Home / இன்றைய செய்திகள் / 2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள்!!

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள்!!

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணி தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக தேசிய அடையாள அட்டையைக் கொண்டுள்ள அனைவரும் தத்தமது வாக்காளர் இடாப்பில் உள்வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது. வாக்காளர் இடாப்பில் பெயரை உள்வாங்குவதற்காக தமது கிராம உத்தியோகத்தரை சந்தித்து பிசி ஆவணத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த பொது தேர்தல் காரணமாக இம்முறை வாக்காளர் இடாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையை ஒத்திவைக்கவேண்டி ஏற்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு அமைவாக வாக்காளர் இடாப்பை உறுதி செய்யும் நடவடிக்கை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் மாகாண சபை தேர்தல் அடுத்த வருடம் பெப்ரவரி மாத்திற்கு பின்னர் நடைபெற்றால் அந்த தேர்தலுக்காக இந்த வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை பிசி ஆவணம் கிராம உத்தியோகத்தரினால் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: