Home / இன்றைய செய்திகள் / யாழில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் படுகாயம்!!

யாழில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று (09) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மீதே இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: