Home / இன்றைய செய்திகள் / மேலும் 2 கடற்படை வீரர்களுக்கு கொரோனா !!

மேலும் 2 கடற்படை வீரர்களுக்கு கொரோனா !!

இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு தொற்றாளர்களும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 382 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 62 கடற்படை வீரர்கள் இதுவரை பூரணமாக குணம் அடைந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் பத்து கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து இருந்தனர்.

மேலும் நாடு பூராவும் உள்ள வைத்தியசாலைகளில் தற்போது 500 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: