Home / இன்றைய செய்திகள் / பிடியாணை இன்றி கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் இருந்தது!!

பிடியாணை இன்றி கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் இருந்தது!!

மத்திய வங்கி முறிகள் ஏலங்களில் 52 பில்லியனுக்கும் அதிகமான அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க மற்றும் ஏனைய சந்தேக நபர்களை பிடியாணை இன்றி கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் இருந்ததாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தம்மை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை இரத்துச் செய்யுமாறு கோரி ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரீட் மனு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் நாயகம் மிலிந்த குணதிலக மேற்படி விடயத்தை கூறினார்.

ரவி கருணநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக பொது சொத்துச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் விசாரணை நடத்தி நீதிமன்றில் விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் நாயகம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ரவி கருணநாயக்க மற்றும் பிற சந்தேக நபர்களை இந்தச் சட்டத்தின் கீழ் பிடியாணையின்றி கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் இருந்ததாக சுட்டிக்காட்டினார்.

விசாரணையின் அடிப்படையில், ஏலத்திற்கு முன்னர் வங்கிகளின் தலைவர்களுக்கு முறிகள் விற்பனை தொடர்பில் ரவி கருணநாயக்க அறிவுறுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் நாயகம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க மற்றும் பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் அர்ஜுன் எலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்கள் வெளிவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் நாயகம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணைக்கு இடையூறு விளைவிக்கக் கோரி ரவி கருணநாயக்க மற்றும் மனுதாரர்களால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் நாயகம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ரவி கருணநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்க பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையை அதிகாரமற்றதாக அறிவித்து தீர்ப்பளிக்குமாறு கோரியிருந்தாலும், அவ்வாறான உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என பிரதி சொலிசிட்டர் நாயகம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மனுக்கள் மீதான மேலதிக விசாரணை இந்த மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: