Home / செய்திகள்

செய்திகள்

இதுவரை 848 கடற்படையினர் பூரண குணம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். அதன்படி, இதுவரை 848 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் இதுவரை 904 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 56 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றர்.

Read More »

அத்துருகிரிய பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி மீட்பு!!

அத்துருகிரிய பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளளனர். குறித்த துப்பாக்கி ஹோமாகம, பிட்டிபன பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத கிடங்கில் இருந்து காணாமல் போன துப்பாக்கியாக இருக்காலம் என சந்தேகிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

57 கடற்படையினர் இங்கிலாந்து நோக்கி பயணம்!!

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த கப்பல் ஒன்றில் சேவையாற்றிய 57 கடற்படையினர் விஷேட விமானம் ஒன்றின் மூலம் மத்தள விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து நோக்கி சென்றுள்ளனர். வாமோச் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றில் மூலம் இன்று அதிகாலை 5.50 மணியளவில் அவர்கள் இங்கிலாந்து நோக்கி பயணமாகி உள்ளனர். குறித்த விமானம் நேற்று காலை 10.20 மணியளவில் ரோமில் இருந்து கொழும்பு துறைமுகத்தில் உள்ள கப்பல் ஒன்றில் …

Read More »

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான …

Read More »

புதிய சிந்தனையில் உருவாகும் எளிய தலைமைகளால் முஸ்லிம்கள் கவலை!!

ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட சமய, கலாசார அடக்கு முறைகள் எளிதில் மறக்கக் கூடியவையல்ல, அற்ப சலுகைகளை வழங்கி, இவர்களால் உருவாக்கப்படும் முஸ்லிம் தலைவர்கள் குறித்து, சமூகம் விழிப்படைவது அவசியமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். “மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு ராஜபக்ஷக்கள் எடுத்துவரும் முயற்சிகள்´ எனும் தொனிப்பொருளில், அஷாத் சாலி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவித்துள்ளார். இதில் அவர் கூறியுள்ளதாவது, புலிகளைத் …

Read More »

யான்ஓயாவில் கால் வழுக்கி விழுந்து விபரீதம்..!

புல்மோட்டை பொலிஸ் பிரிவிட்குட்ட பாலன்குளம் பிரதேசத்தில் யான்ஓயாவினை பார்வையிட வந்த நபரொருவர் கால் வழுக்கி ஓயாவில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று (20) மாலை 4 மணிக்கு ஓயாவில் விழுந்த நபரை மீட்டு புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 25 வயதுடைய உயிரிழந்த நபர் நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்தவராவார். சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

மேலும் 37 பேர் பூரண குணம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 37 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1748 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேலும் 6 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை 842 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளனர். நாட்டில் 2047 பேருக்கு கொரோனா வைரஸ் …

Read More »

வௌிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கான செய்தி!!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர்களில் விமான நிலையத்தில் சுங்க வரி அற்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்கு மீண்டும் அந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஈ.எ.சந்திரஸ்ரீ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமான இலங்கைக்கு வர முடியாமல் பல்வேறு நாடுகளில் இருந்த …

Read More »

ஈ – காணி பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!!

காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார். காணிப் பதிவின் போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாக பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஒன்றிணைந்த வகையில் ஈ – …

Read More »

மாகாணங்களில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான பொறுப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்!!

போதைப் பொருள் வியாபாரம், கப்பம் பெறல், பாதாள உலக செயற்பாடு, மரம் வெட்டுதல், விபச்சார விடுதி, மணல் அகழ்வு உட்பட ஏனைய சட்டவிரோத குற்றச் செயல்கள் பாரிய அளவில் இடம்பெறுமாயின் அது அந்தந்த மாகாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் தாம் சீருடை அணிவதில் வெட்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார். தாம் சேவையாற்றும் பிரதேசத்தில் காணப்படும் எந்தவொரு அழுத்தங்களுக்கு அடிப்பணியாது, …

Read More »

மேலும் 6 கடற்படையினர் பூரண குணம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். அதன்படி, இதுவரை 842 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் இதுவரை 904 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 62 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றர்.

Read More »

தனியார் வகுப்பு ஆசிரியர்களின் வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு!!

தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக அகில இலங்கை தொழில்சார் கல்வியியலாளர்கள் சங்கம் முன் வைத்த ஆலோசனைகள் பலவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக ஏற்றுக்கொண்டார். ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கற்பித்த தனியார் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையை 250 ஆக மட்டுப்படுத்துவது கடினம் என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர். அதுபற்றி கவனம் செலுத்திய ஜனாதிபதி, இருவேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்துவதற்கு சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையுடன் அனுமதி …

Read More »

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம்?

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அரச நிறுவனங்களின் வேலை நேரத்தை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரையும், தனியார் பிரிவின் வேலை நேரத்தை காலை 9.45 முதல் பிற்பகல் 6.45 மணி வரையும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று நிலைமையினை தடுப்பதற்காக சமூக இடைவௌியை பேணுவதற்காகவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மற்றும் அரச மற்றும் …

Read More »

இடுகம கொவிட் – 19 நிதியத்தின் மீதி 1,213 மில்லியனாக அதிகரிப்பு!!

தனிப்பட்ட,நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,213 மில்லியனாக அதிகரித்துள்ளது. வடமத்திய மாகாணத்தில் அரச சேவை ஊழியர்கள் அன்பளிப்பு செய்த 25 மில்லியன் ரூபாவை ஆளுநர் மஹீபால ஹேரத் அவர்கள் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார். கிரிபத்கொட விகாரமகா தேவி பழைய ஆசிரியர் சங்கத்தினர் ஒரு லட்சம் ரூபாவை …

Read More »

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் நான்கு அதிகாரிகள் பணி நீக்கம்!!

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நான்கு பொலிஸ் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் போதைப்பொருள் பணியகம் சோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டது. இதற்கமைய, போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் சார்ஜென்ட் இருவர் உட்பட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொலிஸ் அதிகாரிகள், பெருந்தொகை …

Read More »

அரசாங்க அச்சுத் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கை!!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கடமைகளில் அரசாங்க அச்சக திணைக்களம் தற்பொழுது மிகவும் செயற்றிறன் மிக்க வகையில் செயற்பட்டு வருவதுடன் இந்த கடமைகள் கொவிட்-19 தொற்றை தடுக்கும் சுகாதார பாதுகாப்பு முறைகளை கடுமையாக கடைப்பிடித்து மேற்கொண்டு வருவதாக அரசாங்க அச்சக திணைக்கள அரச அச்சகர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் , விசேடமாக இந்த தேர்தலின் போது சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து தேர்தல் நடவடிக்கைகளை …

Read More »

MCC ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை!!

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை எனப்படும் எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் பேராசிரியர் லலிதசிறி குணருவன் தலைமையிலான குழு முன்வைத்துள்ள அறிக்கையின் ஊடாக நல்லாட்சி அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கம் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் எம்.சி.சி உடன்படிக்கைகளில் இரண்டு கட்டங்களாக கைச்சாத்திட்டுள்ளதாக அறிக்கையை கையளித்த குழுவின் தலைவர் பேராசிரியர் லலிதசிறி குணருவன் தெரிவித்தார். இதன் கீழ் 10 மில்லியன் அமெரிக்க …

Read More »

பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!!

எதிர்வரும் சில தினங்களில் மேல் மாகாணத்தில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தேவையற்ற விதத்தில் பணம் அறவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Read More »

இதுவரை 1711 பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இன்று மேலும் 33 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 1711 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களில் இதுவரை 836 பேர் பூரணமாக குணமடைந்து …

Read More »

முகக்கவசம் அணியத்தவறிய 1441 பேர் தனிமைப்படுத்தலுக்கு!!

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய சுமார் 1441 நபர்கள் இருவாரங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 12 மணித்தியாலங்களுக்குள் குறித்த நபர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் மேல் மாகாணத்தில் பொலிஸார் விஷேட நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

Read More »

மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமான மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் இன்று (30) நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Read More »

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் துறைமுக பிரிவினர்!!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் நிறுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள கிரேன்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நிறுவப்படவில்லையாயின் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் துறைமுக பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதன் தலைவர் எமது செய்திப் பிரிவிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தலையீடு காரணமாக குறித்த கிரேன்கள் நிறுவப்படாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!!

மொறகஹகந்த – களு கங்கை மஹவெலி F வலயத்தை இயற்கை விவசாய உற்பத்தி வலயமாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இரசாயன பசளை மற்றும் கிருமிநாசினி இன்றி இயற்கை உரத்தின் மூலம் மரக்கறி, பழங்கள் மற்றும் உப பயிர்கள் இங்கு பயிரிடப்படவுள்ளன. நீர்ப்பாசனங்களை பாதுகாத்து செயற்றிறனாக நீரை பயன்படுத்தி நீர் வளத்தை பாதுகாப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். பயிர்ச்செய்கைக்கு தேவையான இயற்கை உரத்தை குறித்த வலயத்திலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை …

Read More »

இன்றைய காலநிலை விபரம்!!

மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மழை நிலைமை: திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் …

Read More »

தபால் வாக்கு சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்!!

தபால் வாக்கு சீட்டுகள் விநியோகம் மற்றும் தபாலிற்கு ஒப்படைக்கும் நடவடிக்கை இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினமும் இந்த நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிக்க 7,753,037 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் 7,705,085 பேரிற்கு மட்டுமே அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு …

Read More »

தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய சந்திப்பு!!

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (30) முக்கிய சந்திப்பு ஒன்றுக்காக கூடவுள்ளது. நாளை (30) காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் அததெரணவிற்கு தெரிவித்தார். வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது. தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.

Read More »

12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது !!

ஹோமாகம, பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலகு குழு உறுப்பினரான தற்போது சிறையில் உள்ள ´ககன´ எனும் நபரின் உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் 12 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

வசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில்!!

முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட இன்று (29) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். இன்று அவரை ஆணைக்குழுவுக்கு அழைத்துள்ளதாக ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கொழும்பில் 11 இளைஞர்களை கடந்தியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தம்மை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு வழக்கு தாக்கல் …

Read More »

பதில் பொலிஸ்மா அதிபர் சார்ப்பில் ஆஜராக முடியாது!!

வேலை நிறுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு விசாரணையில் பதில் பொலிஸ்மா அதிபர் சார்ப்பில் தன்னால் ஆஜராக முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார். நுகேகொடை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய …

Read More »

மேலும் 3 கடற்படையினர் பூரண குணம்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, 826 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் தற்போது வரை 1661 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நாட்டில் 2037 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஒமானில் சிக்கியிருந்த 288 பேர் நாடு திரும்பினர்!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமான ஒமான் நாட்டில் சிக்கியிருந்த 288 பேர் இன்று (29) நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் குறித்த விமானம் மஸ்கட் நகரத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Read More »

யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் !!

யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட பக்கதர்களோடு, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெற்று வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டபின் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த 20 ஆம் திகதியிலிருந்து உலக பிரசித்திபெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் …

Read More »

சுகாதார முன்னெச்சரிக்கை நடைமுறைகளை தொடருமாறு இராணுவ தளபதி வேண்டுகோள்!!

நாட்டில் கொவிட் 19 பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அளித்த பெரும் ஆதரவுக்கு பொது மக்களுக்கு நன்றி. கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புத் பிரதானியும் இராணுவத் தளபதியுமான கொவிட் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு நன்றி தெரிவித்ததுடன், கொவிட்-19 தடுப்பு சுகாதார அதிகாரிகளின் சுகாதார நடைமுறைகளான முககவசங்களை அணிதல் , சமூக இடைவெளியை பேணல் , கை கழுவுதல் போன்றவற்றைத் தொடருமாறு …

Read More »

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

மேல், வடமேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. களுத்துறையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. …

Read More »

பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

கொவிட்-19 தொற்று வைரசு பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் நாளை (29) திறக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையின் கீழ் பாடசாலைகளை மீண்டும் திறப்பது பல கட்டங்களாக இடம்பெறும் என, கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார். இதேவேளை பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் சுகாதார துறை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் …

Read More »

1000 ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது!!

ஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு கிடையாது என்று அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்தையும், ஆறுமுகன் தொண்டமானின் வீரத்தையும் பின்பற்றியதாக எனது அணுகுமுறை அமையும் எனவும் அவர் தெரிவித்தார். அக்கரப்பத்தனையில் இன்று (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆயிரம் ரூபா …

Read More »

கொரோனா வைரசு தொற்று சமூகத்தில் அதிகளவு பரவுவதற்கு வாய்ப்பு!!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்ற தவறும் பட்சத்தில் கொரோனா வைரசு தொற்று சமூகத்தில் அதிகளவு பரவுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விடயத்தில் நாம் வெற்றியை அடைந்து விட்டோம் என்று எண்ணுவதற்கான நேரம் இது அல்ல என்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தொற்று தொடர்பில் …

Read More »

ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம் !!

இன்று முதல் (28) நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. ​கொவிட் 19 பரவலையடுத்து, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவந்த நிலையில், பின்னர் கட்டங் கட்டமாக தளர்த்தப்பட்டது. அத்துடன், கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை மாத்திரம் ஊரடங்கு அமலில் இருந்தது வந்தது. இந்நிலையில், இன்று (28) தொடக்கம் …

Read More »

GMOA வின் தலைவராக அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு!!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக வைத்தியர் அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (27) இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவர் போட்டி இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சங்கத்தின் செயலாளராக வைத்தியர் செனால் பெர்னாண்டோ போட்டி இன்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Read More »

மேலும் 2 கடற்படையினர் பூரண குணம்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, 823 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் தற்போது வரை 1639 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நாட்டில் 2033 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »