Home / இன்றைய செய்திகள் / சுற்றிவளைப்பில் 1662 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது!!

சுற்றிவளைப்பில் 1662 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது!!

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றம் சம்பவங்களுடன் தொடர்புடைய 1662 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களில் 696 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் 748 பேர் போதைப்பொருட்களுடனும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 91 பேர் குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: