Home / இன்றைய செய்திகள் / நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

நேற்றைய தினம் இலங்கையில் புதிதாக 10 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3101 ஆக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 2 பேர், குவைட்டில் இருந்து வருகை தந்த இருவர், கட்டார் இருந்து வந்த ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த 5 பேரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 4 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் பூரணமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2883 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 206 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: