரவுவதால் பீதி அடைந்துள்ள இந்தூர் பொலிஸார் சிலர், தற்காப்பு நடவடிக்கையாக, தங்கள் தலையை மொட்டை அடித்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக, சாந்தன் நகர் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலரும், 4 பொலிஸாரும் மொட்டை அடித்துள்ளதாக இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். பொலிஸார் தெருக்களில் சீருடையில் மொட்டை தலையுடன் நடமாடி வருகின்றனர். …

Read More »

கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி கற்பழித்து கொலை!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 27 ஆம் திகதி இருவரும் சொந்த ஊர் திரும்பினர். இந்தநிலையில் கர்ப்பிணிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் சேர்த்தனர். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்ததால் உடனே அவரை வைத்தியசாலையில் உள்ள தனி …

Read More »

நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுபடுத்த நடவடிக்கை!!

கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில், அதை சமாளிக்க கூடுதல் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா பரிசோதனை வசதியை விரிவுபடுத்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக, எய்ம்ஸ் உள்ளிட்ட 14 உயர் மருத்துவ நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நோய்த்தொற்று பரவுவதை தடுத்தல், …

Read More »

மகனின் இறுதிச் சடங்கை லைவ் வீடியோ மூலம் பார்த்த சோகம்…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் அர்ஜுன் பராய்க். 21 வயதான இவர் கோவாவில் வேலை செய்து வந்தார். கடந்த நில நாட்களாக அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். தற்போது ஊடரங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் அவரால் சொந்த மாநிலம் திரும்பமுடியவில்லை. நோய் தாக்கம் அதிகரிக்க கோவாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி அர்ஜுன் பரிதாபமாக உயிரிழந்தார். …

Read More »

கொரோனா வைரஸ் – நீங்கள் மட்டுமே காரணம் – மோடிக்கு கமல் கடிதம்!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நெருக்கடிக்கு நீங்கள் மட்டுமே காரணம் என பிரதமர் நரேந்திர மோதிக்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கொரோனா நெருக்கடியை பிரதமர் கையாளும்விதம் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “ஏமாற்றமடைந்த ஒரு குடிமகன் என்ற முறையில் இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். மார்ச் 23ஆம் தேதி …

Read More »

மதுபானம் வாங்க சிறப்பு பாஸ் – அரசு வழங்குகிறது!

கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் 21 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் குடிப்பிரியர்கள் தவித்து வருகிறார்கள். குடிக்கு அடிமையானவர்கள் திடீர் என்று அதை நிறுத்துவதால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கைகால் நடுக்கம், மயக்கம், வலிப்பு, தூக்கமின்மை போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. சிலர் தற்கொலைகூட செய்து கொள்கிறார்கள். இவ்வாறாக கேரளாவில் இதுவரை 3 பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள். இந்தநிலையில் குடிப் பழக்கத்தை விடமுடியாத …

Read More »

6 மாதங்களுக்கு அரிசி இலவசம்!!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் இரண்டு பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 206 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில முதல் மந்திரி மம்தா …

Read More »

கொரோனாவிடம் இருந்து காப்பாற்றுமா, கோமாதா கோமியம்?

சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றி, மூன்றே மாதங்களில் உலகின் மிகக்கொடிய உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை திக்குமுக்காட வைத்துள்ளது. இந்த நோய்த்தொற்றினால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கவுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க பசு மாட்டின் சிறுநீர் (கோமியம்) மிகச்சிறந்த கிருமிநாசினி என்ற நம்பிக்கை தற்போது இந்தியாவில்… குறிப்பாக, …

Read More »