Home / இன்றைய செய்திகள் / சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் ஊரதீவுப் பிரதேசத்தில் உள்ள “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, நேற்றையதினம் (13.07.2018) ஆரம்பமாகி உள்ளது. மேற்படி “மடத்துவெளி பொதுக்கிணற்றை” மீள்புனரமைக்கும் செலவில் பாதியை (அரைவாசியை) சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த ஆறு பேர் பொறுப்பெடுத்து, மிகுதியை “சுவிஸ் ஒன்றியம்” ஏற்று இந்நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது.

ஒன்றிய தலைமையின் வேன்டுகோளை ஏற்று மடத்துவெளி பொதுக்கிணற்று திருத்தல் பணிக்காக எமது 7ம்; 8ம் வட்டாரம் உறவுகள் ஆறு பேரான.. 1.திரு.கந்தையா கணேசராசா -சூரிச், 2.இராசமாணிக்கம் இரவீந்திரன் -சூரிச், 3.சுப்பிரமணியம் சண்முகநாதன் -சூரிச், 4.விஸ்வலிங்கம் அரிசந்திரதேவன் -ஆராவு, 5.அருணாசலம் திகில்அழகன் -பேர்ன், 6.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) -பேர்ன், ஆகியோர் தலா முந்நூறு சுவிஸ் பிராங் வீதம் பங்களிப்பு செய்ய, மிகுதித் தொகையை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” பொறுப்பெடுத்து, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” இந்த கிணற்று வேலை ஆரம்பமாகி உள்ளது.

மேற்படி உதவி புரிந்த அப்பிரதேசத்தை சேர்ந்த இந்த ஆறு பேரும், “எமது பெயர்களை பகிங்கப்படுத்த வேண்டாம், நாம் அந்த பிரதேசத்தில் பிறந்து, தவழ்ந்து வளர்ந்தவர்கள், ஆகவே இதனை செய்ய வேண்டியது எமது கடமை” எனத் தெரிவித்த போதிலும்..,

“ஒன்றியம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு, அந்தந்த பிரதேச மக்களும் உதவி புரிந்தால் மட்டுமே “ஒன்றியத்தின் செயல்பாடு” இலகுவாக இருக்கும் என்பதையும், அதேவேளை இந்த விடயங்களை பகிரங்கத்தில் அறிவிப்பதன் மூலமே, ஏனைய அனைத்து வட்டார உறவுகள் தாமாகவே முன்வந்து சிலவிடயங்களை செய்ய முடியும் என்பதை” புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் “நிர்வாக சபையின்” சார்பில் விளங்கப்படுத்தி கூறியதை அடுத்து அவர்களின் பெயர்களையும் பகிரங்கத்தில் வெளியிட்டு உள்ளோம்.

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் சார்பில் பொருளாளர் திரு. கைலாசநாதன் (குழந்தை) விடுத்த வேன்டுகோள்களை ஏற்று, எவ்வித மறுப்பும் சொல்லாமல் உதவி செய்த சுவிஸ் வாழ் ஊரதீவு, மடத்துவெளியை சேர்ந்த ஆறு நண்பர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் எமது நன்றிகள் பல..

நேற்றையதினம் ஆரம்பமாகிய, புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலைத்திட்டம் நிகழ்வில், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான “சமூக சேவகி” திருமதி.த.சுலோசனாம்பிகை ஆகியோர் முன்னிலை வகிக்க, திரு வனோஜன் தலைமையிலான அவர்களின் கட்டிட தொழிலாளர்கள் குழுவினரால் வேலைகள் ஆரம்பமாகி உள்ளது.

இதேவேளை மேற்படி கிணற்றுவேலை நான்கு வருடங்களுக்கு முன்னரே சுவிஸ் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட போது, தனிப்பட்ட அமைப்பு ஒன்றினால் தாம் செய்யவுள்ளதாக தெரிவித்ததை அடுத்து நாம் இத்திட்டத்தை கைவிட்டு இருந்தோம், ஆயினும் அவர்களினால் மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில், சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த பலரும் குறிப்பாக ஒன்றிய பொருளாளரினால் எழுத்துமூலம் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து..,

இதுவோர் “பொதுத்தேவை” என்ற போதிலும், ஒன்றியத்தின் நிதியை தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பெருமளவில் செலவழிப்பது விமர்சனத்தை ஏற்படுத்தும் என்பதை “ஒன்றியத் தலைவரினால்” தெளிவுபடுத்தியவுடன், அதே இடத்தை சேர்ந்த, சுவிஸில் வதியும் ஆறு குடும்பத்தினர் பாதி செலவை தந்து, இந்த நடவடிக்கையை “சுவிஸ் ஒன்றியத்தினால்” முன்னெடுத்து உள்ளோம்.

மேலும் மேற்படிக் கிணறு “மண்திட்டு” அமைந்துள்ள பகுதியில் காணப்படுவதால் பெருமளவு செலவையும், சிரமத்தையும் எதிர்நோக்கி உள்ள போதிலும் இவ்வேலைத் திட்டத்தை மிகவிரைவில் வெற்றிகரமாக முடிப்பதுக்கு திடசங்கற்பம் பூண்டு செயற்பட்டு வருகிறோம்.

ஏனெனில் அக்கிணற்றின் மண்களையும், கற்களையும் இயந்திரம் கொண்டு தொடர்ந்து இருநாட்களாக வெளியேற்றிய போதிலும், தொடர்ந்து மண்கள், கற்கள் சரிந்து கிணறானது குளம் போல் காட்சி தருகிற போதிலும், மீள்புனரமைப்பு வேலை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

(குறிப்பு: “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினரால்” அண்மையில் நடாத்தப்பட்ட “வேரும் விழுதும்” விழாவுக்கு பிரதம விருந்தினராக வருகை தந்து இருந்த, வடக்கு மாகாணசபை உறுப்பினரும், யாழ். தீவுப்பகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைப்பாளருமான என்.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் பல கோரிக்கைகளை முன்வைத்து இருந்தோம். இவற்றில் சிலவற்றை நிறைவேற்ற தீர்மானித்து, கடிதம் அனுப்பி உள்ளார். மிகவிரைவில் இதுகுறித்த விபரங்களை அரிய தருகிறோம்) நன்றி..

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
14.07.2018

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு….! (படங்கள் & வீடியோ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: