Home / இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள்

MT New Diamond’ கப்பலில் காயமடைந்த மாலுமியை காப்பாற்றிய கடற்படை வீரர்களுக்கு பாராட்டு!!

கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி இலங்கைக்கு கிழக்குக் கடலில் NEW DIAMOND என்ற கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் பலத்த காயமடைந்த கப்பலின் மூன்றாவது பொறியாளரின் உயிரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பங்குபெற்ற கடற்படை வீரர்களின் செயலைப் பாராட்டும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் வைத்து அவர்களுக்கு பாராட்டு கடிதங்களை வழங்கினார். என்ஜின் அறையில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு …

Read More »

அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக அழைப்பாணை!!

அரச அதிகாரிகளின் கடமைக்கு தடை ஏற்படுத்தி, இடையூறு விளைவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை வௌியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பொலிஸ் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார். மட்டக்களப்பு …

Read More »

நீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பிரதமர் கவனம்!!

இலங்கையில் பொது நீர்நிலை முகாமைத்துவ அணுகுமுறையை செயல்படுத்துவதற்கு ஒரு மூலோபாய பொறிமுறையை வகுப்பதற்கான குழுவொன்றை நியமிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான சந்திப்பொன்று பிரதமரின் செயலாளர் காமினி செனரத் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று (21) இடம்பெற்றது. நீர்வழங்கல் துறை அமைச்சு, நீர்ப்பாசனத்துறை அமைச்சு, கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் …

Read More »

பிள்ளையானுக்கு கிடைத்த பதவி!!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (22) காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜக்ஷவினால் அவருக்கான நியமனக்கடிதம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்டோபர் 11 திகதி கைது …

Read More »

தடை செய்யப்பட்ட 80 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு!!!

இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள மற்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வௌிநாட்டு மதுபானம் உள்ளிட்ட 80 கோடி ரூபாவிற்கு அதிகமான மதிப்புள்ள பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மஞ்சள், வௌிநாட்டு மதுபானம், சீஸ், பெஸ்டா, காய்கறிகள் மற்றும் ஒலிவ் எண்ணைய் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார். குறித்த பொருள்கள் பல தடவைகளாக கொண்டு வரப்பட்ட நிலையில், அவற்றில் 1,015,000 கிலோ மஞ்சளும் உள்ளடங்குவதாக …

Read More »

ஷானி அபேசேகரவுக்கு CID அறிவித்தல்!!

சிறைவைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகரவை அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 28 ஆம் திகதி அவரை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வு பிரிவின் கனிஸ்ட அதிகாரி காமினி செனவிரத்ன மற்றும் பிரதமர கனிஸ்ட அதிகாரி கே.பி.சமிந்த ஆகியோர் முன்வைத்த முறைப்பாட்டுக்கமையவே ஆணைக்குழு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் …

Read More »

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்!!

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று (22) மீண்டும் ஒன்று கூடவுள்ளது. இன்றை தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் காலை 10 மணிக்கே ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 5.30 மணி வரையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன் 4.30 மணி முதல் 5.30 மணி வரையில் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது. இதேவேளை 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். …

Read More »

சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீன பிரஜைகள் கைது!!

சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீன பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளுபிடிய பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடமொன்றில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்களிடம் இருந்து 6.5 மில்லியன் ரூபா பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Read More »

மழையுடனான காலநிலை தொடரும்!!

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. விசேட அறிவிப்பு: வடகிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிற்கு மேலாக …

Read More »

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைத்தீவில் இருந்து வருகை தந்த 8 பேர், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த கடற்படையை சேர்ந்த இருவரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,298 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை …

Read More »

குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் !!

பாரிய ஊழல் வழக்குகளின் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கெதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்றமையானது நீதித்துறை முறைமையில் பொதுமக்களின் நம்பிக்கையை மோசமாக பாதிக்கும் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் (TISL) நம்புகின்றது. அரசியல்வாதிகளுக்கும் புலனாய்வாளர்களுக்கும் இடையிலான முறையற்ற தொடர்புகள் உட்பட கடந்தகால சம்பவங்கள் விசாரணைகளின் போது பக்கச்சார்பின்மை மற்றும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு, அரசியல் அதிகார மையங்கள் தனித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. TISL இன் நிறைவேற்றுப் …

Read More »

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான மனு மீதான விசாரணை டிசம்பரில்!!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை செல்லுப்படியற்றதாக்குமாறு அறிவித்து தடைஉத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரிய வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் இரண்டு பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் போது 52 பில்லியனுக்கும் அண்மித்த அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக ரவி கருணாநாயக்க …

Read More »

அரச வங்கிகள், அவற்றுடன் இணைந்த நிறுவனங்கள் மீது இதுவரை 100 முறைப்பாடுகள்!!

நல்லாட்சியின் போது அரச வங்கிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் குழுவுக்கு இதுவரை 100 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வங்கிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளனன. இது குறித்து தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் முறைப்பாடுகளை முன் வைப்பதற்கான காலமும் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த குழு அறிவித்துள்ளது. பிரதான …

Read More »

மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய புதிய செயற்றிட்டம்!!

மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை அன்றைய தினமே நிவர்த்தி செய்வதற்கு தொலைபேசி ஊடான செயற்றிட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) ஆகியன ஒன்றிணைந்து இந்த சேவையை வழங்க உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கைகள் காலி மாவட்டத்தில் தொடங்கியுள்ள நிலையில், 500 முறைப்பாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மேற்கட்ட …

Read More »

அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு!!

அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு காணும் என்று விவசாய ஏற்றுமதி திணைக்களம் அறிவித்துள்ளது. தற்சமயம் 1,500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மஞ்சள் பயிரிடப்பட்டிருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் 22,500 மெற்றிக்தொன் மஞ்சள் அறுவடையாக கிடைக்கும் என்று ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read More »

மேலும் 18 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரண குணம்!!

இலங்கையில் மேலும் 18 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (19) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,088 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 3283 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

மலையகத்தில் நீர்தேக்கம் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் நீர் மட்டம் உயர்வு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மலையகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை தொடர்ந்தும் பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் அதிக மழை காரணமாக லக்ஸபான கெனியோன், மவுசாகலை, விமலசுரேந்திர நவ லக்ஸபான பொல்பிட்டிய, காசல்ரி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகின்றன. காசல்ரி நீர்தேக்கத்தில் வான் பாய்வதற்கு சுமார் ஆறு …

Read More »

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை !!

பிட்டபெத்தர பகுதியில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பிட்டபெத்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற கடல் அட்டைகள், மஞ்சள் பறிமுதல் – மூவர் கைது!!

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள், சமையல் மஞ்சள் அடங்கிய 22 மூடைகளை நடுக்கடலில் பறிமுதல் செய்து மீனவர்களையும் மெரைன் பொலிஸார் கைது செய்தனர். பாம்பன் பாலம் கடல் வழியாக வெளி மாவட்ட படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மெரைன் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குந்துக்கால் கடற்கரையில் இன்று காலை முதல் ரோந்து …

Read More »

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து விக்னேஸ்வரன் கருத்து!!

எத்தகைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் இறுதி நிமிடத்தில் டெனீஸ்வரன் சுதாகரித்து நல்லதொரு முடிவை எடுத்திருக்கின்றார். இன உணர்வு சார்ந்த அவரின் இந்த செயலை நான் பாராட்டுகின்றேன். அவரின் செயல் சுயநல சிந்தனையுடனும் மற்றும் இன ரீதியாகச் சிந்தித்த சிலரினதும் வாயில் மண் அள்ளிப் போடச் செய்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த நீதிமன்ற அவமதிப்பு …

Read More »

கொரோனாவால் இணையவழிக் குற்றங்கள் 500% அதிகரிப்பு!!

இந்தியாவில் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் 500% அளவில் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். கேரள காவல்துறை மற்றும் சைபர் ஸ்பேஸ் மற்றும் தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் நடத்திய தரவு தனியுரிமை மற்றும் ஹேக்கிங் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இணையப் பாதுகாப்பு எனும் தலைப்பில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் கலந்து கொண்டு பேசினார். கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து நிதி மோசடிகள் அதிவேகமாக அதிகரித்துள்ளதாக …

Read More »

33 ஆயிரம் கிலோ மஞ்சள் கடத்தல் – சுங்க அதிகாரிகள் இருவர் கைது!!

33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையை சுங்க திணைக்களத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் வௌியேற்றியமை தொடர்பில் சுங்க அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையுடன் மூன்று கொள்கலன் பாரவூர்திகளும் மற்றும் மூன்றாயிரம் கிலோ உளுந்து தொகையுடன் 7 லொறிகளும் நேற்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டிருநதது. புளுமென்டல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பிரதேசத்தில் வாகன தரிப்பிடம் ஒன்றில் சுமார் …

Read More »

மதுபோதையில் வாகனம் செலுத்திய 249 பேர் கைது!!

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அதன்படி, நாடு பூராகவும் நேற்றிரவு (18) மேற்கொள்ளப்பட்ட விசேட வாகன சோதனை நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 249 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வேறு குற்றங்கள் தொடர்பில் 3016 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

கொரோனா வைரஸில் இருந்து மேலும் 10 பேர் பூரண குணம்!!

இலங்கையில் மேலும் 10 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (19) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,070 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 3,281 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

திடீர் சோதனை நடவடிக்கை – 3,106 பேர் கைது!!

நாடளாவிய ரீதியில் நேற்று (18) இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 249 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வேறு குற்றச்சாட்டுக்களுக்காக 3,106 பேர் குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read More »

அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் அரசி இறக்குமதி செய்யப்படும்!!

அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் அரசியை இறக்குமதி செய்து விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ,எந்தவித காரணத்திறக்காவும் அரிசியின் சில்லறை விலையை மாற்றுவதற்கு எந்தவிதமான எண்ணமும் கிடையாது என்று தெரிவித்த அமைச்சர் மக்கள் முகங்கொடுத்துள்ள வாழ்க்கை செலவு பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. அதிகளவிலான நெல்லை சேகரித்து அதனை சந்தைக்கு விடாமல் சிலர் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More »

புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கோப் குழு கூட்டம் அடுத்த வாரத்தில்!!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பொது முயற்சிகள் மீதான குழுவின் (COPE) முதலாவது கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் பொதுக் கணக்குகள் மீதான குழுவின் (COPA) முதலாவது கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இரு தினங்களிலேயும் கூட்டம் 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த குழுக்களுக்கான தலைவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை எதிர்வரும் 24 ஆம் திகதி மக்கள் மனுக்கள் தொடர்பான …

Read More »

Ceylon Tea தரச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம்!!

நீண்டகாலமாக உலகம் பூராகவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள Ceylon Tea தரத் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார். சீனி, குளுக்கோஸ் வகைகள் மற்றும் சோடியம் பைகாபனேட், பெரசல்பேட் போன்ற பொருட்களைக் கலந்து தேயிலை உற்பத்தி செய்தல் தொடர்பாக அண்மைக் காலங்களில் ஊடகங்களின் மூலம் அறியக் கிடைக்கின்றது. அவ்வாறான தேயிலை உலக சந்தையில் நிராகரிக்கப்படுவதன் மூலம் தேயிலைக் கைத்தொழில் …

Read More »

அரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பான அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

அரச காணிகளில் முன்னெடுக்கப்படும் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் அது தொடர்பான அறிக்கை இன்று அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம்.ஹேரத் அவர்களின் பங்கேற்புடனான குழுவில், 12 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். கருங்கல் தொழிலில் ஈடுபடும் வர்த்தகர்கள் நடைமுறையில் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைத்து கொள்வதற்கு …

Read More »

சற்றுமுன் வௌியான செய்தி! – மேலும் சிலருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வௌிநாடுகளில் இருந்து வந்த ஐவரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,281 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,060 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 208 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை கொவிட் – …

Read More »

வீடு ஒன்றை வாங்க குறைந்த வட்டி வீதத்தில் கடன் வசதி!

• மாவட்ட ரீதியாக 1500 புதிய வீடுகள்… • வீட்டை கொள்வனவு செய்வதற்கு நீண்டகால கடன்… • 2024 இறுதிக்குள் குறைந்த வருமானமுடைய 70100 குடும்பங்களுக்கு வீட்டு வசதி… • நி்ர்மாணப் பணிகள் அரச மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன்… • கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம் புதுப் பொழிவுடன்… தனது அவதானத்தின்படி நாட்டில் உள்ள பொதுவான பிரச்சினை எவரும் தமது பணிகளை சரிவர செய்யாதிருப்பதாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய …

Read More »

இன்று முதல் 21 ஆம் திகதி வரை வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!!

நாடு முழுவதும் காற்று நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலையும் செப்டம்பர் 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி வரை தற்காலிகமாக சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவில் மழை …

Read More »

20 ஆவது திருத்தம் – பாராளுமன்றத்தில் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்படும்!!

20 ஆவது அரசியல் யாப்பு திருத்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமாயின் பாராளுமன்றத்தில் அது தொடர்பாக கலந்துரையாடி உடன்பாட்டிற்கு வருவதற்கு அரசாங்கம் தயாராகவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் இந்த திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 20ஆவது அரசியல் அமைப்பு திருத்த …

Read More »

விமலன் பயிற்சி முகாம் அமைந்திருந்த பகுதியில் புதிய துப்பாக்கி மீட்பு!!

மட்டக்களப்பு தும்பங்கேணி பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட கட்டிட பகுதியில் உள்ளூர் தயாரிப்பு சொட்கண் துப்பாக்கி ஒன்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். குறித்த துப்பாக்கி இன்று (17) மாலை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை படையணியின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தி இத்துப்பாக்கியை மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட …

Read More »

கொரோனா வைரஸில் இருந்து மேலும் 22 பேர் பூரண குணம்!!

இலங்கையில் மேலும் 22 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (16) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3043எ ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 3,271 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

CID யின் முன்னாள் பணிப்பாளருக்கு ஒக்டோபர் 2 வரை விளக்கமறியல் !!

குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர உள்ளிட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர மற்றும் உப பொலிஸ் பரிசோதகரான ரோஹன மெண்டிஸ் ஆகியோரை ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்ட நீதவான் நீதிமன்றமே குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கைது!!

போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர்கள் கைத செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டோஹா கட்டாரின் ஊடாக கனடா செல்ல முற்பட்ட 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read More »

பாடசாலை அதிபர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களை தயங்காது நிராகரிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின், பிரதமர் அவர்களின், பிரதமரின் அலுவலக அதிகாரிகளின் மற்றும் ஏனைய உயர் அரச அதிகாரிகளின் உத்தரவு என்று குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் பாடசாலை அதிபர்களுக்கு பலர் கடிதங்களை அனுப்பி வைக்கின்றனர். சில …

Read More »

மிச்சேல் பெஜ்லட்டின் நிலைப்பாட்டிற்கு இலங்கை கண்டனம்!!

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெஜ்லட் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய இலங்கைக்கான உதவி வதிவிட பிரதிநிதி தயாணி மெண்டிஸ் இதற்கு எதிரான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இன்று (16) உரையாற்றிய அவர், மிச்சேல் பெஜ்லட் தன்னிச்சையாகவும் அனுமான ரீதியாகவும் உரையாற்றியதாக தெரிவித்தார். மேலும் உத்தேச 20 ஆவது …

Read More »

கிழக்கு மாகாண பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் !!

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் மெத்தடிஸ்ட் தேவாலயத்தின் பாதிரியார்கள் மற்றும் அரச அதிகாரிகள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று (16) அலரி மாளிகையில் கலந்துரையாடினர். கிழக்கு மாகாணத்தில் திருக்கோவில், கல்முனை, அம்பாறை போன்ற பிரதேசங்களின் பாடசாலை, வைத்தியசாலை, போக்குவரத்து, கல்வி ஆகிய துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அம்பாறை மாவட்ட அபிவிருத்தி, ஆடை மற்றும் பிற தொழிற்சாலைகளுடன் கூடிய தொழிற்துறை …

Read More »