Home / இன்றைய செய்திகள் / மேலும் 5 பேருக்கு கொரோனா!!

மேலும் 5 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டில் கொரோானா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,900 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 6 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை 2,676 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் 213 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: