Home / இன்றைய செய்திகள் / சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கான கேட்போர் கூடமொன்றை நிர்மாணித்தல் !!

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கான கேட்போர் கூடமொன்றை நிர்மாணித்தல் !!

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கான கேட்போர் கூடமொன்றை நிர்மாணித்தல் மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்தல் குறித்த திட்ட வழிநடத்தல் குழு, பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் திரு.வினோத் கே ஜேக்கப் தலைமையில் 2020 செப்டெம்பர் 02 ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் ஒன்று கூடியது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம், கல்வி அமைச்சு, நிதி அமைச்சின் கீழான வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், கட்டட திணைக்கள திட்ட ஆலோசகர் மற்றும் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த திட்டத்தினை துரிதப்படுத்துவதற்கு திட்ட வழிநடத்தல் குழு தீர்மானித்ததுடன் இலங்கை முழுவதிலும் இந்திய அரசாங்கத்தினால் மக்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் ஓர் அங்கமாக குறித்த திட்டம் காணப்படுவதுடன் 275 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியுடன் உயர் பெறுபேற்றைக்கொண்ட சமூக அபிவிருத்தி திட்டம் (HICDP) என்ற அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 517 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான ஒட்டுமொத்த திட்டங்களில் 92 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான திட்டங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: