Home / இன்றைய செய்திகள் / சென்னையில் இருந்து வந்த நால்வருக்கு கொரோனா!!

சென்னையில் இருந்து வந்த நால்வருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2768 ஆக அதிகரித்துள்ளது.

​சென்னையில் இருந்து வந்த நால்வருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 2013 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய நிலையில் 654 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: