Home / செய்திகள் / சினிமா செய்திகள் / ரஜினியுடன் நடிப்பதால் சோனாக்ஷிக்கு தனுஷ் வலை….!!

ரஜினியுடன் நடிப்பதால் சோனாக்ஷிக்கு தனுஷ் வலை….!!

dhanushதனுஷ்க்கு ஹீரோயின் தேடுகிறார் வெற்றி மாறன். இதற்காக ஹீரோயின் லிஸ்ட் தயாராகி இருக்கிறது. இந்நிலையில் ரஜினியுடன் சோனாக்ஷி நடிப்பதால் அவரது கால்ஷீட்டையும் பெற படக்குழு முயல்கிறதாம்.

தனுஷ் நடிப்பில் ஆடுகளம், பொல்லாதவன் படங்களை இயக்கினார் வெற்றி மாறன். அடுத்து வட சென்னை என்ற பெயரில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவிருந்தார்.

ஆனால் அப்படம் அப்படியே நின்றுபோய் இருக்கிறது. இந்நிலையில் தனுஷ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் வெற்றி மாறன். இவர்கள் இணையும் 3வது படம் இது.

ராஞ்சனா படம் மூலம் இந்தியில் ரூ.100 கோடி வசூல் கிளப் உறுப்பினராகி இருக்கும் தனுஷ் தற்போது அமிதாப்பச்சனுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலின் 2வது மகள் அக்ஷரா, தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்தியிலும் தனுஷ் கை ஓங்கி இருப்பதால் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தென்னிந்திய ஹீரோயினை ஒப்பந்தம் செய்வதா? பாலிவுட் ஹீரோயினை ஒப்பந்தம் செய்வதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஹீரோயின் பட்டியலை பட குழு தயாரித்திருக்கிறது. அதில் பாலிவுட் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

இந்தியிலும் இந்த படத்தை டப் செய்து வெளியிட அது உதவும் என படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த பட்டியலில் சோனம் கபூர், சோனாக்ஷி சின்ஹா, அலியா பட் போன்றவர்களுடன் நம்மூர் இளம் ஹீரோயின்கள் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாம்.

சோனாக்ஷி சின்ஹா, பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை. அவர் இப்போது ரஜினியுடன் லிங்கா படத்தில் நடிப்பதால் அவரது கால்ஷீட்டை எளிதில் பெறலாம் என தனுஷ் பட டீம் கணக்கு போடுகிறது. இதே படத்தில் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் ஆடுகளம் படத்திலேயே நடிக்க வந்த வாய்ப்பை பார்த்திபன் நழுவவிட்டதால் இந்த படத்தில் கேட்டதும் உடனடியாக ஒப்புக்கொண்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: