Home / இன்றைய செய்திகள் / மேலும் 14 பேர் பூரண குணம்!!

மேலும் 14 பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இன்று காலை 10.00 மணியளவில் மேலும் 14 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1562 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 790 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதுவரை இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இவர்களில் 1991 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: