Home / இலக்கியம்

இலக்கியம்

*ஆன்மீகம் என்றால் என்ன?* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) -“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து-

*ஆன்மீகம் என்றால் என்ன?* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) இறை நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலிற்கு செல்வதையும், பூஜைகள் பல செய்வதையும், தீர்த்த யாத்திரை செய்தல், மலையேறுதல், நேர்த்திக்கடன் வைப்பதையும் பார்க்கிறோம். இவர்கள் கடவுளுக்கு எல்லாவற்றையும் செய்த பின்னர் தமது வேண்டுதலை முன்வைக்கிறார்கள். பெரும் அளவில் பணத்தை தருவதாகவும், தங்க நகை செய்து தருவதாகவும், கட்டிடம் கட்டித்தருவதாகவும் உறுதி அளிக்கிறார்கள். அப்படியானால் கடவுள் அவ்வளவு பேராசை பிடித்த ஒருவரா? இத்தகைய லஞ்சத்திற்காக கேட்பதையெல்லாம் கொடுப்பதற்கு? …

Read More »

கலாபூஷணம் “புங்குடுதீவு கலைஞர் உதயகுமார்”

இலங்கைத் தமிழ் நாடக உலக வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒரு பெயர் கலாபூஷணம் கலைஞர் உதயகுமார்ஈ ழத் தமிழ் நாடக உலகில் கோலோச்சிய நட்சத்திரங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர். 72 வயதான, இப்போதும் மகிழ்ச்சியாக தொழில் செய்து கொண்டிருக்கும் உதயகுமார் 13 வயதில் நடிப்புலகுக்கு வந்து கடினமான முட்பாதைகளில் கலைத்தாகத்துடன் நடை பயின்று நாடக, சினிமா உலகில் கொடி கட்டிப் பரந்தவர். இப்போதும் இவர் சிந்தனை நாடகம் …

Read More »

“புங்குடுதீவு, பாரதி சமூகத்தின் வரலாறு”..

“புங்குடுதீவு பாரதி சமூகத்தின் வரலாறு”.. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுககு; முன்னர், புங்குடுதீவு வீராமலை என்று அழைகக்ப்படும் கிராமம் எமது சமூதாயத்தைச் சேர்ந்த முன்னோர்கள் வாழ்ந்து வந்த இடமாகும். அக்கிராமம் பனை மரங்களும் தென்னை மரங்களும் நிறைந்து காணப்படும் சோலை வளமாகும். அங்கு எமது முன்னோர்களைச் சுற்றி வேளாளன் என்ற இனத்தைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து வந்தனர். அந்தக் கிராமத்திலே எமது முன்னோர்கள் ஒரு சிலர் கடலிலே வலை வீசி மீன் பிடித்து, …

Read More »

புங்குடுதீவு: “பாழடைந்த வீடுகள், குற்றச் செயல்களுக்கு களமாக அமையுமா?” எனும் தலைப்பில், “எச்சம்” எனும் குறும்படம்… (வீடியோ)

புங்குடுதீவுக்கு மட்டுமல்ல, அனைத்து பிரதேச கிராமங்களுக்கும் பொருந்தும்.. “எச்சம்” குறும்படம்.. (வீடியோ) “பாழடைந்த வீடுகள், குற்றச் செயல்களுக்கு களமாக அமையுமா?” எனும் தலைப்பில், “எச்சம்” எனும் குறும்படம்… (வீடியோ) புங்குடுதீவை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவி செல்வி.சங்கீதா நடேசலிங்கம் அவர்கள் “பாழடைந்த வீடுகள் குற்றச் செயல்களுக்கு களமாக அமையுமா?” எனும் தலைப்பில் எடுத்துள்ள “எச்சம்” எனும் குறும்படம்… ***இது புங்குடுதீவுக்கு மட்டுமல்ல, இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச கிராமங்களுக்கும் …

Read More »

புங்குடுதீவு “மு.தளையசிங்கம்” : இந்த யுகத்தின் சத்திய காவலர்..!!

“மு.தளையசிங்கம்” : இந்த யுகத்தின் சத்திய காவலர்..!! “தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது.. மற்றது பிறக்க முயன்று கொண்டிருக்கிறது” “மு.த.” என்று இலக்கிய உலகம் அடையாளப்படுத்திய “மு.தளையசிங்கம்” புங்குடுதீவு மக்களுக்கு மிகவும் அந்நியமானவர். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் அடுத்து உட்காரும் இந்தச் சிந்தனாவாதிக்குரிய இடம் ஈழத்தில் இன்றுவரை கொடுக்கப்படவில்லை. இதனால் “மு.த.”வைப் பற்றிய அறிமுகம் …

Read More »

எம் மண்ணில் வளர்ந்துவரும் வேப்ப மரத்தின் மகத்துவத்தை எம்மக்களுக்கு தெரியப்படுத்தி பசுமையை நிலைநாட்டுவோம்.

எம் மண்ணில் வளர்ந்துவரும் வேப்ப மரத்தின் மகத்துவத்தை எம்மக்களுக்கு தெரியப்படுத்தி பசுமையை நிலைநாட்டுவோம். தாவர இயல் பெயர்: Azadirachta indica இதன் மறு பெயர்கள்: வேப்பமரம், அரிட்டம், துத்தை, நிம்பம், வாதாரி, பாரிபத்திரம், பசுமந்தம் வளரும் இடங்கள்: இந்தியா, ஈரான், பாகிஸ்தான், இலங்கை , மியான்மர், இது தவிர தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவை சேர்ந்த இதர நாடுகள், ஆப்ரிக்கா, அமெரிக்க கண்டங்கள், ஒரு சில அரபு நாடுகள் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும்விழுதும் விழா மலரில்”, இன்றைய புங்குடுதீவின் புராதான வரலாற்று சிறப்புப் பார்வை.. -சிவமேனகை

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும் விழா மலரில்”, இன்றைய புங்குடுதீவின் புராதான வரலாற்று சிறப்புப் பார்வை.. -சிவமேனகை சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது பதினெட்டாவது ஆண்டை முன்னிட்டு 25.10.2015இல் நடாத்திய “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வில், வெளியிடப்பட்ட விழா மலரில், சிவமேனகை அவர்கள் எழுதிய “கிரவுஞ்சமலை நிழல் மாநகர், இன்றைய புங்குடுதீவின் புராதான வரலாற்று சிறப்புப் பார்வை”..!! *****இதில் உள்ள படங்களின் மேல் “கிளிக்” (அழுத்துவதன்) …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும்விழுதும் விழா மலரில்” புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்.. -திருமதி. சி.தமிழரசி..

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும்விழுதும் விழா மலரில்” புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம் -திருமதி.தமிழரசி.. சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது பதினெட்டாவது ஆண்டை முன்னிட்டு 25.10.2015இல் நடாத்திய “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வில், வெளியிடப்பட்ட விழா மலரில் திருமதி.தமிழரசி சிவபாதசுந்தரம் அவர்கள் எழுதிய “புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்”..!! *****இதில் உள்ள படங்களின் மேல் “கிளிக்” (அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

Read More »

அதிகாரி புலமேவு சிங்கார இள வழகனே! -பண்டிதர் மு. ஆறுமுகன்

அதிகாரி புலமேவு சிங்கார இள வழகனே! புங்குடுதீவு மடத்துவெளி பாலமுருகன் வணக்கப் பாமலர் – இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் – சங்கத் திருந்துதென் தமிழாய்ந்த புலவனே தமிழர்தொழு குல தெய்வமே சகலகலை அறுபத்து நான்கும் சமைத்திட்ட சண்முகத் தொரு முதல்வனே பொங்கு செல்வங்கண்டு பூரித்து சிவதொண்டு புரிகின்ற புண்ணியர் பதியாம் பொன்கைநகர் வடபால் மடத்துவெளி நன்னி பக்தர்வாழ அருள் பெருமான் அங்கத் திருந்திடும் அருநோய்கள் தீர்த்தெம்மை ஆண்டருள வேண்டி …

Read More »

ஊரைதீவு வரகவி முத்துக்குமாருப் புலவர்..!!

ஊரைதீவு வரகவி முத்துக்குமாருப் புலவர் கமத்தொழிற் சிறப்பைக்கூறும் அவரது பாடல்கள் எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் [தினகரன் ஞாயிற்றுவாரமலர், கொழும்பு: 03 – 08 – 1951]  கானகத்தின் மத்தியிலுள்ள தெளிவில்லாத குளத்தில் மலர்ந்த தாமரைமலர் போல முத்துக்குமாருப் புலவர் திகழ்ந்தார். அப்பொழுது ஒல்லாந்தரின் கீழைத்தேச அரசியல் வானத்தில் இரத்த மேகங்கள் பரவி, இலங்கையில் அவர்களின் அதிகாரப் பகலவன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. அதனாலும் அவர்களின் இயற்கைச் சுபாவத்தினாலும் அவர்கள் குடிமக்களின் …

Read More »

“புங்குடுதீவு மண், தாய் மண்”… -புங்கைரூபன் (கவிதை)

“புங்குடுதீவு மண், தாய் மண்”… -புங்கைரூபன் (கவிதை) சுவாசம் தந்த மண்.! பாசத்தோடு தவமாய் எம்மைப் பெற்ற மண் -அதை பாசம் தேயா வரமாய், நாம் பெற்ற மண்.. புங்கைமண்… புங்குடுதீவு மண்……..!!! “அ”னா எழுதும் போது அன்பை சொல்லித் தந்த மண்… “த”னா எழுதும் போது தமிழின் பெருமையை சொன்ன மண்.. “வீ”யனா எழுதும் போது வீரத்தை ஊட்டி தந்த மண்… “உ”னா எழுதும் போது உபசரிப்பை சொல்லி …

Read More »

தீபங்களாடும், கார்த்திகைத் தீபப்பெருவிழா..! (பகுதி 1) -இலக்கியம்-

தமிழர்களாகிய நாம் எத்தனையோ வகையான விழாக்களை பெருவிழாக்களாகக் கொண்டாடுகின்றோம். இந்த விழாக்களுக்கு மூலகாரணமாக எந்த விழாவை நம் முன்னோர் கொண்டாடியிருப்பர்? இன்றைய மனிதன் இயற்கையின் ஆற்றலை வென்று அதனை அடக்கியாள்வதாக நினைக்கிறான். எனினும் மனிதனின் ஆற்றலை விட உலக இயற்கையின் ஆற்றல் பெரிதாக இருக்கிறது. நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” – (தொல்: சொல்: 635) என்ற தொல்காப்பியரின் சூத்திரத்திற்கு அதன் …

Read More »

“புங்கைநகர்” வளர்ப்போம்! -தமிழரசி சிவபாதசுந்தரம்

மாடு வளர்ப்போம் மற்றும் அதனருகே காடு வளர்த்து கழனிகள் செய்வோம்.., ஊடே நீர்நிலைகள் சமைத்து நிலத்தின் பாடு பார்த்து பக்குவம் செய்வோம்.. வாடும் வயல்கள் இன்றி வளங்கொழிக்க ஓடும் நீர்கால்வாய் பலவும் செய்வோம்.. தேட மரநிழல்கள் இன்றி தெருக்கள் வாடும் நிலை தகர்த்தெறியச் செய்வோம்.. வீடு சமைக்க நிலமரங்கள் வெட்டும் கேடு கெட்ட குணத்தை குழிபறிப்போம்.. பாடு பட்டே பயிர்வளர்த்து நாளும் நாடு வளர்ப்போம்! புங்கைநகர் வளர்ப்போம்! -*** அனுப்பி …

Read More »

பொன் ஏட்டில் புகழ் பெற்ற “புங்குடுதீவு”..! -பண்டிதர் மு ஆறுமுகன்

பொன் ஏட்டில் புகழ் பெற்ற புங்குடுதீவு எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் புங்குடுதீவு ஶ்ரீகணேச வித்தியாசாலை பழையமாணவர் சங்க  வெள்ளிவிழா மலர் (1951) புங்குடுதீவு பெயர் குறிக்கப்பட்ட வல்லிபுரம் பொன் ஏடு – கி பி 2ம் நூற்றாண்டு புகழ் மலர்ந்த நாடு புங்குடுதீவு. இதன் புகழ் இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளின் முன் பொன் ஏட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் புதை பொருளாராய்ச்சியாளர் யாழ்ப்பாண நகரின் வடகிழக்கேயுள்ள வல்லிபுரக் கோவிற் பகுதியை …

Read More »

தொலைந்துபோன வாழ்வை காற்றுவெளிக் கிராமங்களில் தேடிய, சமூகச் செயற்பாட்டாளன்.. கவிஞர் வில்வரெத்தினம்!! -முருகபூபதி

தொலைந்துபோன வாழ்வை காற்றுவெளிக் கிராமங்களில் தேடிய சமூகச் செயற்பாட்டாளன்.. கவிஞர் வில்வரெத்தினம்!! – முருகபூபதி வீதிகளுக்கு தனிநபர்களின் – பிரபல்யமானவர்களின் அரசியல் – தொழிறசங்கத் தலைவர்களின் பெயர் – மரங்கள் – மலர்கள் – ஆலயங்களின் – தேவாலயங்களின் மசூதிகளின் விகாரைகளின் அல்லது தெய்வங்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பதை அவதானிக்கிறீர்கள். மனிதர்கள் அணியும் பாதணி சப்பாத்து. அந்தப்பெயரில் வீதி இருக்கிறது. எங்கே? கொழும்பில் கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் ஜெம்பட்டாவீதி மிகவும் பிரசித்தம். அந்த …

Read More »

வெயிலும், பனியும்… (சிறுகதை) -வி. ரி. இளங்கோவன்

அது ஒரு மாசி மாதம்… பிற்பகல் நாலரை மணியிருக்கும்.. வரவேற்பறையிலுள்ள ‘கனப்பே’யில் நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்த தங்கம்மாவுக்குப் புரக்கேறியது போலிருந்தது. கண்கலங்கி நீர்த்துளி விழுந்தது. உரத்துச் செருமி அடக்கிக்கொண்டார். ஒரு கையால் நாரியைப் பிடித்துக்கொண்டும் மறு கையால் ‘கனப்பே’யின் மூலையைப் பிடித்துக்கொண்டும் எழுந்து, மெல்ல நடந்து குசினி மேசையிலிருந்த தண்ணீரில் கொஞ்சம் எடுத்துக் குடித்துக்கொண்டார். மீண்டும் வரவேற்பறைக்கு வந்து ‘பல்கனி’ப் பக்கமாகவுள்ள கதவுத் திரைச்சீலையை விலக்கி, கண்ணாடிக் கதவினூடே வெளியே …

Read More »

“புங்குடுதீவு” எங்கள் ஊர்..!! (சிறப்புக் கவிதை) -எழுத்தாளர் வி.ரி இளங்கோவன்…

‘சிறுத்திடல்’ வளவெல்லாம் இந்நாளில் சிறுவெள்ளம் பாயும் – வேலிப் புற்றெங்கும் குடைபிடிக்கும் காளான் பிடுங்குதற்கோ போட்டி சிறார் ‘சோழனோடை’ நிரம்பியே வழிந்து சேரும் கடலுள் நன்றாய் – ‘கேரதீவு’ தாழங்கடற்கரை ஈஞ்சுபுகுந்து வாடை தம்பாட்டில் சில்லிட்டுச் செல்லும்.., கற்றாளை கனத்தபுற்கள் ‘கரந்தலி’ முற்றாத பற்றைக்காடு.. இடையே முதிர்ந்த மொட்டைப் பூவரசுகள் வற்றாத நதிபோல வடிவத்தில் ‘உப்புக்களி’ வாய்க்கால் ஊர்மனை வெள்ளத்தால் நிரம்பி ஓடிடுமழகாய் ‘கள்ளியாறு’ கரந்தலியில் நுரைதள்ளும் கால்நடைகள் துள்ளிக் …

Read More »