Home / செய்திகள் / சினிமா செய்திகள் / ஹாலிவுட் படத்தில் ரஹ்மான் இசை அமைத்த தமிழ் பாடல்…!!

ஹாலிவுட் படத்தில் ரஹ்மான் இசை அமைத்த தமிழ் பாடல்…!!

Kollywood-news-8878இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த தமிழ் பாடல் ஹாலிவுட் படத்தில் இடம்பிடித்தது. ஹாலிவுட் படம் மில்லியன் டாலர் ஆர்ம் படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 

இப்படத்தில் 90களில் தான் இசை அமைத்த தமிழ் பட பாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக ஏற்கனவே கூறி இருந்தார். தற்போது அப்பாடல் பற்றி அறிவித்திருக்கிறார். 

என் சுவாச காற்றே என்ற படத்தில் உன்னிகிருஷ்ணன், சித்ரா இணைந்து பாடிய, திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள்போல் என்ற பாடல்தான் ஹாலிவுட் படத்தில் இடம்பிடித்திருக்கிறது. 

மைதானம் ஒன்றில் இரண்டு சிறுவர்கள் ஓடுவதுபோல் வரும் சூழலின் பின்னணியில் இப்பாடல் ஒலிப்பதுபோல் படத்தில் இடம்பெறுகிறது. 

தமிழில் எவ்வாறு ஒலிப்பதிவு செய்யப் பட்டு படத்தில் இடம்பெற்றதோ அதிலிருந்து இசை மற்றும் பாடல் வரிகளில் எந்தவொரு மாற்றமும் செய்யாமல் தமிழிலேயே இப்பாடல் படத்தில் ஒலிக்கும் என்றார் ரஹ்மான். தமிழில் தற்போது காவியத் தலைவன் படத்திற்கு இசை அமைத்து வருகிறார். அத்துடன் ரஜினி நடிக்கும் லிங்கா படத்துக்கும் இசை அமைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: