Home / செய்திகள் / உலகசெய்திகள் / ஹைதியில் பஸ் கவிழ்ந்ததில் 23 பேர் பலி: 17 பேர் காயம்

ஹைதியில் பஸ் கவிழ்ந்ததில் 23 பேர் பலி: 17 பேர் காயம்

02792a75-fbbd-430d-b687-9a4e002a6b83_S_secvpfமெக்சிகோ அருகே ஹைதி என்ற தீவு நாடு உள்ளது.

அங்குள்ள ஜெரீமியா நகரில் இருந்து ஒரு பஸ் ரோசியூ என்ற இடத்தில் சென்ற போது ரோட்டோரம் கவிழ்ந்து நொறுங்கியது.

அதில், பஸ்சில் பயணம் செய்த 23 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்தனர்.

ஹைதியில் கடந்த 2010–ம் ஆண்டு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ரோடுகள் சேதம் அடைந்தன.

இதில் இருந்து ரோடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. அதனால் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: