Home / இன்றைய செய்திகள் / தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை!!

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை!!

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதி மாலை 4 மணிக்குள் மாவட்ட செயலாளர்களிடம் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சகல உறுதிப்படுத்தும் அதிகாரிகளையும் கேட்டுள்ளார்.

இன்று (23) பிற்பகல் அறிக்கை ஒன்றை விடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உறுதிப்படுத்தும் அதிகாரிகளிடம் கிடைத்துள்ள சகல விண்ணப்பங்களையும் மேற்குறித்த காலத்தில் மாவட்ட செயலாளர்களிடம் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுள்ளார்.

அதேபோல் தபால்மா அதிபருக்கு கிடைத்துள்ள தபால் வாக்கு விண்ணப்பங்களை எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் ஒப்படைக்க தபால்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் அரசியல் யாப்பு ரீதியான பிரச்சினை தொடர்பில் இன்று (23) இடம்பெற்ற பல்வேறு ஊடகச் சந்திப்புகளில் அரசியல் கட்சி உறுப்பினர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: