Home / இன்றைய செய்திகள் / பேருந்தில் சிக்கி நபர் ஒருவர் ஸ்தலத்தில் பலி !!

பேருந்தில் சிக்கி நபர் ஒருவர் ஸ்தலத்தில் பலி !!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் முன் டயரில் சிக்குண்டு நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (17) பிற்பகல் இரண்டரை மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நுவரெலியாவில் இருந்து கொழும்பு செல்வதற்காக பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு பயணித்த ஒருவர் நடை பதையினை கடக்க முற்பட்ட வேளையில், பேருந்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த நபர் 45 வயது மதிக்கதக்கவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பத்தில் பலியான நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கபெற வில்லையென பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பத்தில் பலியான நபரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: