Home / இன்றைய செய்திகள் / ரஷ்ய நாட்டவரை நாட்டிலிருந்து வௌியேற்ற நடவடிக்கை!!

ரஷ்ய நாட்டவரை நாட்டிலிருந்து வௌியேற்ற நடவடிக்கை!!

கொவிட் 19 வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட ரஷ்ய நாட்டவரை இன்றைய தினம் அவரின் தாயகம் நோக்கி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மாத்தறை – பொல்ஹேன பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் அவர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

எவ்வாறாயினும் நேற்று (25) மாலை மேற்கொள்ளப்பட்ட இறுதி பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அதேபோல், இதுவரையான காலப் பகுதியில் , சுமார் 45000 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு வெளியேறியுள்ளனர்.

முப்படையினரால் நிருவகித்து வரும் 68 தனிமைப்படுத்தல் மையங்களில் 6991 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று (24) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1300 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 278,145.ஆகும் என கொவிட் மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: