Home / இன்றைய செய்திகள் / மஞ்சள் தொடர்பில் சுற்றிவளைப்புக்களை தீவிரப்படுத்த நடவடிக்கை!!!

மஞ்சள் தொடர்பில் சுற்றிவளைப்புக்களை தீவிரப்படுத்த நடவடிக்கை!!!

மஞ்சள் தொடர்பில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புக்களை தீவிரப்படுத்த பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போதைய நிலையில் மஞ்சள் விற்பனை தொடர்பான குற்றங்கள் காரணமாக 113 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க குறிப்பிட்டார்.

ஒரு கிலோ கிராம் மஞ்சளுக்காக 750 ரூபாய் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும், குறித்த விலையை விட அதிக விலைக்கு மஞ்சளை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், காலாவதியான மஞ்சளை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மஞ்சளுடன் பல்வேறு பொருட்கள் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், தற்போதைய நிலையில் பிரதேசங்கள் சிலவற்றில் 42 மஞ்சள் தூள் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த மஞ்சள் தூள் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 23 மாதிரிகளின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்த அவர், குறித்த மாதிரிகளில் 13 வகை மஞ்சள் தூள்களில் சில பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாடு பூராகவும் உள்ள மாவட்ட பிரதிநிதிகளுக்கு இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: