Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 45 பயணிகளில் 12 பேருக்கே டிக்கெற் கொடுத்த பஸ் நடத்துனர்

45 பயணிகளில் 12 பேருக்கே டிக்கெற் கொடுத்த பஸ் நடத்துனர்

busஇ.போ.ச. பஸ் ஒன்றில் டிக்கெற் பரிசோதகர்கள் ஏறியதும் அந்த பஸ்ஸின் நடத்துனர் தம்மிடமிருந்த டிக்கெற் புத்தகத்தை எறிந்துவிட்டு ஓடும் பஸ்ஸிலிருந்து பாய்ந்து தப்பிய சம்பவம் பிபிலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ்ஸில் பஸ் நடத்துனர் பயணிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு டிக்கட் கொடுக்காமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து டிக்கட் பிரசோதகர்கள் அந்த பஸ்ஸை மறித்து அப்பஸ்ஸில் ஏறி டிக்கெற்றுகளை பரிசோதனை செய்ய ஆரம்பித்தனர்.

அதன்போது பஸ் நட்துனர் தம்மிடமிருந்த டிக்கெற் புத்தகத்தை எறிந்துவிட்டு ஓடும் பஸ்ஸில் இருந்து பாய்ந்து தப்பியோடியுள்ளார்.

பஸ் நடத்துனர் தப்பியோடியதையடுத்து டிக்கெற் பரிசோதகர்கள் பிபிலை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்தனர். பொலிஸார் தப்பியோடிய பஸ் நடத்துனரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட பஸ்ஸில் 45 பிரயாணிகள் இருந்த போதிலும் அவர்கள் அனைவரிடமும் பஸ் நடத்துனர் பணம் பெற்றிருந்த போதிலும் 12 பேருக்கு மட்டுமே உரிய பிரயாண டிக்கட்டுகளை வழங்கியிருப்பது ஆரம்ப விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: