Home / இன்றைய செய்திகள் / ஹெரோயினுடன் நகர சபை மேற்பார்வையாளர் உட்பட 4 பேர் கைது!!

ஹெரோயினுடன் நகர சபை மேற்பார்வையாளர் உட்பட 4 பேர் கைது!!

கொலன்னாவை நகர சபையின் மேற்பார்வையாளர் உட்பட 4 பேர் பாதுக்கை பொலிஸாரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஹெரோயின் தொகையின் பெறுமதி சுமார் 12 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, கார் ஒன்றும் மற்றும் இரண்டு முச்சக்கரவண்டிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: