Home / admin

admin

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு!!

45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன் வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தை கருத்திற் கொண்டு விண்ணப்பித்த 45 வயதிற்கு உட்பட்ட அனைவரும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5,000 பட்டதாரிகள் …

Read More »

யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையை பாதுகாக்க நெதர்லாந்து உதவி !!

யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை பாதுகாப்பதற்கும், வடமாகாண அபிவிருத்திக்கும் நெதர்லாந்து நாட்டு அரசாங்கம் உதவி செய்யுமென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் எச்.இ. டோர்னிவார்ட் உறுதியளித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ். மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர் எச்.இ. டோர்வார்ட் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நண்பகல் சந்தித்து கலந்துரையாடினார். சுமார் 01 மணித்தியாலத்துக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் …

Read More »

இலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம்!!

இலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். நேற்று (31) நடத்தப்பட இருந்த இலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியதையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Read More »

தமிழக அகதி முகாமில் இருந்து படகு மூலம் மன்னார் வந்தவர்களுக்கு விளக்கமறியல் !!

தமிழக அகதி முகாமில் இருந்து படகு மூலம் தலைமன்னார் கடற்பகுதியூடாக மன்னாரை வந்தடைந்த இரு சிறுவர்கள் உட்பட 6 பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்று வியாழக்கிழமை (31) மாலை உத்தரவிட்டார். தமிழக அகதி முகாமில் இருந்து மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று முன்தினம் புதன் கிழமை (30) இரவு …

Read More »

100 நாள் திட்டத்தைப் பற்றி அமைச்சர் கபீர் ஹாசீம்!!

அன்று மாற்றத்துக்குக்காக ஒன்றிணைந்த பல கட்சிகள் இணைந்தே நூறு நாள் செயற்திட்டத்தை உருவாக்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டதாகவும், நாங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார். யாராவது …

Read More »

இன்று காலை 130 பயணிகளுடன் வந்த ஶ்ரீலங்கன் விமானத்திற்கு ஏற்பட்ட நிலை!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருந்த ஓமானின் – மஸ்கட் நகரில் இருந்து வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய பகுதியில் இன்று காலை காணப்பட்ட அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இந்த விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டுள்ளது. அதிகாலை 4.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த யூ.எல் – …

Read More »

தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலையுடன் தொடர்புடைய ஒருவர் சிக்கினார்!!

தெஹிவளை-கல்கிசை மாநகர சபையின் உறுப்பினரும் கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையுமான ரஞ்சன் டி சில்வாவின் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது றத்மலானை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். றத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த லமாஹேவாகே நிகால் திசாநாயக்க எனும் பெபா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது அவரிடம் 02 கிராமும் 660 மில்லிகிராம் ஹெரோய்ன் …

Read More »

இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ள பிரதேசங்கள்!!

கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (01) இரவு 07.00 மணிமுதல் நாளை காலை 07.00 மணிவரை இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு தற்காலிகமாக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது. …

Read More »

தென் மாகாணத்தில் பரவும் வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன!!

தென் மாகாணத்தில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சலை விரைவாக கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தென் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜேசூரிய கூறினார். தென் மாகாணத்தில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 13 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தவிர வயது வந்தவர்கள் சிலரும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் தற்போது அந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் …

Read More »

பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டிற்குள்ளேயே தீர்வினை எதிரிபார்க்கிறோம்!!

இலங்கை வந்துள்ள மக்கிலேனென் தொன்பெர்ரி தலைமையிலான அமெரிக்க காங்கிரஸ் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தனை நேற்று (30) கொழும்பில் சந்தித்தனர். நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து உறுப்பினர்களை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், நாட்டில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டு நாட்டை முன்னேற்றி செல்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் சேர்ந்து பயணிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தினார். மேலும் நாடு தற்போதுள்ள நிலைமை …

Read More »

பணி நிறுத்தப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? இன்று இறுதி தீர்மானம்!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணி நிறுத்தப் போராட்டத்தை மேலும் தொடர்வது சம்பந்தமாக இன்று தீர்மானிக்க உள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது. நேற்று முன் தினம் 04.00 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம் இன்று மாலை 04.00 மணிக்கு முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் இதுவரை தீர்வு வழங்காமையின் காரணமாக இன்று காலை நடைபெறவுள்ள நிறைவேற்றுக் குழு …

Read More »

படகு மூலம் இலங்கை திரும்பிய அகதிகள் ஆறு பேர் கைது!!

தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று (புதன்கிழமை) படகு வழியாக இலங்கை திரும்பிய நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்து படகு மூலம் தமிழகத்திற்குச் சென்று தங்கியிருக்கும் ஈழ அகதிகள் தமிழ்நாடு அகதி முகாமின் நெருக்கடி மற்றும் விமானம் மூலம் தாயகம் திரும்புவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக தமது இலகு பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை …

Read More »

காதலருடன் நடிகை மிக நெருக்கமாக இருக்கும் காட்சி! (வீடியோ) !!

பிரித்தானியாவை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் இந்திய சினிமாவில் அதிகம் பிரபலம். தற்போதைக்கு இந்திய படங்கள் எதுவும் அவர் வசம் இல்லாததால், அவர் சூப்பர்கேர்ள் சீரிஸில் மட்டும் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் அடிக்கடி தன் காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்று ஒருபடி மேலே சென்று காதலருக்கு லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் விடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

Read More »

ஐபிஎல் தொடரில் பல கோடி சம்பளத்தை அள்ளிய பயிற்சியாளர்கள் !!

11-வது ஐபிஎல் தொடர் போட்டிகள் கடந்த 27 ஆம் திகதியுடன் நிறைவடைந்தன. ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு 20 கோடியும், இரண்டாவது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 12.5 கோடியும், 3 வது, 4 வது இடம் பிடித்த கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிக்கு தலா …

Read More »

புயல், இடி மின்னல் தாக்கி 50 பேர் பலி!!

வட இந்தியாவில் பலத்த புயல் மற்றும் இடி மின்னல் தாக்கி சுமார் 50 பேர் இறந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் செவ்வாய் இரவு வீசிய புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் சுமார் 15 பேர் இறந்துள்ளனர். பிகாரிலும் இதே காரணத்தால் 20 பேர் இறந்வட இந்தியாவில் பலத்த புயல் மற்றும் இடி மின்னல் தாக்கி சுமார் 50 பேர் இறந்துள்ளனர்.துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயல், மின்னல் மற்றும் மின்கம்பி அறுந்து விழுந்ததில் …

Read More »

காதலில் 2 முறை தோற்றேன்… !!

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தில் நடித்து மலையாளத்தில் கண்சிமிட்டி பிரபலமான பிரியா வாரியர் அளவுக்கு ரசிகர்களை சேர்த்த ஷாலினி பாண்டேவுக்கு படங்கள் குவிகிறது. சாவித்திரி வாழ்க்கை கதை படத்திலும் வந்தார். தமிழில் தயாராகும் 100 பர்சன்ட் காதல், கொரில்லா படங்களில் நடிக்கிறார். சினிமாவுக்கு வந்தது பற்றி ஷாலினி பாண்டே கூறியதாவது:- “எனக்கு சினிமாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு இருந்தது. ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடும் படி …

Read More »

ஜெயலலிதாவாக ஆசைப்படும் நடிகை.. !!

மலையாளத்தில் துணிச்சலான வேடங்களில் நடித்து பெயர் எடுத்தவர் ரீமா கல்லிங்கல். தமிழில் யுவன் யுவதி என்ற படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் தமிழில் நடிக்கா விட்டாலும் கூட ஏற்கும் கதாபாத்திரங்களால் தென் இந்திய ரசிகர்களுக்கு ரீமா பரிச்சயம் தான். கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரீமா தொடர்ந்து மலையாள படங்களில் நடித்துவருகிறார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கு பாராட்டு …

Read More »

காலா பட emoji நான்கு மொழிகளில் அறிமுகம் !!

காலா திரைப்படத்திற்கான டிவிட்டர் எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிட்டரில் காலா என ஹேஷ்டேக்குடன் டைப்செய்து பதிவிட்டால் ரஜினி கர்ஜிக்கும் வகையிலான எமோஜி வருகிறது. கருப்பு, சிவப்பு நிறத்தில் ரஜினி கர்ஜிக்கும் வகையில் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் காலா என டைப் செய்தால் ரஜினியின் எமோஜி வருகிறது.

Read More »

மதுபோதையில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்!!

புதுச்சேரியில் மதுபோதையில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை பொலிஸார் தேடி வருகின்றனர். லாஸ்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் அதிக மதுப்பழக்கம் உள்ளவர். இதன் காரணமாக மனைவி சரஸ்வதியுடன் அவர் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை மதுபோதையில் இருந்த ஆறுமுகம் மீண்டும் குடிப்பதற்கு சரஸ்வதியிடம் பணம் கேட்டுள்ளார். பணம் தர சரஸ்வதி மறுத்த நிலையில் அவருடன் ஆறுமுகம் சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஆறுமுகம் உருட்டுக் கட்டையால் …

Read More »

13 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் இளைஞர் கைது!!

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த ஒருவரை (29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த நபர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 1.55 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வந்த Emirates விமான சேவைக்கு சொந்தமான EK 348 விமானத்தில் குறிப்பிட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். இந்நிலையில் பயணிகள் வருகை தரும் …

Read More »

ஆடை விற்பனை நிலையமொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்!!

மாத்தறை, நுபே பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றின் மீது இன்று (29) அதிகாலை துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த விற்பனை நிலையத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை …

Read More »

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்!!

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!!

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட துவரங்காடு, கிளிகுஞ்சிமலை பிரதேசங்களில் நேற்று (29) இரவு கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். 5 கிராம் கேரளா கஞ்சாவுடன் 23 வயதுடைய துவரங்காடு பகுதியை சேர்ந்த ஒருவரையும், 330 போதை மாத்திரைகளுடன் 26 வயதுடைய கிளிகுஞ்சுமலை பகுதியை சேர்ந்த ஒருவரையுமே இவ்வாறு கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களையும் …

Read More »

பழம்பெரும் நடிகை மரணம் !!

‘பாகியா’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கீதா கபூர். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு கீதா கபூரை அவரது மகன் ராஜா சிகிச்சைக்காக மும்பை கோரேகாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு கட்டணம் செலுத்தாமலே அங்கு இருந்து சென்றுவிட்டார். இதேபோல விமான பணிப்பெண்ணாக இருக்கும் நடிகையின் மகள் பூஜாவும் அவரை பார்க்க கூட வரவில்லை. பிள்ளைகளால் …

Read More »

ஹெரோயினுடன் வைத்தியர் ஒருவர் கைது!!

ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸ் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கினிகத்தேனை பேரகாமுள்ள பகுதியிலுள்ள உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 250 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் …

Read More »

ஐபிஎல் 2018 – சிறப்பு விருதுகள் பெற்ற வீரர்களின் முழு விவரம் !!

11-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. நாணய சுழற்சியை வென்ற சென்னை அணி தலைவர் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சென்னை அணி வாட்சனின் அதிரடியால் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்கள் எடுத்து …

Read More »

நிபா காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 தாதிகள் உட்பட 13 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு …

Read More »

விபத்தில் பெண்ணொருவர் பலி – மேலும் ஒருவர் வைத்தியசாலையில்!!

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தனியார் பேருந்து ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ​பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கெடஹெத்தே பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து பலத்த காயமடைந்த முச்சகரவண்டி சாரதியை மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி …

Read More »

பேருந்தின் மீது மரம் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி!!

கொழும்பு – பதுள்ளை பிரதான வீதியின் கல்கந்த, தியதலாவ பகுதியில் பேருந்து ஒன்றின் மீது மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read More »

புகையிரத சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!!

அனைத்து புகையிரத சேவை ஊழியர்களது விடுமுறைகளையும் இரத்து செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு இன்று (29) மேற்கொள்ள உள்ள வேலைநிறுத்த போராட்டத்தினால் மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ் விதானகே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் முடிவு செய்த பிரகாரம் இன்று (29) பிற்பகல் 4 மணியில் இருந்து தமது வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதாக புகையிரத …

Read More »

அரச நிறுவனங்களில் 3300 மொழி உதவியாளர்கள் இணைப்பு!!

அனைத்து அரச நிறுவனங்களிலும் அரசமொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3300 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதுதொடர்பில் தான் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கொழும்பு லக்ஸ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இதுதொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், இதற்காக விண்ணப்பிக்கும் தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் கல்வி …

Read More »

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் தடை!!

பலத்த காற்றின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தம்புள்ள, நாஉல, தெல்தெனிய, குண்டசாலை, பதுள்ள ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மின்சார தடையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Read More »

தற்போதைய அரசு ஊடகங்களை அச்சுறுத்துகிறது!!

தற்போதைய அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்படக்கூடிய நெருக்கடியான நிலைமைகள் தொடர்பில் தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்காக இவ்வாறு அச்சுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பெலிஅத்த பகுதியல் இடம்பெற்ற நிகழச்சியொன்றில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More »

மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் !!

மத்திய மலைநாட்டின் மேற்கு சாய்வான பகுதிகளுக்கு மணிக்கு 50 – 60 என்ற வேகத்தில் காற்று வீசலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. இந்த காற்றுடனான காலநிலை எதிர்வரும் இரு தினங்களுக்கு நீடிக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

விசாரணைக்களுக்காக அல் ஜசீராவின் உதவியை நாடும் ஐசிசி!!

பணத்திற்காக ஆடுகளத்தை மாற்றிய சம்பவம் தொடர்பில் அல் ஜசீரா தொலைக்காட்சியின் விவரண செய்தி தொடர்பாக, உறுப்பினர்களுடன் இணைந்து விசாரணைகளில் ஈடுபட உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது டெஸ்ட் தொடரை 3–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. காலையில் நடந்த …

Read More »

​ஓடுதள விளக்கில் 227 பயணிகளுடன் மோதிய விமானம்!!

கொச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 227 பயணிகளுடன் இன்று (27) மாலை கிளம்பிய UL 167 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம், ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் மோதியுள்ளது. இதனை அடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் …

Read More »

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின், “புதிய நிர்வாக சபை” தெரிவு..! (படங்கள்)

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் “புதிய நிர்வாக சபை” தெரிவு..! (படங்கள்) பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் “புதிய நிர்வாக சபை” தெரிவுக்கான கூட்டம் இன்றையதினம் (27.05.2018) நடைபெற்றது. இதில் பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் புதிய தலைவராக திரு.பிரேம்ரஞ்சீத் சிவசாமி (பபா) அவர்களும், செயலாளராக திரு.சொக்கலிங்கம் யோகலிங்கம் (யோகி) அவர்களும், பொருளாளராக திரு.குருமூர்த்தி பாரதிதாசன் (பாரதி) அவர்களும், உபதலைவராக திரு.வேலுப்பிள்ளை வேணுகுமார் (ராசன்) அவர்களும், உபசெயலாளராக திரு.ரி.திருஞானசம்பந்தர் (ஸ்ரீ) …

Read More »

கம்பஹா கல்வி வலய அனைத்து அரச பாடசாலைகளும் நாளை விடுமுறை!!

கம்பஹா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (28) விடுமுறை வழக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பாதைகள் நீரில் மூழ்கி இருக்கும் காரணத்தால் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More »

அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை சந்திக்க சென்ற ஜனாதிபதி!!

அதிகமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகனை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (26) பிற்பகல் சிலாபத்திற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது மகாவெவ பிரதேச செயலகத்தில் பிரதேச அரசியல் பிரதிநிதிகளையும் அரச அதிகாரிகளையும் சந்தித்த ஜனாதிபதி மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண செயற்திட்டங்கள் தொடர்பாக கண்டறிந்தார். இடம்பெயர்ந்த மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, விபத்துக்குள்ளான மக்களை …

Read More »

லொறி மோதியதில் பாதசாரி பலி!!

கொடதெனியாவ, பல்லேகம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளர். லொறி ஒன்று பின்னோக்கி செலுத்திய போது பாதையில் சென்ற பாதசாரி ஒருவர் மீது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொடதெனியாவ பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் லொறியின் ஓட்டுனரை கைது செய்துள்ளதுடன் குறித்த நபரை மினுவங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Read More »