Home / இன்றைய செய்திகள் / 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

60 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

60 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் தொகையொன்றுடன் நபரொருவர் பெஹலியகொடை புளுகஹசந்தி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் இருந்து 1900 போதை மாத்திரைகளும் மற்றும் 03 கிராம் 360 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி பியகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றில் ஹெரோயின் கடத்திய மற்றுமொரு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: