Home / இன்றைய செய்திகள் / பகிடிவதைக்கு எவ்வித தளர்வுகளும் இல்லை!!

பகிடிவதைக்கு எவ்வித தளர்வுகளும் இல்லை!!

பகிடிவதை தொடர்பில் செயற்படும் போது எவ்வித தளர்வுகளும் இல்லாத கொள்ளையொன்றை கடைபிடிப்பதன் முக்கித்துவம் குறித்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பகிடிவதை தொடர்பில் விசேட அவதானத்தினை செலுத்தி அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்ததாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, புதிய உலகத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை உருவாக்குதல், வேலை வாய்ப்புகளை மேம்படுத்த மொழி பயிற்சி திட்டங்களை நடத்துதல், தொழில் ஆலோசனைக்கு முறையான ஏற்பாடுகளை நிறுவுதல் மற்றும் பல்கலைக்கழக அமைப்பிற்கு வௌியே உள்ளவர்களை பல்கலைகழக நிர்வாக சபைக்கு மற்றும் ஏனைய சபைகளுக்கு நியமிக்கும் போது கருத்திற் கொள்ள வேண்டிய தேர்வளவு குறித்த இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகளையும் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளையும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் தேசிய கல்வியல் கல்லூரிகளின் பீடாதிபதிகளுடன் தனித்தனியாக அமைச்சரால் இந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: