Home / இன்றைய செய்திகள் / பாராளுமன்றத்தில் முதல் உரை: இந்தியர் படுகொலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்..!!

பாராளுமன்றத்தில் முதல் உரை: இந்தியர் படுகொலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்..!!

201703011118428166_Trump-said-US-stands-united-against-hate-condemning-Kansas_SECVPFஅமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றும் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா(32) என்பவர் கடந்த 23-ம் தேதி மதுபான விடுதி ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அங்குள்ள ஆஸ்டின் மதுபான விடுதியில் அமர்ந்திருந்த ஸ்ரீனிவாஸ் கான்சாஸ் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப் பந்தாட்ட போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து, ரசித்து கொண்டிருந்தனர்.

மும்முரமான ஆட்டத்தின்போது அங்கே இருந்த ஒருவன், திடீரென தனது கைத்துப்பாக்கியை உருவி அருகில் இருந்த இந்தியர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். ‘என் நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூவியபடி அவன் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் ஸ்ரீனிவாஸ் என்ற என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இச்சம்பவத்தால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே, கொல்லப்பட்ட ஸ்ரீனிவாசின் உடல் அவரது சொந்த ஊரான ஐதராபாத் நகரில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்ற கூட்டு கூட்டத்தில் பதிவுயேற்ற பின் முதல் முறையாக நேற்று உரையாற்றினார். அப்போது கான்சாஸ் துபப்பாக்கி சூட்டில் இந்திய என்ஜினீயர் உயிரிழந்த சம்பவத்திற்கு அவர் வேதனை தெரிவித்தார்.

இதுதொடர்பாக, டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:

வெறுப்புணர்வு மற்றும் தீய சக்திகளை கண்டிப்பதில் அமெரிக்கா எப்போதும் ஒருமித்த கருத்தையே கடைபிடித்து வந்துள்ளது. யூத சமுதாயத்தினர் கூடம் இடங்கள், யூதர்களின் கல்லறை ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தும், கான்சாஸ் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமும் நமக்கு ஒன்றை நினைவுப்படுத்துகிறது.

கொள்கைகள் அடிப்படையில் மாறுபட்ட கருத்துக்களை நாம் கொண்டிருந்தாலும், வெறுப்புணர்வு மற்றும் தீமைகள் எந்த வடிவில் வந்தாலும் அவற்றை கண்டிப்பதில் ஒன்றுபட்ட நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.

மாறுபாடு கொண்ட அரசியல் மற்றும் மதம் சார்ந்த எண்ணங்கள் தான் நமது நாட்டை உயரிய இடத்தில் நிலைநாட்டி வைத்துள்ளது என்பதை இந்த அவையில் நான் தெரிவிக்கும் கண்டனத்தை வைத்து ஒவ்வொரு அமெரிக்கனும் உணர்ந்து கொள்ள வேண்டும். கான்சாஸ் மாநிலத்தின் ஓலாதே பகுதியில் நடைபெற்ற அறிவீனமான விபரீதத்தால் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்பவரின் உயிர் பறிபோனது தொடர்பாகவும், அதே சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தது பற்றியும் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு நான் உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன்.

பெருமதிப்பிற்குரிய இந்த பாராளுமன்றத்தில் இருந்தவாறு இதை போன்ற வெறுப்புணர்வு சார்ந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிப்பதன் மூலம் அமெரிக்காவில் வாழும் மக்கள் தமது சொந்த சமுத்தியத்தில் அச்சத்துடன் வாழ வேண்டிய அவசியம் இல்லை என்ற வன்மையான கருத்தை இந்நாட்டின் அதிபர் பதிவு செய்ய வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: