Home / இன்றைய செய்திகள் / பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு!!

பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு!!

விடை பெறவிருக்கும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சையிட் மக்சுமுல் ஹக்கீம், கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இலங்கையின் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சையிட் மக்சுமுல் ஹக்கீம், அவரது பதவிக் காலத்தின் நிறைவை முன்னிட்டு கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

அவரது பதவிக் காலத்தில் இலங்கை கடற்படைக்கு அளித்த ஒத்துழைப்புக்காக, பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகருக்கு நன்றியைத் தெரிவித்த கடற்படைத் தளபதி, அவரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கு நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: