Home / இன்றைய செய்திகள் / 8 சிலிண்டர்களை திருடிய நபர் ஒருவருக்கு விளக்கமறியல்!!

8 சிலிண்டர்களை திருடிய நபர் ஒருவருக்கு விளக்கமறியல்!!

திருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 8 சிலிண்டர்களை திருடிய நபர் ஒருவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (17) உத்தரவிட்டார்.

திருகோணமலை, தக்வாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் திருகோணமலை பகுதியில் வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் சிலிண்டர்களை திருடி விற்பனை செய்து வந்த நிலையிலே பொலிஸாருக்கு கிடைத்த கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: