Home / இன்றைய செய்திகள் / போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகள் நீதிமன்றத்தின் முன்னிலையில்!!

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகள் நீதிமன்றத்தின் முன்னிலையில்!!

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகளும் இன்று (08) நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுகின்றனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத தெரண ´BIG FOCUS´ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் அனைவரையும் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 18 அதிகாரிகள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: