Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / முல்லைத்தீவு கணனி விற்பனை நிலையத்தில் வெடிப்பு: ஒருவர் காயம்

முல்லைத்தீவு கணனி விற்பனை நிலையத்தில் வெடிப்பு: ஒருவர் காயம்

56565முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் கணினி விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் கடையும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இதில் கடையில் பணியாற்றும் இ.நிதர்சன் (வயது 24) என்பவர் காலில் எரிகாயங்களுடன் முள்ளியவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது –

முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரிக்கு அருகில் குறித்த கணினி இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையம் உள்ளது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்தக் கடையில் வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது.

அதன் பின்னர் கடை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது கடைக்குள் பணியாளர் ஒருவர் தங்கியிருந்துள்ளார்.இவரே எரிகாயங்களுக்கு இலக்காகியுள்ளார்.

உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த பொலிஸார் தண்ணீர் பவுஸரின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். எனினும் அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

கடை எவ்வாறு தீப்பிடித்தது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: