Home / இன்றைய செய்திகள் / மஹிந்தானந்தவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

மஹிந்தானந்தவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்த மாதம் 15 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவரடங்கிய கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது கேரம் போடகள் மற்றும் தாம் போர்டுகளை இறக்குமதி செய்து அவற்றை விளையாட்டு சங்கங்களுக்கு பகிர்ந்தளித்தன் மூலம் அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஆர்.குருசிங்க, சசி .மகேந்திரன் மற்றும் அமல் ராணராஜா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாம் முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் 26 பேர் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும் வழக்குடன் சம்பந்தப்பட்ட 15 பொருட்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: