Home / இன்றைய செய்திகள் / (படங்கள் இணைப்பு) வரலாற்றில் முதல்முறையாக “புங்குடுதீவு உறவுகளின்” உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளின் நேரடி கலந்துரையாடல்..!

(படங்கள் இணைப்பு) வரலாற்றில் முதல்முறையாக “புங்குடுதீவு உறவுகளின்” உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளின் நேரடி கலந்துரையாடல்..!

104354விடயம்- குடிநீர், நன்னீர், பஸ் தரிப்பு நிலையம் அமைத்தல் தொடர்பாக உள்நாட்டு வெளிநாட்டு இரு தரப்பு உறவினர்களுக்கான கலந்துரையாடல்.

திகதி: 10.08.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30மணி
இடம்: சமூக பொருளாதார அபிவிருத்திச் சங்கம் தூய சவேரியான் ஆலயம், புங்குடுதீவு

மேற்படி இரு தரப்பினருக்கான கலந்துரையாடல் (உள்நாட்டு, வெளிநாட்டு) ஆனது சமூகப் பொருளாதார அபிவிருத்தி அலுவலகத்தில் பங்குத்தந்தை தலைமையில் மாலை 3.30மணியளவில் இறை வழிபாட்டுடன் ஆரம்பமானது.

இதில் வெளிநாட்டு “புங்குடுதீவு ஒன்றியங்களின்” சார்பில்.. கனடா ஒன்றியத்தின் (புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் -கனடா) சார்பில் அதன் தலைவர் திரு.குமார், பிரித்தானியா ஒன்றியத்தின் (புங்குடுதீவு நலன்புரிச் சங்கம்- லண்டன்) சார்பில் திரு.சொ.கருணைலிங்கம், சுவிஸ் ஒன்றியத்தின் (புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிஸ்லாந்து) சார்பில் அதன் தலைவர் திரு.இ.இரவீந்திரன், செயலாளர் திரு.த.தங்கராஜா, ஆலோசனை சபை உறுப்பினர் திரு.க.சேனாதிராஜா ஆகியோர் தொலைபேசி மூலமாகவும், பிரான்ஸ் ஒன்றியத்தின் (பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்) சார்பில், அதன் செயலாளர் திரு.சு.சஸ்பாநிதி அவர்களும், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில், அதன் உபதலைவர் திரு.சுவிஸ்ரஞ்சன் ஆகியோர் “ஸ்கைப்” மூலமாகவும் புங்குடுதீவு மக்களுடன் நேரடியாக உரையாடினார்கள்.

புங்குடுதீவில் இந்நிகழ்விற்கு வருகைதந்த பேராசிரியர் குகபாலன்-சர்வோதய அறங்காவலர் ஜமுனாதேவி, முன்னாள் அதிபர் எஸ்.கே.சண்முகலிங்கம், கிராம சேவகர் எஸ் சந்திரா, அதிபர்கள், நலன் விரும்பிகள் என அனைவரையும் வரவேற்றுக் கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் பற்றி சில கருத்துக்களை அவர் கூறினார்.

1. கடல் நீரை நன்னீர் ஆக்குதல்
2. கல்வி
3. குடிநீர்ப் பிரச்சினைக்கான தீர்வு
4. பேருந்து தரப்பிடம்
போன்றவை பற்றி கருத்துக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, புங்குடுதீவு வட இலங்கை சர்வோதய அறங்காவலர் செல்வி பொ. ஜமுனாதேவி உரையாற்றுகையில், சில வேலைத் திட்டங்களையும் செயற்பாடுகளையும் உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளுக்கு முன்வைத்தார்.

1. கடல்நீரை நன்னீர் ஆக்குதல்,
யாழ் மாவட்ட நீரானது ஆரம்ப காலத்தைவிட தற்போது மாசடைந்து வருவதால் யாழ் மாவட்டத்தில் இருந்து நீர் கொண்டு வருவது சாத்தியமற்றது. ஆகவே கடல் நீரை நன்னீர் ஆக்குவது உகந்தது எனவும்

2. மாலை நேரக் கல்வி, அதாவது பாடசாலை மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதற்கு பாடசாலைக் கல்வி

3. வைத்தியசாலை, அதாவது மக்கள் நீண்டதூரம் வைத்தியசாலைக்கு நடந்து செல்ல வேண்டிய தேவை உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு போக்குவரத்து வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஏனெனில் கர்ப்பிணி தாய்மார், குழந்தைகள், ஏனைய நோயாளர்களின் சௌகரியத்தைக் கருத்திற் கொண்டு போக்குவரத்து வசதியினை ஏற்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து எஸ்,கே.சண்முகலிங்கம் அதிபர் கருத்துக் கூறுகையில்,
1. நன்னீர் (குடிநீர்த் திட்டம்) பற்றி…
இரணைமடு குடிநீர்த் திட்டம், ஆறுமுகத் திட்டம் பற்றி கூறினார்… இரணைமடு திட்டமானது அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது எனவும், இத்திட்டத்தின் கீழ் தீவகமும் அடங்கியுள்ளது எனவும், நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆறுமுகத்திட்டத்தில் தீவகம் அடங்கவில்லை. இத்திட்டம் உவர்நீரை நன்னீர் ஆக்கும் திட்டம் எனவும் கூறினார்.

கடந்த காலங்களில் குறிப்பாக முப்பது வருடங்களுக்கு முன்பு வாய்க்கால்களில் கதவுகளை திறத்தல், பூட்டுதல் தொடர்பான செயற்பாடுகளை பிரதேச சபை செய்து வந்ததாகவும், தற்போது இந்த நடைமுறைகள் மாறி பொதுமக்கள் வாய்க்கால்களை திறப்பதனால் உவர்நீர் ஊர்மனைக்குள் வருகின்றது எனவும்,

2. தீவக மக்களை யாழ் வைத்தியசாலையில் கவனிப்பு குறைவாக இருப்பதனாலும், தீவக நோயாளிகளுக்கு கட்டில் மெத்தை வழங்குவதில்லை, கவனிப்பதுவும் குறைவு, ஆகவே ‘தீவக நோயாளர் விடுதி’ அமைக்க வேண்டும் என கூறி அத்துடன் ஆஸ்பத்திரி சந்தியில் அவசர அத்தியாவசிய ஆட்டோ சேவை ஒரு மணித்தியாலத்திற்கு ஒருதடவை சென்று வந்தால் நல்லது எனவும் கூறி தனது உரையினை நிறைவு செய்தார்.

அடுத்து பிரதேசசபை உறுப்பினர் ரி.தயாபரன் அவர்கள் கருத்துக் கூறுகையில், இரண்டு விடயங்களை முன்வைத்தார். மாலைநேரக் கல்வி ஒரே இடத்தில் வைக்க வேண்டும். மற்றும் மழை இல்லாத காரணத்தால் பனை மரத்தில் கூட ஓலை குறைவாக உள்ளது எனவும் கூறினார்.

அடுத்து அதிபர் என். நாகராஜா கூறுகையில்,
1. குடிநீர் திட்டத்தைப் பற்றி எடுத்துக் கூறினார். இதற்கு குளங்களை புனரமைக்க வேண்டும் என்றார்.
2. கல்வி – கல்வி பற்றி பெற்றோர்க்கு விழிப்புணர்வு இல்லை. ஆகவே பெற்றோர்க்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும்.
கல்வி வகுப்பு நடத்த விரும்புவோர் மத்திய பகுதியில் கல்வி நிலையத்தை நடத்த வேண்டும் எனக் கூறினார்.

கூட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் சார்பில் த.கிருஷ்ணமூர்த்தி ஐயா கருத்துக் கூறுகையில்,
1. தண்ணீர்ப் பிரச்சினை
2. ஆசிரியர்கள் மனமுவந்து பிள்ளைகளுக்கு கல்வியறிவைப் புகட்ட வேண்டும்
3. வைத்தியசாலை செல்வதற்கு போக்குவரத்து வசதி செய்ய வேண்டும்

தொடர்ந்து பேராசிரியர் குகபாலன் அவர்கள் மக்கள்முன் கருத்துக்களை முன்வைக்கையில்,
1. குடிநீர்
2. கல்வி
3. போக்குவரத்து (வைத்தியசாலைக்கு)
உலகம் வெப்பமயமாகின்றபடியால் எல்லா இடமும் தண்ணீர்ப் பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை இருக்கின்றது. இங்கு குடிநீர்ப் பிரச்சினை மிகவும் அதிகமாக இருக்கின்றது. மழைநீரை கடலுடன் சேரவிடாமல் சேமிக்க வேண்டும். ஏனெனில் இரணைமடு குளத்திலிருந்து தண்ணீர் வருவது அரசியல் பிரச்சினை காரணமாக சாத்தியமாகாது எனவும், சாட்டியில் தண்ணீர் இல்லாத நிலை காணப்படுவதாகவும் யாழ்ப்பாணத்தில் நிலத்தை வாங்கி அங்கிருந்து தண்ணீர் கொண்டு வரலாம் என்றும்

தீவகத்தில் கூடுதலான பிள்ளைகள் கலைப்பீடத்தை மட்டும் கற்கிறார்கள் எனவும், பெற்றோர்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். கல்வி வீழ்ச்சி அடையாது கல்வி வீழ்ச்சியிலிருந்து மீள 213 என்ற வகையில் சென்ரர் அமைத்துக் கொள்ள முடியுமென புலம்பெயர் சகோதரரிடம் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சுவிஸ் ஒன்றியம், பிரான்ஸ் ஒன்றியம், லண்டன் ஒன்றியம், கனடா ஒன்றியம் போன்ற ஒன்றியங்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது அவர்கள் கூறிய கருத்துக்கள் சில பின்வருமாறு,
• குளங்களை அகலப்படுத்துதல்
• குறுகிய காலத்தில் பெய்கின்ற மழை நீரை சேமித்தல் வேண்டும்
• பாடசாலைகள், கோயில்களில் மழைநீரை சேமிக்க தொட்டி கட்டுதல்
• புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு சுற்றுமதில், மர நடுகை போன்றவை தொடர்பாகவும்

• பெரியகிராய், சிறியகிராய் குளத்தை புனரமைப்பு செய்ய வேண்டும்.
• நன்னீர் படுக்கைகள் தொடர்பான ஆய்வு ஐப்பசி மாதத்திற்குள் நிறைவு பெறும் என பேராசிரியர் கூறினார்.

சுவிஸ் ஒன்றிய தலைவர் இ.இரவீந்திரன் மக்களுக்கு “ஒருநாள் கருத்தமர்வினை நடத்த ஒழுங்கு செய்யக்” கேட்டுக் கொண்டார்.

லண்டன் ஒன்றியம், கருணாலிங்கம் கூறுகையில், “குடிநீர் பிரச்சினையை ஒன்று சேர்ந்து தீர்க்க முடியுமெனக்” கூறினார்.

கனடாவிலிருந்து சில கருத்துக்கள்:
1. புங்குடுதீவு மக்களின் ஒற்றுமை, போக்குவரத்து- பாலம், பெரிய சந்தை, சுற்றுலா விடுதி மூலம் தொழில் வாய்ப்பு கொடுக்க முடியும்.
2. வெற்றி கேடயம்(பனை ஓலை உற்பத்தி) புங்குடுதீவு மக்களின் வரவேற்பையும் ஏற்றுக் கொள்ளக்கூடியது.
3. ‘புங்குடுதீவு மக்கள் வரவேற்கின்றோம்’ என்ற வளைவு கட்ட வேண்டும், அதற்கு உதவி செய்ய தயார்

பிரான்ஸ் ஒன்றியம் –
6. புங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதில் கட்டுவது தொடர்பாகவும்,

லண்டன் ஒன்றியம் –
7.தென்னங்கன்றுகள் வழங்குதல்

சுவிஸ் ஒன்றியம் –
8. பொதுக் கிணறுகள் தூர்வாருதல்,
9. பொதுக் குளங்கள் தூர்வாருதல்,
10. பஸ் தரிப்பிடங்களில் நிழற்குடை அமைத்தல்..
11. பன்னிரண்டு வட்டாரங்களையும் ஒன்றிணைத்து அபிவிருத்திக்குழு அமைத்தல்..

இவ்வாறு எம்முடன் கலந்துரையாடினார்கள். இதன்போது சில கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.
1. பெரிய வாணர் (அம்பலவாணர்) சிலை அமைத்தல்
2. மர நடுகை செய்கின்றதோடு தண்ணீர் வசதி
3. பேருந்து தரிப்பு நிலையம்
4. குடிநீருக்கான ஓரளவு தீர்வு
5. சிறுவர் பூங்கா போன்றவை கேட்கப்பட்டதுடன், இரு தரப்பினருக்கும் வாழ்த்தும், நன்றியும் கூறி இக்கலந்துரையாடல் 6.30மணிக்கு நிறைவு பெற்றது.

இதில் பிரான்ஸ் ஒன்றிய செயலாளர் திரு.சு.சஸ்பாநிதி அவர்களினால் தமது ஒன்றியத்தின் செயற்பாடுகளாக “புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கு சுற்றுமதில் கட்ட உள்ளது தொடர்பாக விளங்கப்படுத்தப்பட்டதுடன், உவர்நீரை நன்னீர் ஆக்கும் விடயம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப் பட்டது.

அதேபோல் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய உபதலைவர் சுவிஸ்ரஞ்சன் அவர்களினால் “வெளிநாட்டில் வாழும் புங்குடுதீவு மக்கள்” பல சிரமங்கள், கஸ்ரங்களுக்கு மத்தியிலேயே தமது பங்களிப்புகளை செய்து வருகின்றார்கள். ஆகவே, அவர்களின் பங்களிப்புக்கு மதிப்பளிப்பு அளிக்கும் வகையில் புங்குடுதீவில் உள்ள மாணவ, மாணவிகள் படிப்பறிவில் சிறந்து விளங்க வேண்டும் எனவும்; வெளிநாட்டு ஒன்றியங்களின் பங்களிப்பில் உருவாகும் திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும், தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தோடர்ந்து எதிர்வரும் 31ம் திகதி – (31.08.2014)காலை 09.00 மணி முதல்- மீண்டும், இருதரப்பினரும் கூடுவதெனவும், இதற்கென பன்னிரெண்டு வட்டாரங்களையும் உள்ளடக்கிய செயற்குழுவொன்றை புங்குடுதீவில் நியமிப்பது எனவும் தீர்மானிக்கப் பட்டது. (இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், வெளிநாட்டில் இருந்து கலந்து கொள்ள விரும்புவோர், தத்தமது நாட்டில் உள்ள “புங்குடுதீவு ஒன்றிய நிர்வாகசபையின்” அனுமதியுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

இதில் புங்குடுதீவில் உள்ள அனைத்து மக்களும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி எமது “புங்குடுதீவின் மண்ணுக்கும், மக்களுக்குமான அபிவிருத்தி செயற்பாட்டுக்கு” தோள் கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி..!

******************************

தகவல் & படங்கள் உதவி…
திரு.சின்னதுரை லியோ ஆம்ஸ்ரோங்
பங்குத் தந்தை -புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயம்.

தகவல்…
சுவிஸ்ரஞ்சன்
ஊடகப் பொறுப்பாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிஸ்லாந்து.

104354

104355

104356

104357

104358

104359

104360

104361

104362

104363

104364

104365

104366

104367

104368

104369

104370

104371

104372

104373

104374

104375

104376

104377

104378

104379

104380

104381

104382

104383

104384

104385

104386

104387

104388

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: