Warning: Use of undefined constant _COOKIE - assumed '_COOKIE' (this will throw an Error in a future version of PHP) in /home/poormrxm/swisspungudutivu.com/wp-content/themes/raj_creation_them/framework/functions/theme-functions.php on line 1684
பதில் பொலிஸ்மா அதிபர் சார்ப்பில் ஆஜராக முடியாது!! – Awareness Society of Pungudutivu People.Switzerland
Home / இன்றைய செய்திகள் / பதில் பொலிஸ்மா அதிபர் சார்ப்பில் ஆஜராக முடியாது!!

பதில் பொலிஸ்மா அதிபர் சார்ப்பில் ஆஜராக முடியாது!!

வேலை நிறுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு விசாரணையில் பதில் பொலிஸ்மா அதிபர் சார்ப்பில் தன்னால் ஆஜராக முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நுகேகொடை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு சம்பவத்தின் சந்தேக நபரொருவரான மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

கிஹான் பிலபிடியவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவினை பிரதானமான பரிசீலனை செய்ததன் பின்னர் அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதியளித்து மேன்முறையீட்டு தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டீ. நவாஸ் மற்றும் சோஹித ராஜகருணா ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்த இடைக்காலத் தடையுத்தரவு வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி இந்த மனு தொடர்பில் சமர்ப்பிப்புக்களை முன்வைக்குமாறு தெரிவித்து பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள நுகேகொடை நீதவான் எம்.எம்.மிஹால், பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபருக்கு நீதிமன்றினால் அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: