Home / இன்றைய செய்திகள் / சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்புவதற்கு விசேட போக்குவரத்து சேவைகள்!!

சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்புவதற்கு விசேட போக்குவரத்து சேவைகள்!!

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் மேலதிக பஸ்கள்; சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இன்றும் – நாளையும் இந்த விசேட போக்குவரத்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கை ரயில்வே திணைக்களமும் விசேட ரெயில் சேவைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: