Home / இன்றைய செய்திகள் / ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!!

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!!

புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சவீவபுரத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் தலைமையக பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 4 கிராம் 500 மில்லி கிராம ஐஸ் ரக போதைப் பொருள் மற்றும் 2 மின்சார அளவு (தராசு) என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: