Home / இன்றைய செய்திகள் / மேலும் ஒரு கடற்படை வீரருக்கு கொரோனா!!

மேலும் ஒரு கடற்படை வீரருக்கு கொரோனா!!

கடற்படையை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1559 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 27 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 781 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 768 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 15 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 381 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: