Home / இன்றைய செய்திகள் / 32 கிலோ மான் இறைச்சியுடன் ஒருவர் கைது !!

32 கிலோ மான் இறைச்சியுடன் ஒருவர் கைது !!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 32 கிலோ மான் இறைச்சியுடன் ஒருவரை இன்று (27) அதிகாலை வேளையில் கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கங்குவேலி, தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் சேருவில கல்லாறு காட்டுப் பகுதியிலிருந்து தெஹிவத்தை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் 32 கிலோ மான் இறைச்சியை கொண்டு சென்ற போதே பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸாரினால் நிறுத்தி பரிசோதனை மேற்கொண்ட போதே சந்தேக நபர் சட்டவிரோதமான முறையில் 32 கிலோ மான் இறைச்சி கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சந்தேக நபரை கைது செய்து சேருநுவர பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: